*உயிர் மீட்கும் மருத்துவம்*
37.சிற்றின்பம்
கடந்து பேரின்பம்
அடைவோம் …
" மலரின் மலர்ச்சியில் …
குயிலின் குரலில் …
மனதின் மௌனத்தில் …
நிலவின் நிழலில் …
தென்றலின் தீண்டலில் …
உள்ளக உறைதலில் …
காண்பது காதலின்பம்
அது அகன்றால்
அடைவது பேரின்பம்.! "
வாலிப பருவத்தில் எல்லா உயிரினங்களுக்குள்ளும் ஒரு பட்டாம்பூச்சி வட்டமிடத்தான் செய்கிறது.! இது உலக சுழற்சியை முறைப்படுத்த இயற்கை செய்துள்ள பழைய ஏற்பாடு.! பதின் பருவத்தில் தான்
உடலின் அனைத்து சக்தி வெளிப்பாடுகளும் முழுமையடைகின்றன.! அப்பொழுது எதிர்பாலின ஈர்ப்பு என்பது இயல்பாக அனைவருக்குள்ளும் வெளிப்படத்தான் செய்யும்.! ஏனெனில்
எப்பொழுது குடம் நிறைகிறதோ
அப்பொழுது அது நிரம்பி வழியும்.!
கண்டுக்காமல் விடும் போது அது
சுற்று புறத்தில் சுழன்றொடி வீணாகும். சரியாக முறையாக பராமரித்து சேமித்தால் வாழ்வையே ஆரோக்கியமாக்கி வசப்படுத்தும்.!
வாலிபத்தில் முடியை ஒரு வித
கோமாளித்தனமாக வெட்டிக் கொள்வது, சாளரம் வைத்த சட்டைகளைப் போடுவது,
கால் சட்டையை பின்புற பகுதி
தெரியுமாறு தாழ்த்தி போடுவது,
நண்பர்களோடு அதிக நேரத்தை செலவிடுவது,பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சொல்வதை கேளாமல்
தானாகவே ஒருவித அகங்காரம் அல்லது முட்டாள் தனத்துடன் தன்னை உயர்ந்த நிலையில் இருத்திக் கொள்வது.!
போன்ற செயல்கள் பல பிள்ளை
களிடம் அவர்களையும் அறியாமல்
தானே வந்து ஒட்டிக்கொள்ளும்.!
இது இயற்கையின் இயல்புதான்.!
என்னிடம் ஒரு பள்ளி ஆசிரியர் இப்படி கூறினார் " பசங்க எல்லாம் பென்சில் பிட் ,லோ ஹிப் என்று கலக்க
பெண் பிள்ளைகள் ஒன்பதாவது
வகுப்பிற்கு வரும்போதே பையில்
கண்ணாடி,முகபசை,வாசனை பொடி
போன்றவற்றோடே வருகிறார்கள் "
என்று; அங்கலாய்த்தார்.!
இதனால் தான் குஷ்பூ போன்ற
சமூக சேவகிகள் வாலிப பிள்ளைகளை பாதுகாக்க வேறு ஒரு பொருளையும்
கொடுத்து அனுப்புவது பாதுகாப்பானது.! என்று பலகாலமாக சொல்லி வருகிறார்கள் போல.!
பருவ வயது பிள்ளைகள் எல்லோருக்குமே உடலியல் மாறுதல் ஆரம்பித்து விடுகிறது. ஆனாலும், இதில் பாதிக்கும் மேற்பட்ட பிள்ளைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தல்,தங்கள் குறிக்கோளிற்காக உழைத்தல் போன்ற
வற்றை செய்து வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.!
மீதி உள்ளவர்களுக்கு படிப்பில் சரியான பிடித்தமும் குறிக்கோள் என்றால் என்னவென்ற தெரியாமலும் இருப்பதால், பிஞ்சிலே பழுத்து பருவத்திலே அழுக தயாராகி விடுகிறார்கள்.!
பொதுவாக படிக்கும் பிள்ளைகளுக்கு 14 முதல் 22 வயதுவரை மிகமிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.! இந்தப் பருவத்தில் தான் படிப்பு மற்றும் குறிக்கோளை நோக்கி வேகமாக பயணம் செய்ய வேண்டும்.!
இதை தவிர்த்து எதிர்பாலின கவர்ச்சி, நண்பர்களுடன் ஊர்சுத்துதல்,சினிமா மோகம், மாடல்களைப்போல உடை உடுத்துவது என்று பல திசைகளில்
கவனம் செல்லும் போது வாழ்க்கை
துயரம் நிறைந்ததாய் மாற எல்லா வாய்ப்புகளும் வந்துவிடும்.!
