*ஆதி மருத்துவம்*
[புத்தக சுருக்கம்]
தினமும் காலையில் எழுந்ததும் இரண்டு முதல் மூன்று டம்ளர் மண்பானை நீர் குடியுங்கள்.!
தினமும் ஒருமணி நேரம் யோகா/ உடற்பயிற்சி செய்யுங்கள்.!
மைதா,சீனியில் செய்த உணவுகள்,வண்ணப்பொடி,சுவைப்பொடி சேர்த்த உணவுகள்,காப்பி,தேநீர்,பிராய்லர் சிக்கன்,பிராய்லர் முட்டை,ஐஸ்மீன்,குளிர்பானம்,இரசாயண ஊட்டச்சத்து பானம்,சாக்லேட்,பேக்கரி உணவுகள்,
பாக்கெட் உணவுகள்,சுத்திகரித்த உப்பு,சோடாப்பு போன்றவற்றில் செய்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.!
சமையலுக்கு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக செக்கு கடலை,தேங்காய்,நல்லெண்ணெய்களை மட்டுமே வாங்கி பயன்படுத்துங்கள்.! புதிது புதிதாக வரும் ஆலிவ் எண்ணெய்,பாதாம் எண்ணெய்,சூரியகாந்தி எண்ணெய்,அரிசி எண்ணெய் போன்ற எந்த எண்ணெய்களையும் பயன்படுத்தாதீர்கள்.!
வீட்டுக்குத்தேவையான மசாலாப்பொருட்களையும் மாவுக்கான பொருட்களையும் நீங்களே நேரடியாக வாங்கி சுத்திகரித்து அரைத்து பயன்படுத்துங்கள்.! முடியாவிட்டால் உங்கள் அருகிலேயே எளிய முறையில் இவைகளை தயாரிப்பவர்களிடம் வாங்கி பயன்படுத்துங்கள். பெரிய நிறுவனங்களின் பொருட்களை வாங்கி ஏமாறாதீர்கள்.!
அதோடு I.S.I,I.S.O சான்றிதழ்களும் விருதுகளும் பணம் கொடுத்தால் இன்று அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
என்பதை மறக்காதீர்கள்.!
வீட்டில் முடிந்தவரை சிறிய நாட்டு இரக காய்கறி,கீரைகளை பயிரிடுங்கள்.!
இரசாயண உரமிட்டு விளைவித்த
உணவுப்பொருட்கள் மற்றும் மரபணு மாற்றிய உணவுப்பொருட்களை முடிந்தவரை தவிருங்கள்.!
தினமும் ஒருவேளை தேங்காய்,வாழைப்பழம்,கருப்பட்டி,அவல்,ஊறவைத்த தானியங்கள்,பச்சை காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுங்கள்.
இன்னொரு வேளை கைக்குத்தல் அரிசியில் செய்த உணவு,மற்றொருவேளை கேழ்வரகு தோசை,சிறுதானிய கஞ்சி போன்றவற்றை உண்ணுங்கள்.
இதற்கு இடைப்பட வேளைகளில் உண்பதை முழுவதும் தவிருங்கள். தேவைப்பட்டாலோ பசி இருந்தாலோ மண்பானை நீர்,பழச்சாறு,பழங்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் உண்ணுங்கள்.!
தினமும் ஒரு வேளையாவது பசி வந்த பின்பு உண்ணுங்கள்.உணவு உண்ணும் முன்பு குளித்து அல்லது கைகால் கழுவிய பின் உண்ணுங்கள்.
உணவை நன்றாக மென்று உமிழ்நீரோடு சேர்த்து, மெதுவாக ஒரே மனநிலையில் உண்ணுங்கள்.!
உணவிற்கு அரைமணி நேரம் முன்போ அல்லது அரைமணி நேரத்திற்கு பின்போ நீர் குடியுங்கள். உணவோடு கூடவே நீர் குடிக்காதீர்கள்.!
மனதை எப்பொழுதும் மகிழ்வாக நேர்மறை எண்ணத்துடன் வைத்துக்கொள்ளுங்கள்.!
நெகுழித்தாள்,நெகுழி டம்ளர்,காகித டம்ளர் போன்றவற்றில் பரிமாறப்படும் எந்த சூடானப் பொருளையும் உண்ணவோ குடிக்கவோ செய்யாதீர்கள்.!
தினமும் ஒரு முறையாவது கழிவறை செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
நோயாளிகள் வாரத்திற்கு மூன்று நாட்களாவது மூலிகை மருந்து,எனிமா கேன் போன்றவற்றை பயன்படுத்தி பெருங்குடலை சுத்திகரிப்பதை வழக்கமாக்குங்கள்.!
யோகாவில் உள்ள கபாலபதி [தலைசுத்தி] நேதி [மூக்குசுத்தி]சூரண தௌதி [உணவுப்பாதை சுத்தி]திரட்டகா,[கண்சுத்தி]அக்னிசாரா கிரியை [பெருங்குடல் சுத்தி] போன்ற உடல் சுத்திகரிப்பு பயிற்சிகளை தெரிந்து வைத்துக் கொண்டு மாதத்திற்கு இரு முறையோ அல்லது தொற்று நோய்கள் பரவும் வேளையிலோ தொடர்ந்து செய்து வாருங்கள்.!
நம்நாட்டு மூலிகை மற்றும் உணவுப்பொருட்களின் பயன்களை அறிந்து பயன்படுத்துங்கள்.!
இரசாயண மருத்துவத்தை அவசர சிகிட்சை மற்றும் அறுவை சிகிட்சை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் மட்டுமே பயன்படுத்துங்கள்.!
