I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: உள்ளதை சொல்கிறேன்

Monday, 27 November 2017

உள்ளதை சொல்கிறேன்

மனதோடு பேசுகிறேன்

1.மனதின் பிம்பங்கள் …

"என்னை உயிரை ஒளியை
தேடி அலைந்தேன் …
உடலை மனதை ஆன்மாவை
கடந்து போனேன் …
கண்ணில் வந்தது
இறைவனின் பிம்பம் …
அவன் கரத்தில் தெரிந்தது கருணையின் அம்பு.!"

பால் சுவைக்கு தாயின் மடி தேடியழுத மழலைப்பருவமும்
அறிவுப்பசிக்கு ஆசானாய் தந்தையின் நேசம் வேண்டிய  சிறுமைப்பருவமும்  சட்டென்று போய் விடும். ஆனால்,பிறந்த இடத்தை நாடுகிறதே பேதை மனம் பிறந்த இடத்தை நாடுகிறதே என்று பித்துப்பிடித்தலையும் வாலிபப் பருவம் யாருக்கும் சட்டென்று போகாது.இந்த  பருவத்திலேயே கல்வியையும் வாழ்க்கையில் நமக்கான அடையாளத்தையும்  பெற வேண்டிய நிர்ப்பந்தம் வேறு இருக்கிறது.ஆண் - பெண் ஈர்ப்பென்பது - உடுக்கை இழந்தவன் கை போல வேகமாக செயல் படும் அனிச்சை செயல். அதை வெறுமனே விட்டு விட்டால் அதுவே மெதுவாக போய்விடும். அதை அடக்க நினைத்தாலோ,இடையூறு கொடுத்தாலோ வீறு கொண்டெழுந்து வேண்டாததை எல்லாம் செய்ய எல்லா வாய்ப்புகளும் உள்ளது. அதிலும் சிலருக்கு உடல் மயக்கம் உடலை பிறர் தூக்கி சுமக்கும் காலம் வரை போகாது.

குழந்தை பருவம் முதல் ஒவ்வெரு பருவத்திலும்  மனித மனம் எப்படி இருக்கிறது,அது எப்படி இருந்தால் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஏன் தனக்கே கூட உபயோகமாக இருக்கும்? என்பதை பற்றியே இந்த தொடரில் பேசப்போகிறோம்.

