I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: இயற்கை உணவு திட்டம்

Wednesday, 16 August 2017

இயற்கை உணவு திட்டம்

*உயிர் மீட்கும் மருத்துவம்*

42.இனியபழங்களின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுமுறை

" இயற்கையாய் விளைந்து
மனித கைகளால்
பறிக்கப்பட்டு நேரடியாக
உயிர்களின் பசியை தீர்க்கின்றவை எதுவோ அதுவே
உணவு எனப்படும்.!
மரபணுவை மாற்றி
தவறாக சேர்த்து
நாளெல்லாம் கெடுத்து
கொடு நஞ்சை ஊட்டி 
அழகாக வடிவமைத்து
அரங்கத்தில் விற்கப்படுவது
விசம் என்பதே நிஜம்.! "

இயற்கையாக விளையும் பழங்களை தின்று   20 நாளில்
15 கிலோ வரை எடையை
குறைப்பதோடு மூட்டுவலி,ஆரம்ப புற்று, சிறுநீரக செயலிழப்பு,சக்கரை,இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.!

பொதுவாக காலையில் உணவு உண்பதற்கு 15 நிமிடம் முன்பே குளித்து விடுவது நல்லது.! மற்ற வேளைகளில் உணவு உண்பதற்கு முன் கைகால் முகம் கழுவி விட்டு உணவருந்த பாயில்  உட்கார வேண்டும்.!
உணவு பரிமாறிய பின் " உணவளித்த இறைநிலைக்கு நன்றி ,என்னை வாழவைத்த இறைநிலைக்கு நன்றி, என்னை ஆரோக்கியவானாக்கிய இறைநிலைக்கு நன்றி.! " என்று; பிராத்தனை செய்துவிட்டு கை பெருவிரலை மடக்கி அதன் மேல் மற்ற நான்கு விரல்களையும் மடக்கி வைத்து <ஆதிமுத்ரா> மூன்று முறை மூச்சை ஆழமாக இழுத்து மெதுவாக விட்டுவிட்டு பிறகு  உணவை உண்ண தொடங்க வேண்டும்.!
உணவை உண்டு முடித்தவுடன் ஆதி முத்ராவில் மூன்றுமுறை மூச்சை இழுத்து விட்டுவிட்டு முடிந்தால் அதே நிலையில் ஐந்துநிமிடம் வெறுமனே அமர்ந்து விட்டு எழுந்து விடலாம்.!
இதனால் உணவு நன்கு, ஜீரணமாவதோடு உடல் சக்தியும் மேலோங்கும்.!
அதுபோலவே, உண்ணும் போது, உணவிலோ நீரிலோ துளியையும் வீணாக்காமல் ஒரு மனதோடு உண்ண வேண்டும்.!

முதல்நாள்
்்்்்்்்்்்
காலை எழுந்ததும் 5 டம்ளர் குளிர்ந்த மண்பானை நீரை குடித்து காலை கடனை
முடித்து விட்டு குளியுங்கள்.!
நீரை குடிக்கும் போது தரை அல்லது நாற்காலியில் அமர்ந்து டம்ளரில் வாய் வைத்து மெதுவாக உமிழ்நீரோடு சேர்த்து தண்ணீரை குடிக்க வேண்டும்.! இதனால், உடலுக்கு உடனடி சக்தி கிடைப்பதோடு, உடல் கழிவுகளும் வேகமாக வெளியேறும்.!

பிறகு 30 நிமிடம் உங்களுக்கு பிடித்த யோகாசனம், தியானம் போன்றவற்றை செய்யுங்கள்.!
<மாலையும் இதுபோல் 30  முதல் 45 நிமிடம்  யோகா & உடற்பயிற்சி செய்வது அவசியம்>
காலை உணவு -அரை மூடி தேங்காய் இரண்டு நாட்டு வாழைப்பழத்தை மட்டும்  உண்ணுங்கள்.!
மதியம் - மூன்று சாத்துக்குடி பழத்தை அப்படியே உரித்து சாப்பிடுங்கள்.!  அதோடு 50 கிராம் பச்சை வேர்க்கடலை தேவையெனில் சேர்த்துக்கொள்ளலாம்.!
இரவு - மூன்று ஆப்பிள்களை மட்டும் அப்படியே சாப்பிடுங்கள்.!
இடைப்பட்ட வேளையில் திராட்சை,அண்ணாசி,மாதுளை, எலுமிச்சை சாறுகளையும் தேவையான அளவு நீரையும் வேண்டிய மட்டும் குடியுங்கள்.!

