I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: பிராண சிகிட்சை

Monday, 21 August 2017

பிராண சிகிட்சை

உயிர் மீட்கும் மருத்துவம்

45.பிராணனும் பிராத்தனையும்

" எல்லையில்லா பரம்பொருளே.! எங்கும் நிறைந்தவனே இறைவா.!
என் உடல்,மனம், ஆன்மாவின் ஆற்றலை மேம்படுத்தி, என்னை ஜோதியாய் ஒளிரச்செய்கின்ற,
யோகக்கலையை தந்த இறைவா,
உனக்கு நன்றி இறைவா.! "

நமது மன உறுதியை மேம்படுத்தவும், எல்லாம் முடியும் என்ற நம்பிக்கையை வளர்க்கவும் நமக்கு பிராத்தனை உதவுகிறது.!
கடவுள் பக்தர்கள் மட்டும்தான் பிராத்தனை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.!
இயற்கையின் ஆற்றலை உணரும் எல்லோரும் பிராத்தனை செய்யலாம்.! பிராத்தனை என்பது முதலில் ஒருவருக்கு என்ன தேவை என்பதை அவருக்கே உணர்த்துகிறது.! அடுத்து தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பையும் பிராத்தனையே வழங்குகிறது.! அதுபோலவே, ஒருவரின் பிராத்தனையை வைத்தே அவரின்
குணத்தை கண்டறியலாம்.!
எல்லோரும் நல்லா இருக்கணும் என்று வேண்டுவதற்கும், எனது குடும்பம் நல்லா இருக்கணும், நிறைய பணம் சம்பாதிக்கணும் என்று வேண்டுவதற்கும், நிறைய
வித்தியாசங்கள் உள்ளன.!
ஒன்று இறைநிலையை உணர்ந்த பிராத்தனை.! மற்றொன்றோ, இன்னும் அப்படி உணராத பிராத்தனை.!" எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும் மேன்மையடையட்டும்.! "
இந்தப் பிராத்தனையை உங்கள் வலது,இடது,மேல்ப்புறம்,கீழ்ப்புறம் என்று சுற்றிலும் ஒரு நாளைக்கு 100 முறை மனதில் கூறிக்கொண்டே வாருங்கள்.! மிகச்சில நாட்களிலேயே உங்களை சுற்றி ஒரு ஒளி பரவுவதை நீங்கள் உணருவீர்கள்.!
உங்களை சுற்றி உள்ள அனைவரும் நலமாக இருப்பார்கள்.!
நோயாளிகள்,முட்டாள்கள் ஏன் திருடர்கள் கூட உங்கள் முன் அமைதியாக,மகிழ்வாக,நலமாக இருப்பதாக உணர்வார்கள்.!
இதுவே எனக்கு வேலை வேண்டும்,
எனக்கு மனைவி வேண்டும்,பிள்ளை வேண்டும்,பதவி வேண்டும். என்று; தினமும் பிராத்தனை செய்து கொண்டே இருப்பவனை சுற்றி இருப்பவர்களை பாருங்கள்.! அவரை சுற்றி இருப்பவர்களும் ஒரு பாதுகாப்பின்மையையும், துன்பத்தையுமே உணருவார்கள்.! இதற்கான காரணம் யாதெனில், நமது உள்ளிருப்பே உலகத்தில் பரவும்.!
இதுவே விதி.!அன்பு,ஆரோக்கியம்,அமைதியை வேண்டுபவனுக்கு மட்டுமே அது கிடைக்கும்.! பணம்,பொருள்,கல்வி,வேலை என்று கேட்பவனுக்கு அது கிடைக்கும்.!
ஆனால்,அவனை சுற்றி அமைதியோ,ஆரோக்கியமோ,அன்போ வசிக்க இடமின்றி போய்விடும்.!
இந்த அரசியல் வாதிகளையும்,சினிமாக்காரர்களையும்,முதலாளிகளையும் பாருங்களேன் …
அவர்கள் எப்பொழுதும் ஒருவித இறுக்கத்தோடே உலவுவார்கள்.!
ஆனால்,அவர்களிடம்,பணம்,பொருள்,பதவி அனைத்தும் உள்ளது.!
ஆனால்,நிம்மதி பெயரளவிற்கும் இல்லை.!
உதடுகள் சிரித்தாலும் உள்ளம் அழுது கொண்டிருக்கும்.!
