அதிமதுரம் 250 கிராம் ஆடாதோடை
இலை 250 கிராம் இது இரண்டையும்
சேர்த்து பொடித்து வைத்துக்கொண்டு
காலை,இரவு உணவிற்கு பின்
ஒருத்தேக்கரண்டி பொடியை
தேனில் குழைத்து தின்றுவர நெஞ்சிச்சளி,இழுப்பு,வாய்ப்புண்,
வயிற்றுப்புண்,தொண்டைக்கட்டு,
மூக்கடைப்பு,குரல்கம்மல்
குணமாகும்.!இவ்வாறு 12
முதல் 48 நாட்கள்
செய்ய வேண்டும்.
ஒரு வெற்றிலை,பத்து நல்லமிளகு
இவற்றை மென்று சாப்பிட்டு அரைடம்ளர்
சுடுநீர் அருந்த மூன்று வேளை மருந்தில்
தேள்கடி,பூரான்கடி விசம் அகலும்
கடிவாயில் சிறிது மஞ்சள் தூளில்
கொஞ்சுண்டு சுண்ணாம்பு
நீரில் குழைத்து பூச வேண்டும்.!
பத்து துளசி இலை ஐந்து குறுமிளகு
இவற்றை மென்று உணவிற்கு பின்
சாப்பிட தலைவலி, உடல் அயர்ச்சி
நொடியில் மறையும்.!
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
No comments:
Post a Comment