I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: பிணிதீர்க்கும் யோகசிகிட்சை

Tuesday, 20 June 2017

பிணிதீர்க்கும் யோகசிகிட்சை

*உயிர் மீட்கும் மருத்துவம்*

31.யோகாவும் யோக மருத்துவமும்

" எத்தனையோ மகான்கள் இந்தப் புண்ய பூமியில்
எவ்வளவோ ஞானங்கள் இந்தப் புண்ய பூமியில்
எத்தனையோ அறங்கள் இப்புண்ய பூமியில் எவ்வளவோ
மேன்மக்கள் இப்புண்ய பூமியில்
எத்தனையோ கலைகள் இப்புண்ய பூமியில்
எவ்வளவோ கலைஞர்கள் இப்புண்ய பூமியில்
எத்தனையோ தர்மங்கள் இப்புண்ய பூமியில்
எவ்வளவோ தர்மவான்கள் இப்புண்ய பூமியில்
அத்தனையையும் போற்றுவோம்.!
அவ்வளவையும் பாதுகாப்போம்.!"

இன்று மூன்றாவது ஆண்டாக  <21/06/2017> சர்வதேச  யோகாதினம்  உலகம் முழுவதும் பரபரப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது.!
உலகம் முழுவதும் 200 கோடி மக்களின் வாழ்வியல் முறையாக யோகா இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.!
தமிழ் முனிவர் பதஞ்சலியால் கண்டறியப்பட்ட இந்த கலையின் மூலமான பதஞ்சலி யோக சூத்திரம்  சமஸ்கிருதத்தில் தான் வெளியிடப் பட்டுள்ளது.! அதுவே தமிழகம் தாண்டி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் யோகம் வளர காரணமாகி விட்டது.!
பதஞ்சலிக்குப் பிறகு நாதமுனி,திருமூலர், விவேகானந்தர்,பரஞ்சோதி மகான்,சத்யானந்தா சரஸ்வதி, சிவானந்தா, கிருஷ்ணமாச்சார்யா, டேவிட் ரூஸ்,  பெங்களூர் சுந்தரம், வேதாத்ரி மகரிசி, பி.கே.எஸ். அய்யங்கார், ஆசனா ஆண்டியப்பன்,டாக்டர் அசோக்குமார், அடியேன் ஏகப்பிரியன் இஸ்மாயில்  போன்ற பலரும் யோகா என்றால் என்ன,அதை ஏன் செய்ய வேண்டும், அதனால் பயனடைந்தவர்களின் பட்டியல்  என்று பல்வேறு தகவல் களை உள்ளடக்கி பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர்.!
இது தவிர யோகா என்ற பெயரில் ஓசோ முதல் பல நவீன சாமியார்களின் பெயரிலும் பல நூல்கள் கடையில் கிடைக்கிறது.!
யோகாவை ஒரு மருத்துவ முறையாக பிரபலப்படுத்தியவர் பெங்களூர் சுந்தரம் அய்யாதான் உடல் பருமன்,காசநோய்,இதய பலவீனம், இரத்த அழுத்தம்,ஆஸ்துமா, குழந்தையின்மை, பக்கவாதம்,சக்கரை என்று பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா மற்றும் உணவை முறையாக கடைப்பிடிக்க வழிகட்டி பலரின் ஆரோக்கியக் குறைபாடுகளைப் போக்கி நல்வாழ்வளித்தார்.!
தமிழர் கலையான யோகாவின் பல அறிய நூல்கள் ஆங்கில மொழியிலேயே கிடைக்கிறது.! யோகா உலகம் முழுவதும் பிரபலமடைய இதுவும் ஒரு காரணமாக இருந்தது.!
சில ஆண்டுகளுக்கு முன் யோகாசனம் மூச்சுப்பயிற்சி செய்ததால் சில வெளிநாட்டவருக்கு உடலில் ஏற்பட்ட பாதிப்பை மையப்படுத்தி யாரும் யோகா செய்யாதீர்கள். என்று; ஒருவர் நூல் எழுதி பிரபலமானர்.!
