- உடல் பருமன் தொப்பை குறைய
இரண்டு கிலோ அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் ஓமத்தை பொடி செஞ்சு அதில் போட்டு நல்லா கிளறி இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு …
நீர் ஒரு லிட்டர் அளவிற்கு வற்றியதும் ஆறவைத்து அதைப் பிழிஞ்சு சாறு எடுத்து அதோடு அதே அளவு சுத்தமான தேன் கலந்து மண்பானை அல்லது குளிர்ப்பெட்டியில் வைத்துக்கொண்டு …
தினமும் 50 மில்லி கலவையுடன் 50 மில்லி நீர் சேர்த்து காலையில் உணவிற்கு ஒருமணி நேரம் முன்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் 40 நாளில் தொப்பை உடல் பருமன் கரைந்து சிக்கென காட்சியளிக்கலாம்.
அன்னாசி பித்தக் கோளாறுகளான மயக்கம்,தலைச்சுற்றல்,அதிக தாகம் போன்றவற்றையும் விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து மிக அதிகம், இதனால் மலச்சிக்கல் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவையும் ஏற்படாமல் இருக்கும்.
*ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்*
www.aumherbals.com
No comments:
Post a Comment