மனதோடு பேசுகிறேன்
---ஏகப்பிரியன்---
22.இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ்வோம்
ஆராய்ச்சியும் வளர்ச்சியும் நலத்திட்டங்களும், பாதுகாப்பும் மக்களுக்காகவா, அல்லது அரசியல் ஏஜன்டுகளும் வெளிநாட்டு பெருமுதலாளிகளும் மக்களை ஏமாற்றுவதற்காக இந்த வார்த்தைகளை மக்களிடம் பரவ விடுகிறார்களா?
விடை உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெளிவாய் இருக்கிறது. ஆனாலும், 300 ரூபாய் தினக்கூலிக்கு பாரதிய ஜனதா கட்சிக்கும் RSS சிந்தாந்தத்திற்கும் ஆதரவாக முகநூலில் பதிவிடும் பலரும் இதுபோல திட்டங்களை, இதுவரை இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் கொண்டு வந்ததே இல்லை. இதனால் இந்தியா இப்பொழுதே வல்லரசு ஆகிவிட்டது,கடனெல்லாம் அடைந்து விட்டது. என்று பல்வேறு மாயப்பொய்களை மக்களிடம் பரப்புவதை முழு நேர பணியாக வைத்துள்ளனர்.
மேற்கண்ட கட்சியினரும் எடப்பாடி அதிமுகவில் மாட்டிக்கொண்ட பல வட்ட,மாவட்ட கட்சி அடிமைகளும் சேலம் உருக்காலை மூடுதல் முதல் எட்டு வழிச்சாலை வரை அனைத்தையும் வளர்ச்சி என்ற போர்வையில், மறைக்க பிரயத்தனப்படுகிறார்கள்.
ஊழல் உப்பைத்திண்ண ஜெயலலிதா தண்ணீர் குடித்தது போல - நீங்களும் குடித்து விட்டு அந்த அம்மையார் அளவிற்காவது தமிழக நலனுக்கு எதிரான திட்டங்களை எதிருங்கள் பாவிகளே, பாவிகளே.! நீங்கள் தின்ற ஊழல் உப்பிற்கு தமிழகத்தையே நாவறட்சியில் உழல வைப்பது சரியா?
என்று மனம் வெதும்பி கேள்வி கேட்டால் உடனே "திமுக,காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் அவர்களோடு கூட்டணி வைத்த அத்தனை கட்சிகளுக்கும் இதில் பங்கு இருக்கிறது." என்ற உண்மையை ஆளும் தரப்பினர் முன் வைக்கிறார்கள். அவர்கள் செய்யாத நன்மைகளையும் சேர்த்து செய்வீர்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் தானே,மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள்? ஆனால்,துரோகத்திற்கு பிறந்த புண்ணியர்களேநீங்களோ, அவர்கள் விற்காமல் விட்டுச்சென்ற மிச்ச நலங்களையும் கார்ப்பரேட்டுக்கு பட்டா போட்டு கொடுக்குறீர்களே?
மக்களும் அமைப்பு ரீதியில் இருப்பவர்களும் ஒன்றினைந்து செயல்பட்டால் மட்டுமே இன்றைய விற்பனை இந்தியா நிலையில் இருந்து நாம் மீள முடியும்.
ஆனால்,பல்வேறு அழிவுத்திட்டங்களால் நேரடியாக மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள், சிறுகுறு வியாபாரிகள் மீனவர்கள்,அரசு ஊழியர்கள் மட்டுமே தங்கள் கழுத்தை நெறிக்கும் அதிகார கும்பலின் பிடியிலிருந்து விடுபட போராடுகிறார்கள். ஒரு சில மாணவ அமைப்புகள் மற்றும் சில சமூக அமைப்புகளும் இதில் கலந்து கொள்கின்றன. இன்னும் பெரும்பாலான மக்கள் தங்கள் கட்சி அடிமைகளாகவும்,போராடுவதே சமூக விரோத செயல் என்று கூறும்,ஆளும் விற்பனை சக்திகளுக்கு ஆதரவான நடிகனுக்கும், தன் குடும்பத்தையே முறையாக பாதுகாக்கத் தெரியாமல் தோற்றுப்போன நடிகனுக்கும் ஆதரவு தெரிவித்து அவர்கள் வந்து ஆணியை புடுங்குவார்கள். என்று தேவுடு காக்கிறார்கள்.