ஆனால், அவரின் ஆசை நிறைவேற வில்லை.! அதன்பிறகு யோகா மேலும் பிரபலமாகியது.! எந்த ஒரு விசயத்தையும் தவறாக செய்தால் சில பாதிப்புகள்  வர வாய்ப்புண்டு. உதாரணமாக வாகனம் ஓட்டும் போது சிலருக்கு விபத்து ஏற்படுகிறது. அதனால் யாரும் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள் தனமோ அது போன்ற ஒரு முட்டாள் தனம் தான் யாரும் யோகா செய்ய வேண்டாம்.! என்று நூல் எழுதியதும்.! உடலானாலும் மனதானாலும் அதை வளைத்து வசப்படுத்தி காரியம் சாதிக்க பல மாதங்கள் பொறுமையாக மெனக்கெட வேண்டும் அதைவிடுத்து அவசரமாக உடலை திருகி நீட்ட முயன்றால் விபரீதம் ஏற்படலாம்.!
அது யோகாவின் குற்றமல்ல அந்த சூட்சுமத்தை உணர்த்தாத, உணராத மனிதர்களின் குற்றம்.!
இதுவரை நானும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர்களுக்கு மேல் பயிற்சி அளித்துள்ளேன்.! தினமும் 2 மணி நேரம்
பயிற்சி செய்கிறேன், முதல் யோகா தினத்தன்று 32 நிமிடம் தொடர்ந்து தலைகீழாக நின்று கொண்டே யோகா வகுப்பெடுத்தேன், 3 வயது குழந்தை முதல் படுக்கையில் உள்ள 85 வயது பக்க வாத நோயாளி வரை பலருக்கும் பயிற்சி அளித்துள்ளேன்.!
அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தியத்தை இதன் மூலம் வழங்கி உள்ளேன்.! சில முற்றிய, அனைத்து மருத்துவர்களாலும் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட சில எளிய நுட்பங்களோடு உணவு முறையையும் கடைப்பிடித்து தங்களை ஆரோக்கியப் படுத்திக் கொள்ள நானும் ஒரு கருவியாக
இருந்துள்ளேன்.! என்பதை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.!
உலக இயற்கை மருத்துவ முறைகளின் தாய் என்று யோகக்கலையை கூறலாம்.! ஏனெனில் உடலை சுத்திகரிக்கும் கிரியைப் பயிற்சிகள், ஆரோக்கியத்தை அளிக்கும் மூலிகை ஞானம்,ஆன்மாவை உணர்த்தும் தியானம், உடலை வளைக்கும் ஆசனம்,  நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் பிராணாயாமம், நம்பிக்கையை வளர்க்கும் பிராத்தனை, உடல் ஒலியை சீராக்கும் மந்திரம் போன்ற இயற்கையோடு இயைந்த வாழ்வியல் பயிற்சி முறைகள் மற்ற மருத்துவ முறைகளில் உள்ளதை விட நூறு மடங்கு அதிகமாக யோகாவில் உள்ளது.!
அதுபோலவே இதே காரணத்தை கொண்டு  அனைத்து கலைகளிலும் யோகமே சிறந்தது என்று நம்மால் மகிழ்ச்சியாக கூற முடியும்.! இன்றைக்கும் யோகத்தால் எளிய முறையில் குணப்படுத்தக் கூடிய பல நோயாளிகள் மருந்து,மாத்திரை என்று அல்லாடுவதைப் பார்க்கும் போது அவர்கள் மூன்னோர்களின்
சாபத்தை பெற்றவர்கள் என்பதை
உணர முடிகிறது.!
நமக்கு வந்த உடல்,மன நோய்களை களைய யோகாவை நோக்கி நம்மை ஈர்த்துச் சென்றது மூன்னோர்களான யோகிகள்,சித்தர்களின் ஆசி என்பதை
நினைக்கும் போது மனது பரவசம் கொள்கிறது.! கண்களில் ஆனந்தநீர் வழிகிறது.!
யாம் பெற்ற நலம் இவ்வையகம் பெறுக என்று யோக கலையை மேலும் கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்க முனைந்துள்ள பலரில் நாமும் ஒருவராக இருக்கிறோம்.! என்பதில் ஒரு பெரிய நிறைவு இருக்கிறது.!