இரண்டாம் நாள்
--------------------
இன்று முழுவதும் மண்பானையில் ஒரு பத்துலிட்டர் நீரை இரண்டு மணி
நேரம் வெயிலில் வைத்து,எடுத்து வைத்துக் கொண்டு,தாகமோ பசியோ எடுக்கும் போதெல்லாம்
இந்த நீரை மட்டுமே குடியுங்கள்.!

மூன்றாம் நாள்
**************
காலை - நாட்டு வகை மாம்பழம்
மூன்று மட்டும்.
மதியம் - பேரிச்சம் பழம் 50 கிராம்.வெள்ளரிக்காய் 150 கிராம் சாப்பிடுங்கள்.
இரவில் - கொய்யா பழம் மூன்று
மட்டும் சாப்பிடுங்கள்
இடையில் தேவையான போது
சாத்துக்குடி, ஆப்பிள்,விதையுள்ள கருப்பு திராட்சை சாறுகளை,
இனிப்பு எதுவும் கலக்காமல் வெறுமனே குடியுங்கள்.! இடைவெளி விட்டு, தேவையான நீரும் குடிக்கலாம்.!

நான்காம் நாள்
----------------------------
இரண்டாம் நாள்போல நீர்விரதம்.!

ஐந்தாம் நாள்.!
-------------------
காலை, மதியம், இரவு
மூன்று வேளையும்  வேளைக்கு இரண்டு டம்ளர் சத்துமாவில்
நமது ஆரோக்ய ஆயில் 30 மிலி கலந்து குடியுங்கள்.!
இடையில் பழச்சாறு மற்றும் மண்பானை நீர் அருந்தி கொள்ளலாம்.!