இன்னும் பல ஜந்துக்கள், மது,மாது, மதம்,சாதி,சூதாட்டம்,நேர்மறை சிந்தனை, ஆன்மீக நாட்டம்,சமூக ஊடக மயக்கம்,செய்தி ஊடக நம்பிக்கை என்று எத்தனையோ பொழுதுப்போக்கில் சிக்கி தனக்கும் தனது சந்ததிக்கும் தேவையான காற்றும் நீரும் இருப்பிடமும் களவாடப்படுவதை உணராமல் அரை மயக்கத்தில் உழல்கிறார்கள்.
நடென்ன செய்தது
எனக்கு,என்று; கேள்விகள் கேட்பது எதற்கு? நீயென்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு.!
நான்,என்ன செய்தேன்?
"அடியேன் எந்த வெளிநாட்டு உணவுப்பொருளையும் இரசாயணப் பொருளையும் வாங்கிப்பயன்படுத்துவது இல்லை.
இதுவரை ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்த, இருக்கின்ற எந்த கட்சியிலும் நான் உறுப்பினர் இல்லை. வெளிநாட்டு மருந்து,மாத்திரை,ஊசி,ஊட்டச்சத்து நச்சுகளை எனக்காகவும் எனது குடும்பத்திற்காகவும் கடந்த பத்து வருடமாக நான் பயன்படுத்தவே இல்லை. இனியும் மயக்க மருந்து இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை வந்தால் கூட அடியேன் அந்த இரசாயண அரக்கனின் தோளில் சாயப் போவதில்லை.
எனக்கும் எனது குடும்பத்திற்கும் தேவையான இயற்கை ஊட்டச்சத்து உணவுகளையும் மூலிகை மருந்துகளையும் நானே தயாரித்துக் கொள்கிறேன்.
மின்சாரம்,பெட்ரோல்,தொலைக்காட்சி,சமூக ஊடகங்களை எனது அடிமையாகவே வைத்துள்ளேன்.!
அடம்பர வசதி வேண்டுமா, இயற்கை காற்று வேண்டுமா?
என்று என்னிடம் கேட்டால் கண்ணில் ஒற்றி இயற்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வேன்.
வெளிநாட்டு ஐடி கம்பெனியில் நிறைய சம்பளத்தில் மேனேஜர் உத்தியோகம்,உள்ளூரில் எளிய விவசாயம் இரண்டில் எது என்றால்;எனக்கு விவசாயமே போதும்.!
என் சந்ததிகளை, எந்த சுயம்சேவக்கும் அமெரிக்க அடிமையாக வாழவைக்க வேண்டாம்.
நாங்கள் கற்கால இந்தியர்களாக இயற்கையோடு இயைந்து, இங்கேயே வாழ்ந்து கொள்கிறோம்.
இந்திய வளங்களை விற்கும் கோமகன்களே, எல்லாம் எனது நன்மைக்கு என்ற பொய்யை இனியும் சொல்லிக் கொண்டு திரியாதீர்கள்.!
எல்லாவற்றையும் வெளிநாடுகளுக்கு விற்று விட்டு அவர்களின் தயவில் இந்தியாவை தொடர்ந்து ஆட்சி செய்ய முயலுகிறோம். என்ற; உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுங்கள்.! அப்படி செய்யாவிட்டாலும் அது எங்களுக்கு தெரியும்.!
இந்த தேசத்தில் இடைத்தரகன்,மோசடி இரசாயண வியாபாரிகள்,இரசாயண மருத்துவர்கள்,மருந்து கம்பெனிகள், திருடன்,நயவஞ்சகன்,கொள்ளைக்காரன்,கொலைகாரன்,சாதிமத அடிமைகள், ஊழல் அரசியல் வாதிகள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக ஒருவருக்கொருவர் உதவி செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால், ஒவ்வெரு ஊரிலுமுள்ள நல்ல மனிதர்களும், இயற்கை ஆர்வலர்களும், உண்மையை பேசுபவர்களும் ஆளுக்கொருப் பக்கம் தனித்தனியே பயணிக்கிறார்கள்.
இதோ,என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன்.!
இருபதாயிரம் பேருக்கு மேல் யோகா & இயற்கை வாழ்வியல் முறைகளை கற்றுக் கொடுத்துள்ளேன். மஹாயோகா,இயற்கை வழிகாட்டி, ஆதிமருத்துவம் போன்ற நூல்களையும் எழுதி உள்ளேன்.