பதின் பருவ பிள்ளைகள் லட்சியம்,கல்விகற்றல் என்ற இரண்டு விசயத்தையும் தீவிரமாக்கிவிட்டு
தேவையற்ற உணவு,உடை,எதிர்பாலின ஈர்ப்பு
போன்றவற்றை உதாசினப்படுத்திஉழைத்தால் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் மிகப் பெரிய சாதனையாளர்களாய் வருவார்கள்.!
ஒருவரின் வாழ்க்கை என்பது நூறாண்டுகள் என்று வைத்துக் கொண்டால் வெறும் 36500 நாட்கள்
மட்டுமே இதில் வாலிப நாட்கள்
3650 நாட்கள்.! இந்தப் பருவத்தில் தான் படிக்கவும் நமக்கான துறையை தேர்வு செய்யவும் வேண்டும்.இதே பருவத்தில் தான்
பாலியல் தூண்டுதல் உள்ளிட்ட
பல்வேறு உடல்,மன கோளாறுகளை
கடந்து வெற்றி பெற வேண்டியுள்ளது.!
" இந்தப்பருவத்தில் பெற்றோரின்
அரவணைப்பையும் ஆலோசனைகளையும் பெறாமல்
எந்த ஒரு முக்கிய முடிவையும்
எடுக்க மாட்டேன் " என்று; உறுதியாக கூறும் பிள்ளைகள் பாக்கியவான்கள்.!ஏனெனில் எல்லா பெற்றோருமே இருபதை
கடந்து தான் 50 க்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இருபதின்
தூண்டல்களும் அதை கடந்து செல்லும் வழிமுறையும் முழுதாய் தெரியும்.!
ஆனால்,பதின் பருவத்தினருக்கு
ஐம்பதின் மனநிலையையும் அச்சத்தையும் முழுதாக
புரிந்துகொள்ள முடியாது.!
ஒரு உண்மை என்னவெனில்
ஒரு ஜீவனின் பாலுணர்வு ஈர்ப்பே
உலகில் உள்ள அத்தனை விசயங்களையும் விட வீர்யமானது.!
இதை சரியாக கையாள தெரிந்தால் உலகையே இவற்றால் புரட்டிப்
போட முடியும்.! சரியாக கையாள
தெரியாதபோது இவை மனிதனின்
வாழ்க்கையையே புஷ்வானமாக்கி விடும்.! நன்றாக புரிந்து கொள்ளுங்கள் எதிர்பாலின ஈர்ப்பு,அன்பு, நட்பு போன்றவை ஒரு மனிதனுக்கு வந்தால் அவன் முழு
ஆரோக்கியமானவன்.! அவனிடம்
உள்ள அந்த ஆரோக்கியத்தை
உள்முகமாக திருப்பினால் நிச்சயம்
மிகப்பெரிய சாதனைகளை செய்வான்.! சித்த மருத்துவத்தில்
நாள்ப்பட்ட நோய்களுக்கு மருந்து கொடுக்கும் போது 48 நாட்கள்
தாம்பத்ய விரதம் அனுசரிக்க கூறுவார்கள். ஏனென்றால்,விந்துவை அடக்கி வைத்து உடலில்
சேகரிக்கப்படும் ஆற்றலை தனது
நோயை குணமாக்க நமது உடல்
எடுத்துக்கொள்ளும்.! அதனால்,
நோயும் விரைவாய் குணமாகும்.!
இளமை பருவத்தில் ஒரு இளைஞன் எவ்வளவுக் கெவ்வளவு
விந்தை சேமித்து வைத்தானோ
அந்த அளவிற்கு தனது வயதான காலத்தில் கூட உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாய்
விளங்குவான்.!
பதின் பருவ பிள்ளைகளுக்கு புலனடக்கம் உருவாக யோகா பெரிதும் உதவும்.!
யோகத்தினால் புலன்வழி கீழான நிலைக்கு செல்லும் … ஆற்றலை மாற்றி மேல்நோக்கி கொண்டு
சென்று நமது குறிக்கோள் அல்லது ஞானத்தை அடையலாம்.!
இது ஒரு வழி.!
இன்னொரு வழியில் ஓசோ போன்ற சில சாமியர்கள் என்ன
கூறுகிறார்கள் என்றால் "ஆசை,காதல், காமம் எதையும்
அடக்க வேண்டாம்.
