I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: மூலிகை குடிநீர் தயாரிப்பு

Friday, 25 August 2017

மூலிகை குடிநீர் தயாரிப்பு

*உயிர் மீட்கும் மருத்துவம்*

52.மூலிகை குடிநீரும்
மூலிகைச்சாறும்

" தன்னுயிர் தந்து
மண்ணுயிர் ஏந்தும்
மூலிகை மருந்தே
விளங்குது சிறந்தே.! "

மூலிகை குடிநீர்

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிகட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.

ஒருலிட்டர் தண்ணீரில் அரைத்தேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,
முகத்தில் ஏற்படும் கருவளையம்,
தொண்டைக்கட்டு குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காய் தோடை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் மூன்று நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு கரைத்து வடிகட்டி குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம்,  மூட்டுவலி குணப்படும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து வடிகட்டி அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.!

இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு.
ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது.!
ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான்.
ஒருமுறை தயாரித்த நீரை
அதிகபட்சம் ஆறு மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.!
மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய் குடிநீரையே பயன்படுத்தலாம் அல்லது மண்பானை நீரை பயன்படுத்தலாம்.
சுத்திகரித்த நீரோ/ ஊட்டம் கலந்தநீரோ தேவையில்லை.!

தினம் ஒரு மூலிகைச்சாறு

திங்கள் - வாழைத்தண்டு
ஒரு சிறிய வாழைத்துண்டை வெட்டி ஒரு டம்ளர் அளவு வாழைத்தண்டுடன் 10 மிளகைப்போட்டு  சிறிய தட்டு உரலில் இடித்து, சாறெடுத்து வடிகட்டி அதோடு, ஒருத்தேக்கரண்டி தேனும் ,சாறளவு நீரும் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்,சிறுநீரகம் பலப்படும்.!

சொவ்வாய் -செம்பருத்தி
நான்கு செம்பருத்திப்பூவை பறித்து 10 சீரகம் சேர்த்து தட்டுக்கல் அல்லது மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொண்டு அந்த கலவையுடன் ஒருத்தேக்கரண்டி தேன் மற்றும் ஒருடம்ளர் நீர் கலந்து குடித்து வந்தால் இதயம் பலப்படும்.இதயநோய்,பெண்கள் மாதந்திர பிரச்சனைகள் குணமாகும்.!

புதன் - புதினா
இரண்டு கையளவு புதினா இலையோடு ஒருத்தேக்கரண்டி கொத்தமல்லி, 10 மிளகு,சிறிது இந்துப்பு போட்டு இடித்து சாறெடுத்து அல்லது அரைத்து அதோடு இரண்டு பங்கு நீர்சேர்த்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம்,மன அழுத்தம் குணமாகும்.!

வியாழன் - தூதுவளை
5 தூதுவளை இலையுடன் 10 மிளகு சேர்த்து நன்றாக இடித்து  300 மில்லி நீர் சேர்த்து வடிகட்டி, இரண்டுத் தேக்கரண்டி பனங்கற்கண்டு தூள் சேர்த்து குடித்துவந்தால் சளி,இருமல்,சுவாசகாசம் நீங்கும்.!

வெள்ளி -வல்லாரை கையளவு வல்லாரை கீரையுடன் ஒருத்தேக்கரண்டி பெருஞ்சீரகம் கலந்து இடித்து சாறெடுத்து அத்துடன் ஒருத்தேக்கரண்டி பனை வெல்லம் மற்றும் ஒரு டம்ளர் நீர்சேர்த்து குடித்து வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும். உடல் இறுக்கம் குறையும்,மூளை வலுவடையும்.!

சனி - கீழாநெல்லி
இருகையளவு கீழாநெல்லி இலையை பறித்து மைய்யாக அரைத்து 300 மில்லி பசுமோர் அல்லது நீர் கலந்து குடித்துவர கல்லீரல் பலமாகும்.கண்பார்வை தெளிவடையும்.!

ஞாயிறு - சிறிது முடக்கத்தான், சிறிது முருங்கை,சிறிது பசலி,சிறிது அகத்தி அல்லது உங்களுக்கு கிடைக்கும் வேறு ஏதேனும் மூன்று நான்கு கீரைகளை மொத்தமாக அரைத்து, அதனோடு தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து குடித்துவர உடல் வலி,எலும்பு தேய்மானம்,தலை சுற்றல் குணமாகும்.!

கற்றாளைச்சாறு

சோற்றுக்கற்றாளையை கழுவி தோல் நீக்கி உள்ளிருக்கும் சதை பகுதியை மட்டும் ஒரு டம்ளர் அளவிற்கு சிறிதாக வெட்டி எடுத்துக் கொண்டு, அதில் ஒரு எலுமிச்சைச் சாறு பிழிந்து ,இரண்டு கிராம்பு தட்டிப்போட்டு, நான்கைந்து  தேக்கரண்டி தேன்கலந்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து <10 நாட்கள்> குடித்துவந்தால் இறந்த செல்கள் வெளியேறும்,உடல் சூடு,தூக்கமின்மை,சிறுநீரக சோர்வு போன்ற வியாதிகள் குணமாகும்.!

எலுமிச்சை சாறு

ஒரு எலுமிச்சை பழச்சாறுடன், ஒருத்தேக்கரண்டு இஞ்சிச்சாறு, இரண்டுத் தேக்கரண்டி தேன்கலந்து 200 மில்லி நீர் கலந்து உணவிற்கு அரை மணிநேரம் முன்பு <10 நாட்கள்> குடித்து வந்தால் பித்த மயக்கம்,இரத்தசோகை ,உடல்சோர்வு போன்றவை மாறும்.!
குறிப்பிட்ட பிரச்சனை உள்ளவர்கள் அதற்கான மூலிகை சாறையே தினமும் குடித்து  வரலாம்.! மூலிகைச்சாற்றை  காலை உணவிற்கு குறைந்தது அரைமணி முதல் மூன்று மணி நேரத்திற்கு முன்பு குடித்துவிடுவது நல்லது.!
பச்சை மூலிகை கிடைக்காதவர்கள் காய்ந்த மூலிகைகளை இதே முறையில் கசாயமாக வைத்து குடிக்கலாம்.!
ஒரு தடவை தயாரித்த சாற்றை
4 மணி நேரம் வரை வைத்திருக்கலாம்.!

-ஏகப்பிரியன் DYT

தொடரும் …

amyogatrust.blogspot.in

🌾100% இயற்கை மூலிகை💥 தயாரிப்புகளுக்கு

AUM HERBALS
MOBILE & Whats app
9629368389

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...