நீங்க அதுக்குத்தான் சரிப்பட்டு வருவீங்க போல …
நான் இயற்கை வாழ்வியல் வகுப்பை இலவசமாக எடுத்தாலும் கூட வரமாட்டீங்க?
கட்டண வகுப்பென்றாலோ தொகை அதிகம் என்பீர்கள்.
பல நாள் தவம் செய்து பலநூல் கற்றாய்ந்து நான் எழுதிய நூலையும் வாங்கிப் படிக்கமாட்டீர்கள்.!
பல்வேறு வாழ்வியல் ஆரோக்கிய வழிமுறைகள் பற்றி நான் எழுதிய எனது பதிவுகள் எதையும் முறையாக படித்து சிந்தித்து
கடைப்பிடிக்க மாட்டீர்கள்.
இயற்கை வாழ்வியல்,யோகா பற்றிய விளம்பரங்களை நான் போட்டால்
அதை நீங்கள் வேறு குழுவில்
பகிரகூட மாட்டீர்கள்.
எனது வகுப்புகளுக்கு தொடர்ந்து வருவதற்கும் நான் உங்களை தாங்க வேண்டும் இல்லையா?
எனென்றால்? "பட்டினி கிடந்தால் எல்லா நோய்களும் போய்விடும், கொய்யா தின்றால் புற்றுநோய் வராது, சுவைத்து சாப்பிட்டால் பித்தப்பை கல் கரையும், குண்டலினியை ஏற்றினால் குபேரனாகலாம்,மாட்டுக்கறி தின்றால் சொர்க்கம் கிடைக்கும். போன்ற;எந்த கவர்ச்சிகரமான தத்துவங்களையும் நான் கூறுவதில்லை.
அதனால் மந்திரத்தில் மாங்காய் விழவைப்பேன் என்று கூறும் பலரையும் போற்றிப்புகழ்ந்து விட்டு, என்னிடம் வந்து சளிக்கும் முகப்பருவிற்கும் சடுதியில் மருந்து கூற கேட்கிறீர்கள்.
போங்கய்யா,போய் நோய்களை காட்டி மிரட்டும் புனித மருத்துவனிடம் சென்று மருந்தை வாங்கிக்குடித்து உடலுக்கு விசம் வைத்துக் கொல்லுங்கள். நீங்கள் இயற்கை வாழ்வியலுக்கு சரிப்பட்டு வரமாட்டீர்கள்.
நான் இனி,ஒரே நாளில் ஆண்மை விருத்தியடையலாம், பெண் உடலின் புண்ணிய பகுதிகள்,நாலே மாதத்தில் பிள்ளைப் பெற்றுக்கொள்ளலாம், நோயே தாக்காமல் 200 ஆண்டுகள் வாழலாம் போன்ற
தலைப்புகளோடு உங்களிடம் நெருங்கி வர முயல்கிறேன்.
அதோடு வேண்டுமானால் மதனகாம லேகியமும் விற்றுப் பிழைத்துக் கொள்ளப் பார்க்கிறேன்.!
-ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
(இயற்கையின் தோழன்)
www.aumherbals.com
No comments:
Post a Comment