எனது நூலிலேயே இருபதிற்கும் மேற்பட்ட இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.ஆனால் இதுவரை, "இந்த இயற்கை ஆர்வலர் உங்களைப் பற்றி சொன்னார்." என்று;என்னைத் தேடி யாரும் வந்ததில்லை.
இவ்வளவும் ஏன், நான் இலவசமாக விளம்பர படுத்திய இயற்கை பயிற்சியாளர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நான் எழுதிய ஆதிமருத்துவம் நூலை கூட வாங்கிப் படிக்கவில்லை.
"ஆதிமருத்துவம் நூலை கிட்டத்தட்ட அறுபது அத்தியாயங்களாக நான் எழுதி வெளியிட்ட, இருநூறு உறுப்பினர்கள் கொண்ட எனது இயற்கை இரகசியம் குழுவில் வெறும் இருபது பேர்கள் மட்டுமே, இதுவரை இந்த நூலை வாங்கி பயன்படுத்தி உள்ளனர். 360 ரூபாய் விலை அதிகம்,நீங்கள் சிலை பக்கத்தில் இருப்பது ஷிர்க்,இதை தான்; நான் தொடராக படித்து விட்டேனே, bdf இருந்தால் நல்லது, நீங்க மருத்துவர் இல்லையே,எனக்கு படிக்க நேரமில்லை. போன்று எத்தனையோ காரணங்கள் ஒவ்வெருத்தருக்கும் இருக்கிறது.
ஆனால்,என்னைப் பொறுத்தவரை இதற்கு ஒரே காரணம், என்னவென்றால் இயற்கை வாழ்வியலைப் பற்றி என் மூலம் அறிந்துகொள்ள பெரும்பாலான இயற்கை இரகசியம் குழு உறுப்பினர்கள் விரும்பவில்லை என்பதுதான்.
சரி போகட்டும், இனி இந்த குழுவில் மட்டுமல்லாது எந்த வாட்ஸ்அப் முகநூல் குழுவில் உள்ள நண்பர்களும் இயற்கை வாழ்வியல் முறைகளைப் பற்றி என்னிடம் கேட்டாலும் முதலில் ஆதிமருத்துவம் நூலை வாங்கிப் படியுங்கள். அல்லது நமது ஆதிமருத்துவம் an therapy youtube பக்கத்தைப் பார்த்து தேவையான தகவலை அறிந்து கொள்ளுங்கள். என்று மட்டுமே கூறப்படும்.
கைப்பேசியிலும் யாருக்கும் எளிய ஆலோசனை கூட வழங்கப்படாது.
நமது நூலை வாங்காத, இயற்கை ஆர்வலர்கள் பற்றிய விளம்பரமும் நூலில் இருந்து நீக்கப்படும்.
இந்த நூலில் 5 நூல்களை வாங்கி தனது நட்பளார் களுக்கும் நூலகங்களுக்கும் வழங்குபவர்களின் பெயர்களை அடுத்தப் பதிப்பில் வெளியிட்டு " இயற்கை வாழ்வியல் ஆதரவாளர்கள் " என்று கௌரவிக்கப்படும்.
ஆமாம்,இப்படி ஒரு முடிவு எடுப்பது மிக முக்கியம். எனது நூல் இயற்கை வாழ்வியலின் கவசம்.இதை படித்து பயன்படுத்த முடியாதவர்கள். இயற்கையின் கருணையால் எத்தனை ஆரோக்கிய வெற்றிகளை பெற்றிருந்தாலும் கூட சட்டென்று வரும் சளியை நிறுத்த முடியாமல் திணறுவார்கள்.
இது சாபமல்ல வரம்.! பயன்படுத்திக் கொள்ளுங்கள்.!
இயற்கைக்கு எதிரான பல்வேறு சூழ்ச்சிகளை முறியடிக்க நாம் அனைவரும் ஒருவருக் கொருவர் தங்கள் அறிவையும் வளர்ச்சியையும் பகிர்ந்து கொண்டு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு;
நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு.!
*ஆதிமருத்துவம்நூலில் என்ன உள்ளது? என்றால்; ஒரு இயற்கை வாழ்வியல் பயிற்சியாளருக்கும் இயற்கை வழியில் நோய்களை குணப்படுத்த முயல்பவர்களுக்கும் தேவையான அனைத்தும் இதில் உள்ளது.*
நூல் தேவைக்கு அழைக்கவும்
ஏகப்பிரியன்
கைப்பேசி:
9629368389.
www.aumherbals.com
No comments:
Post a Comment