நலம் பெருகட்டும் …
அந்த நிறைவை மேலும் அதிகப்படுத்தும் விதமாக
சமீபத்தில் < ஜூன் 17,18> யோகா ஆசிரியர்  கோபிநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் திருப்பூர் செரீப் காலணியில்  நடந்த  இரண்டு நாள் யோகசிகிட்சை  முகாம் அமைந்தது.!
திருப்பூர் உண்மையிலேயே திருப்பம் தந்த ஊர்தான் நாளெல்லாம் நமது நாகர்கோவில் மையத்தில் இருந்தாலும் ஆலோசனைக்கு நாலு பேருக்கு மேல வரமாட்டார்கள்.!
ஆனால்,திருப்பூரில் முதல் நாள் நடு இரவு வரை மக்கள் ஆர்வமாக தங்களுக்கான தீர்வுகளைத் தேடி வந்த வண்ணமிருந்தனர்.!
அது மனதிற்கு புதிய உற்சாகத்தையும் எழுச்சியையும் வழங்கியது.! ஒவ்வெரு வரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கான யோக நுட்பங்கள்,உணவு முறை,தவிர்க்க வேண்டிய உணவுகள்
உபயோகப்படுத்த வேண்டிய மூலிகைகள் போன்றவற்றை
கற்பித்து ஒரு எழுத்துத் தட்டில்
எழுதி கொடுத்தது இரவெல்லாம்  எனது
மனதிலும் எதிரொலித்தது.!
ஏனெனில் இதுவே யோக சிகிட்சையை முறைப்படுத்திய பெங்களூர் சுந்தரம் அய்யா, கிருஷ்ணமாச்சார்யாபோன்ற பல யோகிகளின் கனவாய் இருந்தது.! அது எனக்கு திருப்பூரில் நனவானது.! மக்கள் பிணி தீர்க்கும் கலையாக யோகா உலகெலாம் கொடிகட்டிப் பறக்கும்.! அதற்கான வாய்ப்புகள் மட்டும் வழங்கப்பட  வேண்டும் என்பதே முன்னோர்களின் வேண்டுகோளாகும்.!
அது நடந்தே விட்டது.!
ஒரு யோக சிகிட்சையாளன்
தனது பிராண சக்தியை வழங்கி
பிற உயிரை ஆரோக்கியப்படுத்துவதையும் அதற்கு பகரமாக வெறெந்த மருத்துவரை விடவும் அதிகமான ஊதியம் பெறுவதையும் யோக சிகிட்சை திருப்பூரில் நடத்தி காட்டியது.!
இதில் அதிசயம் என்னவென்றால் … முதல் நாள் கருத்து வேறுபாடு காரணமாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு  வந்த   ஒரு தம்பதியினர் ஆலோசனைக்கு நம்மை காண வந்திருந்தனர் நாம் கூறிய யோக நுட்பங்களை பயன்படுத்தி அன்றிரவே நன்றாக தூங்கியதோடு,ஆகா அருமை என்று வியந்து
அடுத்த நாள் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.!
அதுபோலவே சொரியாஸிஸ் நோயால் பதிக்கப்பட்டு யோகா, இயற்கை உணவு,மூலிகை மருந்தால் முற்றிலும் குணமடைந்த  ருக்மாங்கதன் என்ற நண்பர் தனது உடலில் இருந்த சில அடையாளங்களையும் தனது பழைய படங்களையும் காட்டி  தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்ததோடு எங்கள் ஊரில் எங்கு யோகா & இயற்கை முகாம் நடந்தாலும் உடனே கலந்து கொள்வேன் அய்யா, எனது நோயைப்போக்கிய கலைக்கு இதை ஒரு நன்றி கடனாக தொடர்ந்து செய்கிறேன்.! என்றபோது உண்மையிலேயே மிகப் பெருமையாக உணர்ந்தேன்.!
