தீபாவளி_லேகியம்
செய்வதெப்படி?
1. சுக்கு - 50 கிராம்
2. சித்தரத்தை - 50 கிராம்
3. கண்டதிப்பலி - 25 கிராம்
4. அரிசி திப்பிலி - 5 கிராம்
5. ஓமம் - 100 கிராம்
6. கொத்துமல்லி விதை - 50 கிராம்
7. மிளகு - 50 கிராம்
8. கிராம்பு - 20 கிராம்
9. ஜாதி பத்திரி - 10 கிராம்
10. விரளி மஞ்சள் * 10 கிராம்
11. வெல்லம் - 250 கிராம்
12. நெய் - 200 கிராம்
13. தேன் - 100 கிராம்
செய்முறை
ஒரு வாணலியில் மிதமான சூட்டில் சுக்கு, சித்தரத்தை, கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, ஓமம், பரங்கி சக்கை, மிளகு, கிராம்பு, விரளி மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்தெடுத்துக் கொள்ளவும். சூடு ஆறிய பிறகு எல்லாவற்றையும் சேர்த்து உரல் அல்லது மிக்ஸியில் பொடிதாக பொடித்து சலித்துக்கொள்ளவும்.
அடுப்பில் சட்டியை வைத்து வெல்லத்தை சிறிது நீர்விட்டு பாகாக காய்ச்சி வைத்துக்கொள்ளவும். பொடித்த சரக்குகளை வேறு ஒரு இரும்புச்சட்டியில் போட்டு வெல்லக்கரைசல்,தேன், நெய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றி அடி பிடிக்காமல் கிளறி வரவும் ஒரு அரைமணி நேரத்தில் அனைத்தும் திரண்டு லேகிய பக்குவத்திற்கு வந்ததும் இறக்கி சூடு ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து உணவிற்கு பின் காலை,மதியம் சாப்பிட்டு சிறிது சுடுநீர் அருந்திவர அஜீரணக்கோளாறு,உப்புசம்,ஏப்பம்
,வாய்வுப்பிடிப்பு நீங்கும்.
குறிப்பு: எவ்வளவு சுவையான பலகாரமாய் இருந்தாலும் முக்கால் வயிற்றுக்கு மேல் உண்பது பாதுகாப்பானது இல்லை. www.aumherbals.com
No comments:
Post a Comment