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதார் என்று மழலை மொழியின் இனிமை பற்றி வள்ளுவப் பெருந்தகை எத்தனை இனிதாக கூறிவிட்டார். மழலை மொழி மட்டுமல்ல மழலை மனம் கூட தேனினும் இனிது. மழலையின் செயல்களோ தடையான பெரும் பாறைகளை எல்லாம் கடந்து ஓடும் நதிநீரைப் போன்றது. உலகில் உள்ள எல்லா பாலுட்டி உயிர்களுமே  இயல்பாகவே அமுதை தேடி தாய்மடியை நோக்கி நகரும். இது ஒரு அனிச்சை செயல்.ஆனால், ஒரு குழந்தை பேசும் மொழியும் செய்யும் செயலும் தாய்,தந்தை,உறவினர்கள் மற்றும் நண்பர்களின்  செயல்களே.  குழந்தைகளிடம் நாம் அம்மா சொல்லு,அப்பா சொல்லு,  டாட்டா சொல்லு,கொன்று சொல்லு, இதை எடுத்துக்கொடு, தரமாட்டேன் சொல்லு, போப்பானு சொல்லு என்று பல வார்த்தைகளை பேசவும். நட,நில்,திரும்பு எழுந்திரு,சாப்பிடு, மின் விளக்கைப்போடு, பந்தை எடுத்துட்டு வா என்று பல செயல்களையும்  செய்ய கற்பிக்கிறோம். இதன் மீட்சியை பிற்பாடு பள்ளியிலும் கல்லூரியிலும் கற்க அனுப்புகிறோம். அதாவது நாம் நமக்கு தெரிந்தவற்றை அறிந்தவற்றை பிழைப்பதற்கு தேவையானவை என்று நாம் நினைப்பவற்றை  பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கிறோம். ஒரு சர்க்கஸ்காரர் ஒரு வயதிலேயே பிள்ளையின் உடலை திருகி, எதிர் காலத்தில் தன்னைப்போல தன் பிள்ளையை ஆக்க முயலுகிறார். கணக்கு வாத்தியார் இரண்டு வயதிலேயே எளிய கணக்கை கற்பிக்க முடியுமா என்று பார்க்கிறார். ஐந்து வயதிலேயே ஆயிரம் திருக்குறளை சொல்வது, எட்டு வயதிலேயே மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடி பரிசுபெற வைப்பது,பத்து வயதிலேயே பட்டி மன்றங்களில் பேச வைப்பது, பள்ளியில் எல்லா பாடத்திலும் முதல் மதிப்பெண் வாங்க வைப்பது. என்று எத்தனையோ விதத்தில் நம் பிள்ளைகளை நாம் நினைத்த இடத்திற்கு நகர்த்துகிறோம். ஒரு நாட்டு வைத்தியன் எதிர் காலத்தில் தன் மகன் ஒரு படித்த மருத்துவனாக வரவேண்டும் என்றும் ஒரு தொழிலாளி தன் மகள் முதலாளி ஆகவேண்டும் என்றும் கூறிக்கூறியே வளர்க்கிறார்கள். இது சரியா? பிள்ளையிடம் தாய் இதுதான்  அப்பா பாரு, என்று சொல்வதை விட அப்பா என்றால் யார், அவரின் முக்கியத்துவம் என்ன? என்று படிப்படியாக கற்பிக்க வேண்டும். மின் விளக்கை போடு என்று சொல்வதை விட மின் விளக்கை போட்டால் இருள் போகும் ஒளி வரும் நமது வேலைகளை தெளிவாக செய்ய முடியும் என்று கற்பிக்க வேண்டும். பிள்ளைகளிடம் பலரும் உன் தந்தை கோபக்காரர், உன் மாமன் ஏமாற்றிவிட்டான், இந்த கம்பை எடுத்து உங்க தாத்தாவிற்கு இரண்டு அடிபோடு என்றெல்லாம்  கூறி மனிதர்களை வெறுக்க கற்பிக்கிறோம். குறளையும் ஆட்டத்தையும் கற்பித்து அதை பெருமிதம் கொள்ள செய்து பல பரிசுகளை வாங்க வைக்கிறோம். ஆனால்,குறளின் பொருளை மனதில் பதித்து அதை நடை முறையில் கடைப்பிடிக்க செய்யவில்லை. இங்கிருந்து தான் சொன்னதை திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளை களாக வெற்று மனப்பாட மக்குகளை உருவாக்கும் வெள்ளையனின் மெக்கல்லோ கல்வி முறைக்கு ஆள் சேர்க்கிறோம்.
நமது பிள்ளைகளுக்கு திருக்குறள் தெரியாது. ஒருவேளை  அப்படியே திருக்குறளையும்,  தமிழ் இலக்கிய ஞானங்களையும் அவர்களுக்கு கற்பித்தாலும் அதன் படி வாழ்ந்தால் நீ முட்டாளாக ஆக்கப்படுவாய் என்று கூறியே வளர்த்து வருகிறோம். எப்படியாவது அடித்துப்பிடித்து எல்லாவற்றிலும் நீ முதன்மையாக வர வேண்டும். என்று; கூறிக்கொண்டே மனித உடலின்  அடிப்படையான உடல் சுத்திகரிப்பு முறையான யோகா,மூலிகை ஞானம் போன்றவற்றின் அறிவையும் உண்மையையும் கற்பிக்காமல் அதையும் பத்தோடு பதினொன்றாக தெரியும். என்ற அளவில் வைத்துக்கொண்டு ஆராய்ச்சி உண்மை என்ற பொய்யை நம்பி  நமது பிள்ளைகளுக்கு பல்வேறு தடுப்பூசிகளையும் போட்டு வருகிறோம். விஞ்ஞானம்  பொய்யா என்று நீங்கள் கேட்கலாம். விஞ்ஞானம் பொய்யல்ல மாறிக்கொண்டே இருப்பது. அதனால்,அது நிலையான உண்மை இல்லை.
என்று நான் கூறினால் அதை மறுக்கும் திராணி எவருக்கும் கிடையாது. அடுத்து எதெல்லாம் வியாபாரம் ஆகிவிட்டதோ அவை எல்லாம் விஞ்ஞானம் இல்லை. ஒரு சிலரின் பிழைப்பிற்கான வழி. சில தடுப்பூசிகளை இலவசமாய் தானே போடுகிறார்கள் என்றால்; ஆமாம் உங்களுக்கு  இலவசம் தான். ஆனால்,அரசாங்கம்  மக்கள் வரிப்பணத்தில் இருந்து கோடியை கொட்டியதாய் கணக்கு காட்டியே எந்த திட்டத்தையும் அறிவிக்கும். அதில் பெரும்பகுதி ஆள்வோருக்கும் அதிகாரிகளுக்கும் ஏன் எதிர் கட்சியினருக்கு கூட போகும். இது போன்ற திட்டம் இல்லை என்றால் இந்திய அரசியல் எத்தர்களுக்கு பிழைப்பே  இல்லை. இது போன்ற விசயங்களில் இருந்து நாம் விடுபட்டு நமது தலைமுறையை வாழ்வாங்கு வாழ செய்ய வேண்டுமானால் நமது பண்டைய வாழ்வியல் முறை,கல்வி முறை,யோகா போன்ற அனைத்தையும் முழுமையாக கற்பிக்க வேண்டும். கல்வி,மருத்துவம் இவை இரண்டும் இயற்கையானதாய் இலவசமானதாய் இருக்க ஆள்வோர்களை தொடர்ந்து வற்புறுத்த வேண்டும்.நாம் வெளிநாட்டு கல்வி முறையையும் மருத்துவ முறையையும் மொழியையும் கற்றால் தானே வெளிநாட்டு சமூகத்தோடு இயைந்து உலக சந்தைக்கு போக முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.  உலகில் நான்கில் ஒரு பங்கு ஜனத்தொகை கொண்ட இந்தியாவிற்கு  அவர்கள் வேண்டுமானால் பிழைக்க வரட்டும். மருந்து முதல் உணவு வரை உள்ள தங்கள் குப்பைகளை இங்கு விற்க வரவேண்டாம். அதற்கு யாரும்  தரகு வேலையும் செய்ய வேண்டாம்.
நமது வளங்களையும் ஞானங்களையும் சுரண்டி நாம் வாழ்வையே வியாபார பொருளாய் மாற்றிய உண்மையை நமது பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்ப்போம்.

இன்னும் பேசுவேன்  …

-ஏகப்பிரியன் DYT

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...