அதுபோலவே  நண்பர் கோபிநாதனிடம் யோகம் பயின்று எனது மூட்டு அறுவை சிகிட்சையை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்கிறேன் முதலில் எல்லாம் என்னால் நடக்கவே முடியாது சிரமப்பட்டேன்.! இப்பொழுது  சோலை யோக  சுவாமிகள் வடிவமைத்த சுபச்சூர்யா யோகப் பயிற்சியால் நன்றாக நடக்கிறேன்.! அதன் சூட்சுமம் என்ன என்று அவர் என்னைக் கேட்டபோது எல்லாப் புகழும் இறைநிலைக்கும் அதை வடிவமைத்த சுவாமிகளுக்கும் தான்.! அது ஒரு முழுமையான பயிற்சியாய் பிராத்தனை, நன்றி கூறுதல், ஆசனம்,மூச்சுப்பயிற்சி,  கிரியா, மன ஒருமை போன்ற அனைத்தும் சேர்ந்ததாய் விளங்குகிறது.  என்றேன்;இதில் ஆச்சரியம் என்னவென்றால்  அதன் பிறகு யோகா வகுப்பெடுக்க தனது இடத்தை வாடகையே வாங்காமல் நண்பர் கோபிநாதனுக்கு வழங்கி உள்ளார் இவர்.!
இந்த திருப்பூர் பயணத்தில் இன்னொரு முக்கிய விசயம் என்னவெனில் நமது நீண்டநாள் நண்பரான யோக குமரன் அவர்களும் திருப்பூரில்தான் யோக மையம் வைத்துள்ளார்.!
நமது வகுப்பு முடிந்து ஊருக்கு வருவதற்கு முன்  அங்கு அழைத்துச்சென்ற  நண்பர் பல மாதங்களாக கழுத்துவலியால் அவதிப்பட்டு கழுத்து உறை மாட்டியிருந்த நண்பர் ஒருவர் பிறகு யோகாவின் மூலம் மீண்டதை கூறி அவரை அறிமுகப்படுத்தி மேலும் ஒரு நல்ல தகவலை கூறியதோடு முன்பு  கழுத்துவலி இருந்த நண்பருக்கு இருக்கும் வேறு ஒரு நோய்க்கு கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகளை கேட்டறிந்து கொண்டு கொஞ்சம்  பனியன்களையும் டீ சர்ட்டுகளையும் பரிசளித்தார்.! விடைபெற முனைந்த போது மேலும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து " உங்கள் யோக சேவைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் "என்று கூறியதும் தான்; ஓ.!
நாம் யோகாவை சேவையாகவும் செய்பவர் என்ற நினைவு வந்தது.!
திருப்பூர் வந்ததில் இருந்து அது மறந்து போயிருந்தது.!
யோக குமாரன் அடியேன் கிளம்பும் போது சரியாக அதனை நினைவுப்படுத்தியதோடு தனது குருநாதர் கோடி சுவாமிகள் ஜனன நிகழ்வில் கலந்து கொள்ள மீண்டும்  திருப்பூர் வர வேண்டும் என்ற அன்பு வேண்டுகோளையும்
வைத்தார்.!
மகிழ்வாய் வருவதாய் கூறி விடைப்பெற்றேன்.!

" எத்தனையோ மகான்கள் இந்தப் புண்ய பூமியில் எவ்வளவோ ஞானங்கள்
இந்தப் புண்ய பூமியில்
எத்தனையோ அறங்கள் இப்புண்ய பூமியில்
எவ்வளவோ மேன் மக்கள் இப்புண்ய பூமியில் 
எத்தனையோ கலைகள் இப்புண்ய பூமியில்
எவ்வளவோ கலைஞர்கள் இப்புண்ய பூமியில்
எத்தனையோ தர்மங்கள் இப்புண்ய பூமியில்
எவ்வளவோ தர்மவான்கள் இப்புண்ய பூமியில்
அத்தனையையும் போற்றுவோம்.!
அவ்வளவையும்
பாதுகாப்போம்.! "

*இனிய யோகா தின நல்வாழ்த்துகள்*

-ஏகப்பிரியன் மு.இஸ்மாயில் D.Y.T

தொடரும்  …

🍁100% இயற்கை மூலிகை🌿
தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
9629368389

http://aumherbals.blogspot.in
amyogatrust.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...