ஆறாவது நாள்
============
காலையில் -பாதாம் பருப்பு 50 கிராம். முந்திரிப்பருப்பு 50 கிராம்.
விதையுள்ள உலர் திராட்சை 50 கிராம்.
மதியம் - மூளைவிட்ட கொண்டைக்கடலை 100 கிராம்.
நாட்டு வாழைப்பழம் 2.
இரவு - அவல் கருப்பட்டி, தேங்காய்
தேவையான அளவு
இடைப்பட்ட நேரத்தில்
காய்ச்சாத பசும்பாலில் உறைவிட்டு தயாரித்த மோர் தேவையான அளவு அருந்தி கொள்ளலாம்.!
இந்த 6 நாட்களும் இந்த முறையை பின்பற்றினால்  உடல் எடை அதிகம்  உள்ளவர்களுக்கு மட்டும் 3 முதல் ஐந்துகிலோ எடை ஒரே வாரத்தில் குறையும்.!
மற்றவர்களுக்கு உடல் எடை அதிகமாக குறையாமல் வேறு நோய்கள் இருந்தால் குணமாகும்.!
இந்த உணவுகள் போதாது என்று நினைப்பவர்களும்,விரதம் இருக்க முடியாதவர்களும்.! விரதத்திற்கு முந்திய நாள் உணவு முறையோடு … தினமும் மதியம்  கேரட்,பீட்ரூட்,உருளைக்கிழங்கு,வெள்ளரிக்காய்,வெங்காயம்,கொத்தமல்லி தழை போன்றவற்றில் மொத்தம் 200 கிராம் அளவிற்கு வெட்டி,இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.! அல்லது ஒரு நாள் மதியம் கைக்குத்தல் அவலில் கேரட்,பீட்ரூட்,கொத்தமல்லிதழை,கறிவேப்பிலை,மிளகு,தூள் சிறிது இந்துப்பு கலந்து 200 கிராம் அளவிற்கு சாப்பிடலாம்.!
இன்னொரு நாள் கைக்குத்தல் அவலில் தேங்காய்ப்பூ,கருப்பட்டி, நாட்டு வாழைப்பழம் போன்றவற்றைப் போட்டு பிசைந்து 300 கிராம் அளவிற்கு சாப்பிடலாம்.!
தோல்நோய்,இரத்த சுத்தமின்மை,சொரி,கல்லீரல் வீக்கம்,சிறுநீரக செயலிழப்பு,உடல்பருமன், சக்கரை போன்ற ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்கள் இதே முறையோடு காலை எழு மணியளவில் அருகம்புல் சாறு - தோல்நோய்,இரத்த சுத்தமின்மை.!சோற்றுக்கற்றாளைசாறு -சிறுநீரக செயலிழப்பு.!வல்லாரைச்சாறு -உடல் பருமன்,சளி.! நெல்லிக்காய் இரசம் - இரத்தசோகை,கல்லீரல் வீக்கம்.! பப்பாளிக்காய் இரசம் - உடல் பருமன்,கைகால் வீக்கம்,சக்கரை.!  மேற்கண்ட மூலிகை சாறுகளை குடித்துவரலாம்.! இவை,அருகில் குறிப்பிடப்பட்டுள்ளநோயை மட்டுமல்ல பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளைப் போக்கும் தன்மை கொண்டவை.! குறிப்பாக, அருகம்புல் சாறை மட்டும் குடித்துக் கொண்டு  மூன்று மணிநேரம் உணவு,நீர் எதையும் குடிக்காமல் இருந்தால் அதில் மட்டுமே 500 க்கும் மேற்பட்ட  நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது.!  ஏதேனும் ஒரு மூலிகைச்சாறில்
நீர்,தேன் சேர்த்து 300 மில்லியளவு  தயாரித்து குடிக்கலாம்.!
தொடர்ந்து ஒரு ஆறுநாள் சாதாரண உணவு முறையை பின்பற்றி விட்டு, மீண்டும் ஆறுநாள் இந்த முறையை பின்பற்ற அதிக உடல் எடை கொண்டவர்கள்  20  நாட்களில் 15 கிலோ வரை எடை குறைவது உறுதி.!
மற்றவர்கள் 2 - 3 கிலோ மட்டும் குறைந்து சிக்கென காட்சியளிக்கலாம்.! அதோடு இரத்த அழுத்தம், நீரழிவு, ஆஸ்துமா, மூட்டுவலி, பார்வைகுறைபாடு, போன்ற கோளாறுகள் இருப்பவர்களும் இந்த முறையை பின்பற்ற  உடல் நலம் மேம்படும்.!
இப்படி மூன்று வேளையும் சமைக்காத உணவு எடுக்க முடியாதவர்கள்.!
தினமும் ஒருவேளை இதில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு இயற்கை சமைக்காத உணவு,
மற்றொரு வேளை கைக்குத்தல் அரிசி சோறு,சாம்பார்,கூட்டு போன்றவற்றையும் இன்னொரு வேளை கேழ்வரகு,கம்பு,குதிரை வாலி போன்றவற்றில் செய்த தோசை,புட்டு,களி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றையும் செய்து  உண்டு விட்டு அடுத்த நாள் நீர்விரதம் வைத்துக் கொள்ளலாம்.!
இப்படி ஒரு நாள் - இருவேளை சமைத்த உணவு மறுநாள் நீர்விரதம் என்று மொத்தம் பத்து நாட்கள் கடைப்பிடித்தால் உடல் பருமனால் அவதிப்படுவோருக்கு 5 முதல் 8 கிலோ வரைஎடை குறைவதோடு, உடலில் உள்ள அனைத்து ஆரோக்கியக் குறைபாடுகளும் நீங்க ஆரம்பிக்கும்.! பிறகு பத்துநாள் ஒருவேளை சமைக்காத, இருவேளை சமைத்த உணவை உண்டுவிட்டு அடுத்தநாள்  நீர் விரதம் என்று மீண்டும் 10 நாள் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.!