கொசுமருந்து, குக்கர் போன்றவற்றை பயன்படுத்தாது இயற்கை கொசுவிரட்டி மண்பானை போன்றவற்றை பயன்படுத்துங்கள்.!
ஏசி அறைகளில் இருக்காமல் இயற்கை காற்றோட்டம் உள்ளப்பகுதியில் வாழுங்கள்.!
தடுப்பூசி,இரசாயண மருந்துகளின் தீங்குகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.!
பற்பசை,சோப்பு,முக பசை போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள்.விளம்பரம் செய்யும் பெரிய நிறுவனங்களின் பொருட்களை வாங்காதீர்கள்.!
உள்ளூர் இயற்கை பொருள் உற்பத்தியாளர்கள்,எளிய மூலிகை மருந்துகளை தயாரிப்பவர்கள்,
சிறு வியாபாரிகளை தொடர்ந்து ஆதரியுங்கள். ஏனெனில் மக்கள் ஆதரவு இல்லாத பட்சத்தில் இந்தத்தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் போய்விடும்.!
இயற்கையை பற்றிய விழிப்புணர்வை பரப்பியவர்கள் நம்மாழ்வார் போன்ற எளிய மனிதர்களும் இயற்கை பொருள் உற்பத்தியாளர்களும் தான்.இவர்களை போன்றவர்களின் உழைப்பை பெரு நிறுவனங்கள் சுரண்டி கொழுக்க அனுமதிக்காதீர்கள்.!
வாழையிலை குளியல்,மண்குளியல்,சூரியக்குளியல் போன்ற பயிற்சிகளையும் தேவையான போது செய்து ஆரோக்கியமாக வாழுங்கள்.!
மதம்,சாதி அரசியல் அமைப்புகளுக்கு அடிமையாக இருக்காதீர்கள்.!
ஆசையால் உந்தப்பட்டு எந்த பெரிய விசயங்களையும் செய்யாதீர்கள்.!
முடிந்தவரை கடன் வாங்காமல் இருப்பதை கொண்டு மகிழ்வாய் வாழுங்கள்.!
மாதத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளியுங்கள்.!
தினமும் தியானம் செய்வதையும் பிராத்தனை செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.!
மருத்துவம் என்பது ஒன்று யோகா,பிராணசிகிட்சை,மூலிகை மருத்துவம், தொடு சிகிட்சை,வர்ம வைத்தியம்,மனசிகிட்சை,நம்பிக்கை வைத்தியம் போன்று இயற்கையை சார்ந்தது.மற்றது இரசாயணத்தை சார்ந்தது. இவை தவிர புதிது புதிதாக வரும் எந்த மருத்துவ முறையையும், பயிற்சி முறைகளையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள், ஆராய்ச்சி உண்மை என்று கூறுனாலும் கடைப்பிடிக்க வேண்டாம்.
ஏனெனில் சமீப காலமாக பல்வேறு புதிய மருத்துவ முறைகள் வந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.!
இயற்கை முறையில் நோய்கள் குணமாக மூன்று நாள் முதல் 24 மாதம் வரை காலம் பிடிக்கலாம். அதுவரை பொருமையாக வாழ்வியல் முறைகளை தொடர்ந்து கடைப்பிடியுங்கள்.நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களும் அறுவை சிகிட்சை செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட அலோபதி மருத்துவ நிபுணர்களிடமும் இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்களிடமும் ஆலோசனை செய்த பின்பே முக்கிய முடிவை எடுங்கள்.!
நாம் மேலே கூறியுள்ள கருத்தை புரிந்து கொள்ள இந்த புத்தகத்தை முழுவதும் படியுங்கள். நாளைக்கு ஒரு அத்தியாயம் என்ற விதத்தில் பிரித்து, கருத்துகளை உள் வாங்கி பயிலுங்கள்.அப்படி செய்தால் மட்டுமே இயற்கை வழியில் உங்களுக்கு உள்ளிருந்து வந்த எந்த வியாதியும் குணமாகும். கதை புத்தகம் போன்று வேகமாக படிப்பதால் சரியான பயன் கிடைக்காது போகலாம்.!
சந்தேகமாகவும் அச்சமாகவும் உள்ள எந்த மருத்துவ முறைகளையும் பயன்படுத்தாதீர்கள்.!
ஆதி மருத்துவ முறைகள் பற்றிய ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் நமது கைப்பேசியில் [9629368389[ தொடர்புகொள்ளுங்கள்.!
உங்கள்
அனுபவங்களை ஒரு குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.!
உங்கள் பகுதியில் ஒருங்கிணைந்த ஆதி மருத்துவக்கலை வகுப்பை நடத்தி மக்கள் தாங்கள் இழந்த முன்னோர் வாழ்க்கை முறையையும், ஆரோக்கியத்தையும் மீண்டும் பெற உதவி புரியுங்கள்.!
அதன் மூலம் உங்கள் தலைமுறை இம்மண்ணில் வாழ்வாங்கு வாழும் வரம் பெறுங்கள்.!
நலம் பெருகட்டும் …
-ஏகப்பிரியன் DYT
ஆதி மருத்துவம் 382 பக்கம்
நன்கொடை 360 ரூ/-
உங்கள் தேவைக்கு அழைக்கவும்
Mobile & Whats App
9629368389
aumherbals.blogspot.in
amyogatrust.blogspot.in
ஆன்மீகம் பற்றிய அனைத்து தகவல்களும் வீடியோவாகப் பார்க்க - to watch Video => ஆன்மீகம் ஆன்மீக குறிப்புகள் Spiritual notes in tamil
ReplyDelete