*கர்பபை நீர்க்கட்டி பிரச்சனை குணமாகும்*
கழற்சிக்காய், மிளகு, மோர் மருந்துகள்
நீர்க்கட்டி பிரச்சனைக்கு கழற்சிக்காய் ஓர் அருமையான மருந்து ஆகும். வேறு எந்த மருத்துவத்தையும் எடுக்காமல் சரியான உணவு முறையோடு இந்த கழற்சிக்காய் மருத்துவத்தை மட்டும் ஒரு மாதம் எடுத்துக் கொண்டால் கர்பபை நீர்க்கட்டி பிரச்சனை கண்டிப்பாக குணமாகும்.! இந்த கழற்சிக்காய் பொடியாகவும் கிடைக்கும். கழற்சிக்காய் சிறிய கோலிகுண்டு அளவில் பச்சையாகவும் அல்லது வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.! கழற்சிக்காயின் உள்ளே முந்திரிபருப்பு போன்று ஒரு பருப்பு இருக்கும். கழற்சிக்காயை உடைத்து இந்த பருப்பை எடுப்பது மிக மிக கடினம். கழற்சிக்காயின் வெளி ஓடு அவ்வளவு கடினத்தன்மை உடையதாகும். பெரிய சுத்தியல் வைத்து அடித்து உடைக்கலாம். கழற்சிக்காயை பக்கவாட்டில் அடித்து உடைத்தால் உள்ளிருக்கும் பருப்பு உடையாமல் எடுக்கலாம்.
காலையும் மாலையும் ஒரு கழற்சிக்காய் பருப்புடன், 3 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வேண்டும். இது பச்சை பாகற்காயை மெல்வது போன்று அவ்வளவு கசப்பாக இருக்கும். மிகவும் கசப்பாக இருந்தால் நன்றாக மென்று முடித்ததும் மோர் குடிக்கலாம். முன்பே குறிப்பிட்டது போல் வேறு எந்த மருத்துவத்தையும் பார்க்காமல் ஒரு மாதம் ஒரு நாள் கூட கைவிடாமல் இந்த கழற்சிக்காய் மருந்தை உண்டு வந்தால் கர்பபை நீர்க்கட்டி பிரச்சனை முற்றிலும் குணமாகும்.!
இணையப்பகிர்வு
No comments:
Post a Comment