ஆகவே,நமது பிராத்தனை என்பது நம்மை நிறைவை நோக்கி அழைத்து செல்வதாய் இருக்க வேண்டுமே அல்லாது சஞ்சலத்தில் உலவ செய்வதாய் அமைந்துவிடக் கூடாது.! என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.! அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத தேவை என்னவெனில் உணவு, உடை,உறைவிடம்,பணி,ஆரோக்கியம்,மகிழ்ச்சி.! இவற்றை நேரடியாக இறைநிலையிடம் கேட்டுப் பெறலாம்.!
ஆனால்,அதற்கு சில விதிமுறைகள் உள்ளது.!
இரகசியம் நூலில்
ரோண்டா பைர்ன் சில வழிகளை கூறுகிறார். அதன்படி செய்தால் நமது பிராத்தனை,ஆசை,குறிக்கோள் அனைத்தையும் எளிதில் அடையமுடியும்.! அதற்கு  நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.! அதாவது நமது எந்தப் பிராத்தனையும், ஆசையும் நிறைவேற அதில் எந்த எதிர்மறை வார்த்தையும் இடம் பெறக்கூடாது.!
உதாரணத்திற்கு இப்ப ஒருவருக்கு மூட்டுவலி இருக்கிறது. என்றால், அவர் பிராத்தனை செய்யும் போது எனது மூட்டுவலி போக வேண்டும்.! என்று; பிராத்தனை செய்யாமல், எனது கால்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.! என்று பிராத்தனை செய்ய வேண்டும். அதுபோலவே, ஒருவருக்கு இருக்கும் படப்படப்பு,இரத்த அழுத்தம்,மாரடைப்பு போன்றவை குணமாக வேண்டுமானால் …
எனது மனநிலை அமைதியாக இருக்க வேண்டும், எனது  இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும், எனது மார்பு ஆரோக்கியமாய் இயங்க வேண்டும். என்று பிராத்தனை செய்ய வேண்டும். எந்தப் பிராத்தனையிலும் எதிர்மறை வாக்கியங்கள் இடம் பெறவேக் கூடாது. இப்படி பிராத்தனை செய்யும் போது, நமது எண்ணத்தின் அதிர்வு நேர்மறையாக இருக்கும்.!
இதனால்,நமது எண்ணம் போல் நல்லது நடக்கும்.! இதன் அடுத்தபடியாக  நமக்கு நோய் இருக்கும் போதே என் கால்களை ஆரோக்கியமாக்கிய இறைநிலைக்கு நன்றி,எனது இதயத்தை ஆரோக்கியமாக்கிய இறைநிலைக்கு நன்றி என்று, தொடர்ந்து பிராத்தனை செய்ய வேண்டும். இந்த நேர்மறை ஆற்றலால் நமது பிராத்தனை உடனே நிறைவேறும்.!
இது உடல் ஆரோக்கியக் குறைபாட்டிற்கு மட்டுமல்ல பணக்குறைபாடு,மனக்குறைபாடு என்று எல்லாவற்றுக்கும் இதே முறையில் நேர்மறை எண்ணங்களாக பிராத்தனை செய்து நாம் நினைத்த காரியம் எதுவானாலும் அதில் முழுமையான வெற்றியடையலாம்.! பிராத்தனையில் மட்டுமல்ல எப்பொழுதும் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளிலும் கூட நேர்மறை வாக்கியங்களாகவே பயன்படுத்த வேண்டும்.! நான் உன்னை எப்பவும் பிரியமாட்டேன் என்று சொல்லாமல்,எப்பவும் உன்னுடனே இருப்பேன் என்றும்,சிறுவர்களிடம் அடம்பிடிக்காதே என்று கூறாமல் - நான் சொல்வதை ஒழுங்காக கேள் என்றும்,தேர்வில் தோற்று விடாதே  என்று கூறாமல் - கவனமாக படித்து தேர்வில் வெற்றி பெறு என்றும் கூற வேண்டும்.!
இப்படி நேர்மறை வாக்கியங்களை எங்கும் பயன்படுத்தும் போது நம்மில் மட்டுமல்லாமல் … நம்மை சுத்தி இருப்பவர்களின் செயல்,உடல் ஆரோக்கியம்,மனநிலை அனைத்திலும் மிகப்பெரிய மாற்றம் உருவாகும்.!
அடுத்து பிராண சிகிட்சை பற்றி பார்ப்போம்.!