உணவை தரையில் அமர்ந்து நன்றாக மென்று உமிழ்நீரோடு சேர்த்து உண்ண வேண்டும்.!
எப்பொழுதுமே அரை வயிற்றுக்கு மேல் உண்ணக்கூடாது.!
உணவோடு நீர் அருந்தாமல் உணவு உண்பதற்கு அரை மணிநேரம் முன்பு அல்லது உணவு உண்டு அரைமணி நேரம் சென்ற பின் வேண்டிய மட்டும் மண்பானை நீர்,அல்லது காய்ச்சி ஆறிய வெதுவெது நீரை அருந்திகொள்ளலாம்.! மினரல் வாட்டர் போன்றவை வேண்டாம்.!
உணவு உண்ணும் போது விக்கல் வந்தாலோ அல்லது நீர் குடிக்க வேண்டும் என்று தோன்றினாலோ 50 முதல் 150 மில்லி வரை நீர் அருந்தி கொள்ளலாம்.!
பொதுவாக உப்பு,புளி,காரம்,இனிப்பு மிகுந்த உணவுகளை உண்ணும் நேரங்களிலும் செயற்கையான சத்தூட்டிகளை சாப்பிடும்போதும் தான் தாக உணர்வு அதிகரித்து தோன்றும்.! இவற்றை தவிர்த்தால் உணவு வேளையில் தாகம் வராது.!
உணவில் ஊறுகாய்,அப்பளம்,உப்பில் ஊறிய மோர்மிளகு,உப்பு ஊறிய சுண்டை வற்றல்,கடைகளில் பல வண்ணங்களில் விற்கப்படும் வடகங்கள் போன்றவற்றை துளியும் சேர்க்க வேண்டாம்.!
சமையலுக்கு இந்துப்பு அல்லது கல்லுப்பை மட்டுமே பயன்படுத்துங்கள்.
அசைவ உணவு உண்பவர்கள் பிராய்லர் கோழி,பிராய்லர் முட்டை,விலங்குகளின் குடல்,இரத்தம், ஐஸில் வைத்த மீன்கள்,நண்டு,இறால்,சிப்பி,கருவாடு போன்றவற்றை உண்ண வேண்டாம்.!
ஏனெனில், இவை உடலின் இயக்கத்தை பாதித்து திடீர் நோய்களை கொடுக்கவல்லது.!
சமையலில் இரசாயண கலப்புப் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பதோடு தாளிப்பதற்கு செக்கு தேங்காய் எண்ணெய், செக்கு கடலை எண்ணெய் , செக்கு நல்லெண்ணெய் போன்றவற்றை தவிர வேறு எந்த எண்ணெய் களையும் பயன்படுத்த வேண்டாம்.! பழம்,காய்கறி,தானியங்கள் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட தாய் இருக்க வேண்டும்.! அது கிடைக்காத பட்சத்தில் பழம்,காய்கறி,தானியங்களை அரைமணி நேரம் இந்துப்பு,மஞ்சள்தூள் கலந்த கலவையில் ஊறவைத்து பிறகு நல்ல நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.!
நாள்பட்ட ஆரோக்கியக் குறைபாடு கொண்டவர்கள் இந்த உணவு முறையை பின்பற்றும் காலத்திலேயே தினமும் இரவு 10 மணிக்குள் தூங்கி அதிகாலை 6 மணிக்குள் எழுதல் நல்லது.! அதுபோலவே தினமும் காலை,இரவு இயற்கை எனிமா எடுத்துக் கொள்வதோடு  இடுப்புக்குளியல், பாதக்குளியல்,மண்குளியல்,வாழையிலை குளியல்,எண்ணெய் குளியல், எண்ணெய் கொப்பளிப்பு
போன்றவற்றில் தேவையானவற்றையும் சேர்த்து செய்வதோடு தொடர்ந்து 30 நாட்களுக்கு தாம்பத்ய விரதமும் இருக்க வேண்டும்.!
இது போன்ற ஒருங்கிணைந்த இயற்கை வாழ்வியல் முறைகளை தொடர்ந்து செய்துவர மனித உயிரை பலி கேட்கின்ற எத்தகைய ஆரோக்கிய குறைபாடுகளும் உடலை விட்டு நீங்கும்.! நம்மால் வழங்கப்பட்ட இந்த உணவு முறையை, பின்பற்றி உடல் பருமன், தண்டுவடக் கோளாறு, சிறுநீரக செயலிழப்பு,ஆரம்பபுற்று நோய்,சக்கரை, இரத்த அழுத்தம்,குடலிறக்கம்,சிறுநீரக கற்கள்,நாள்ப்பட்ட புண்,பார்வை குறைபாடு,நரம்புத்தளர்ச்சி,குழந்தையின்மை போன்ற  பல்வேறு ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்கள் தங்கள்  ஆரோக்கியத்தை மீட்டுள்ளனர்.!
முழுமையான இயற்கை உணவை பின்பற்றும் போது ஒரு சிலருக்கு மட்டும் தலைவலி,காய்ச்சல்,சளி இருமல் போன்ற உபாதைகள் தென்படும்.! இதை கண்டு பயப்பட வேண்டாம்.!
உடல் கழிவு முழுமையாக வெளியேறுவதாலேயே இதுபோன்ற உணர்வுகள் தோன்றுகிறது.!
இதற்கு இந்த நூலில் மற்ற பகுதிகளில் கூறியுள்ள நிவாரண முறைகளை செய்தால் சரியாகிவிடும்.!
நலம் பெருகட்டும் …

--ஏகப்பிரியன் DYT

தொடரும் …

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in

Aum Herbals
Mobile:9629368389

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...