பொடுகு,ஈர்,பேன்
உடல் கழிவு முறையாக வெளியேறாத காரணத்தாலேயே பொடுகு,ஈறு,பேன் சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வருகிறது.தினமும் காலை வெறும் வயிற்றில் 5 டம்ளர் நீர் குடித்து விட்டு காலை கடன் கழிக்க வேண்டும். தினமும் அதிகாலையில் இயற்கை சீகக்காய் பொடி போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.தலையில் அதிக வியர்வை வந்த நாட்களிலோ அல்லது அதிகமாக மாசு நிறைந்த இடத்திற்கு சென்று வந்தவுடன் குளித்து விடவோ அல்லது தலையை மட்டும் குளிர்ந்த நீரால் கழுவி விடவோ வேண்டும். உணவில் தினமும் ஒரு வேளை இயற்கையான சமைக்காத பழம்,காய்கறி, தானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறைந்தது மாதம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
மாதம் ஒரு முறை ஒரு மணி நேரம் குறைந்த ஆடையுடன் ஒரு மணி நேரம் சூரியக்குளியல் செய்ய வேண்டும்.
இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது இரவு உணவிற்கு பின் இரண்டுத் தேக்கரண்டி இஞ்சிச்சாறு,அதே அளவு விளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து குடித்துவிட்டு அரை மணி நேரம் கழித்து தூங்க வேண்டும்.இதனால் மலக்குடலில் தேங்கியுள்ள நாள்ப்பட்ட கழிவுகள் வெளியேறும்.
தலைக்கு எந்த இரசாயண எண்ணெய்களையும் தேய்க்காமல் செம்பருத்தி எண்ணெயை மட்டும் தேய்த்து வரவேண்டும்.
முடிந்தவரை,பால்,சீனி,மைதா,பாட்டில் பானம்,துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மனதை அழுத்தம் இல்லாமல் இயல்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி,யோகா,விளையாட்டுபயிற்சி போன்றவற்றில் குறைந்தது 20 நிமிட நேரம் செலவிட வேண்டும்.
இது போன்ற விசயங்களை தொடர்ந்து செய்து வந்தால் பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகள் மட்டுமல்ல உடலில் உள்ள எத்தகைய கோளாறுகளும் எளிதில் குணமாகும்.!
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
aumherbals.blogspot.in
Youtube amyogatrust yoga for all
No comments:
Post a Comment