பிராண சிகிட்சை
-------------------
பிராணசிகிட்சை என்பது ஒரு ஆரோக்கியமான மனிதரால் 
ஆரோக்கியக் குறைபாடு கொண்ட ஒருவருக்கு செய்யப்படுவது.!
பிராண சிகிட்சையை ஒருவர் தனது எண்ணத்தால்,மூச்சால்,தெடுதலின் மூலம்,பார்வையின் மூலம் செய்யலாம்.! இந்த சிகிட்சை முறை உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள், இங்கிருந்தே  500 அல்லது ஐயாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள உங்கள் உறவினருக்கோ,நண்பருக்கோ வரும் வயிற்றுவலியை  குணப்படுத்தலாம்.!
நம்புங்கள் உலகில் உள்ள பிராண இயக்கம் முழுமையும் - கடலில் உள்ள பல்லாயிரம் கிலோமீட்டர் நீர் துளிகள் ஒருதுளி இன்னொரு துளியோடு தொடர்பில் இருப்பது போலவே பிராண ஆற்றலும் தொடர்பில் உள்ளது.!
அதனால்,நீங்கள் இங்கிருந்து உங்கள் மூச்சை தூண்டி செய்யும் ஒரு செயல் மூலம் கடல் கடந்து எங்கேயோ இருக்கும் ஒரு மனிதருக்கு கூட குணமளிக்க முடியும்.!
இந்த ஆற்றல் எடுத்த உடனேயே ஒரு மனிதருக்கு வந்து விடுவதில்லை.! அதற்கு படிப்படியாக, முறையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.! முதலில் பிராணசிகிட்சை அளிப்பவர் ஆரோக்கியமானவராகவும் தினமும் யோகா,தியானம் மற்றும் முறையான உணவுப்பழக்கத்தையும் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும்.!
உங்களுக்கு இந்த இயல்புகள் இருந்தால், நீங்களே வெற்றிகரமான பிரணசிகிட்சை நிபுணராகலாம்.!
அதற்கு முதல் படியாக நேரடியாக நமது அருகில் உள்ள ஆரோக்கியக் குறைபாடு கொண்டவர்களை குணப்படுத்தி பயிற்சி செய்ய வேண்டும்.!
ஒருவருக்கு வயிற்று வலியெனில், முதலில் இரண்டு லிட்டருக்கு மேல் நீர் பிடிக்கும் ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் அளவிற்கு நீர் எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்டவரை ஒரு கட்டில் அல்லது பாயில் படுக்க வைத்து வயிற்றுப் பகுதியில் ஆடையை நீக்கிவிட்டு உங்கள் வலது  உள்ளங்கையின் விரல்களை சற்று விரித்த நிலையில், வயிற்றிலிருந்து ஒரு ஜான் உயரத்திற்கு மேல் வைத்துக்கொண்டு, கையை ஒரு பஞ்சாக பாவித்து வயிற்றிலுள்ள வலியை கையில் உறிஞ்சுவதைப் போல பாவித்துக் கொண்டே  கையை மேல் நோக்கி எடுத்துக்கொண்டு வந்து பாத்திரத்தில் உள்ள நீரில் மூன்றுமுறை
உதற வேண்டும்.!
அப்பொழுது வயிற்றிலிருந்து உங்கள் கையால் உறிஞ்சப்பட்ட
வலி பாத்திரத்தில் உள்ள நீரில் இறங்கி விட்டதாக பாவித்துக்கொள்ளவும்.!
இப்படி 3 முதல் 5 முறைகள் செய்துவிட்டு பிரபஞ்ச ஆற்றல் நமது கைகளில் இருப்பதாக பாவித்து, பாதிக்கப்பட்ட இடத்தில் 3 முதல் 5 முறை  ஒரு ஜான் இடை வெளியில் பிரபஞ்ச ஆற்றலை செலுத்த வேண்டும். உடனே வயிற்றுவலி குறைந்துவிடும்.!
இதுபோலவே கழுத்து,முதுகு,மூட்டு வலிகளுக்கும்,காய்ச்சல்,தலைவலி போன்ற எல்லாவற்றுக்கும் செய்யலாம்.!
இதுபோல் நமக்கு நாமே கூட செய்யலாம்.! இது மிக பயனளிக்கும்
ஒருமுறை. நான் பல ஆரோக்கியக் குறைபாடு கொண்டவர்களுக்கும் இதைசெய்து நிவாரணமளித்துள்ளேன்.! இதுபோல் உச்சந்தலையில் கையை வைத்து தொட்டு பிராண சக்தியை உடலில் செலுத்துவதாக பாவித்து ஹீலிங் செய்தாலும்  உடனடியாக மிகுந்த பயன் கிடைக்கும்.!
நீண்ட நாள்ப்பட்ட ஆரோக்கிய குறைபாடுகளுக்கு இதை தொடர்ந்து பலநாட்கள் செய்துவந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.!
இதுபோன்ற முயற்சிகளில் இறங்குபவர்கள் பூச்செடி,மரங்களை அடிக்கடி பட்டும் படாமல் தொட்டு அதன் மாறுபாட்ட தன்மைகளை உணர முயற்சி செய்ய வேண்டும்.!
இதை எந்த அளவிற்கு நம்மால் வெற்றி கரமாக செய்ய முடிகிறதோ, அதைப்பொறுத்து, நம் கைகளுக்கு இயற்கையின் ஈர்ப்பு ஊடுருவி பாயும் ஆற்றல்  வளரும்.!

-ஏகப்பிரியன் DYT

தொடரும் …

aumherbals.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...