வெள்ளை நோய் ,உடல்சூடு,கண்
எரிச்சல் குணமாக
பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டி அளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரண்டு நாள் இரவு முழுவதும் வைத்து மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்பட்ட வெள்ளை நோய் குணமாகும்.
குளியலுக்கு….
மூலிகை குளியல் எண்ணெய் தயாரிக்க
சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக்கிலோ எடுத்து ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் தினமும் ஐந்து முதல் 8 மணி நேரம் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான இயற்கை வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சிதரும் எண்ணெய் உடல் எரிச்சல்,பாத எரிச்சல்,உடல் ஊறல்,வெட்டைச்சூடு,ஜனன உறுப்பு நோய்கள் குணமாகும்.!
🥦இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
www.aumherbals.com
Mobile 9629131089
9629368389
No comments:
Post a Comment