அப்படி அவற்றை அடக்க முயல்பவர்களுக்கு
உடலும் மனதும் எப்பொழுதுமே
ஒரு அழுத்த நிலையில் இருக்கும்.
இதனால் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய துன்பம் ஏற்படும். அதனால் உனது ஆசை,ஈடுபாடு எவற்றின் மீது இருந்தாலும் அதை பூரண விழிப்புணர்வு நிலையில் அனுபவித்து விடு. அப்படி செய்யும் போது
உனக்குள் எந்த அழுத்தமும் எதிர்ப்பார்ப்பும் இருக்காது.!
உன் உடலும் மனமும் புதிய பரிமாணத்தில் இயங்கும். வாலிப வயதில் குடிக்க வேண்டும் என்று தோன்றினால் குடி,உடலுறவில் ஈடுபட வேண்டுமானால் முழு விழிப்புணர்வோடு அதில் ஈடுபடு, பெற்றோர் மீது வெறுப்பு வருகிறதா, சமூகத்தின் மீது கோபம் தோன்றுகிறதா? அதையும் வெளிப்படையாக கூறு.! இவற்றை உள்ளே அடக்கி வைத்தால் உன் மனநலம் பாதிக்கப்படும்.! இவற்றை அனுபவித்து கடந்துவிட்டால்
நீ உனது குறிக்கோள் எதுவோ,அதை நோக்கி வேகமாக பயணம் செய்யலாம்.! "ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாக படிக்க வைக்காதீர்கள்.! இருபாலினத்தவரையும் ஒரே பள்ளியில் ஒரே விடுதியில் தங்க வையுங்கள்.!
ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு வந்தால் அவர்கள் இணைந்து கொள்ளட்டும்.! அதில் என்ன இருக்கிறது … என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.! பிறகு அவர்கள் தங்கள் படிப்பை சிறப்பாக முடித்து அடுத்த இலக்கை நோக்கி பறந்து விடுவார்கள்." ஆனால்,இப்பொழுது இங்கு என்ன நடக்கிறது என்றால் 15 - 16 வயது முதல் பாலுணர்வால் தூண்டப்பட்டு தனது கல்வியோடு எதிர்பாலினத்தினரை கவரவும் இந்த வயதில் மாணவர்கள் முயலுகிறார்கள்.! காதல் திரைப்படங்கள், காதல் பாடல்களை கேட்டு உருகுகிறார்கள், கல்லூரி, சமூக ஊடகங்கள்,பொது இடங்கள் என்று எங்காவது தனக்கு ஏற்ற துணை கிடைக்குமா? என்று; அங்கலாய்க்கிறார்கள்.! இறுதியில் ஒரு வழியாக 15 வயதில் பாலுணர்வு தோன்றிய தங்கள் மகனுக்கோ மகளுக்கோ 25 - 35 வயதில்,
ஏன் சிலர் நாற்பது வயதில் கூட திருமணம் முடித்து வைக்கிறார்கள்.!
இதை போன்ற முட்டாள் தனம் உலகத்தில் எதுவும் இல்லை.! 20 வயதில் பாலுணர்வு உச்ச நிலையில் இருக்கும். அதன் பிறகு அதன் வீர்யம் படிப்படியாக குறைந்து 30 வயதில் காயடிக்கப்பட்ட காளைகளாய் ஆன பிறகு அவர்களுக்கு திருமணம் என்ற ஒன்றை செய்து வைக்கும் பொழுது.
பெரும்பாலும் அது இனிக்கும் இல்லறமாக இல்லாமல் தங்களை கவனிக்க தன்னோடு ஒருவர் இருக்கிறார்.! என்ற வெறும் பாதுகாப்பு உணர்வையும்
நீ இதை செய்தால் நான் இதை செய்துதருவேன்.! என்ற வெறும்
ஒப்பந்த வாழ்வாய் மட்டுமே ஆகிவிடுகிறது.! "
ஓசோ கூறியதாக அவரின் நூலில் எழுதப்பட்டுள்ள இந்த கருத்தை என்றைக்கு நான் படித்தேனோ அன்று முதல் ஓசோவின் நூல்களை படிக்கும் எனது கோமாளித்தனத்தை நிறுத்திவிட்டேன்.! யோகாவின் நிஜக்கருத்து என்ன வெனில் உடல் இன்பத்தின் வழியில் செல்லும் உடலையும் மனதையும் உள்முகமாக திருப்பி நமது இலட்சியத்தை அடைவதுதான்.! ஆனால்,ஓசோ போன்றோரின்
வழி காட்டுதல்களால் அது ஒரு காலமும் சாத்தியமாகாது.! பள்ளிப் பருவத்திலேயே புலனின்பத்தின் வழி செல்லுதல் என்பது ஒரு, ஒரு வழிப்பாதையாய் தான் இருக்குமே அல்லது காதல் கடந்து லட்சியத்திற்கு என்றோ அல்லது காமம் கடந்து கடவுளுக்கு என்றோ கூறுவது.!
வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே.!
ஏனெனில் பதின் பருவத்தில் ஒருவன் சிற்றின்ப ஆசைகளான, கலவி,குடி போன்ற எவற்றின் பின்னால் சென்றாலும் அவற்றை கடந்து வந்து சாதிக்க வேண்டும். என்று எண்ணமாட்டான்.! பெரும்பாலும் அந்த சிற்றின்ப சேற்றிலேயே சிக்கி வீழ்வான்.! என்பதே உண்மை.! அது மட்டுமின்றி ஓசோ போன்ற ஞானிகளின்
கூற்றை கேட்டால் இந்தியாவிற்கு என்று இருக்கும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு,குடும்ப வாழ்வு முறை, பெற்றோர், பிள்ளைகளை பராமரித்தல் போன்ற அனைத்தும் கேள்விக்குறி ஆகிவிடும்.! ஏனெனில்,எனக்குத் தெரிந்து பெண்களின் பின்னால் திரிந்தவர்கள்,குடிகாரர்கள், கோடிகோடியாய் ஊழல் செய்து பணம் சேர்த்தவர்கள் எல்லாம்
போதும் என்று அதை கடந்து வந்ததை நான் பார்த்ததே இல்லை.! வரலாற்றில் கூட கலிங்கப் போரிற்கு பின் யுத்தவெறி அடங்கிய ஒரே ஒரு அசோகரை மட்டுமே பார்த்தோம்.! கஜினி,ஔரங்கசீப்,நோப்போலியன் போன்ற எவரும் தான் ஆரோக்கியமாக இருந்த காலத்திலேயே தனது நாடுபிடிக்கும் ஆசையை விடவேயில்லை.!ஷாஜகான் கூட பல பெண்களை மணம் முடித்து சிற்றின்ப சிகரமாய் விளங்கி பிறகு தனது மூன்றாவதோ - நாலாவதோ மனைவிக்காக
தாஜ்மஹாலை கட்டினானே அல்லாது. சிற்றின்பம் போதும் என்று நிறுத்தி நாட்டுக்கு வேறெந்த நன்மையும் செய்யவில்லை.!
ஆனால்,பிரம்மச்சாரியான விவேகானந்தர்,பசும்பொன் முத்துராமலிங்கம்,காமராஜர்,அப்துல்கலாம் போன்ற இல்லறத்தை துறந்தவர்கள் செய்த சாதனைகளை வேறெந்த இல்லற அரசியல், ஆன்மீக, விஞ்ஞான தலைவர்கள் செய்யவில்லை.!
ஆகவே ஓசோ போன்றோர் கூறும் தாந்த்ரா முறைகள் தங்கள் சிற்றின்ப தேடலை தொடர்ந்து நிகழ்த்த சில பேருக்கு கிடைத்த தந்திரமாக உபயோகப் படுமே அல்லாது உருப்படியான காரியங்கள் எதையும் செய்ய உதவாது.! ஓசோ கூறுவது லட்சத்தில் ஒருவருக்கு பயனளிக்கலாம்.!
ஆனால், அனைவருக்கும் பயன்படாது.! நான் மூன்று வயதுவரை தாய்ப்பால் குடித்து வளர்ந்ததாக எனது தாயார் கூறுவார்கள்.! அதனால் தானோ என்னவோ பதின் பருவத்தில் சக்தியின் பிழம்பாய் நான் விளங்கினேன், படிப்பு மட்டும் சரியாக வரவில்லை … அதனால் என்ன, யோகா,கபடி,தற்காப்புகலை போன்றவற்றில் இந்திய அளவில்
பல பரிசுகளைப் பெற்றுவந்தேன் …
வாலிப வயதின் தூண்டல்கள்
என்னை பல நேரங்களில் திசை மாற்றிச்சென்றதுண்டு … ஈர்ப்பு,நட்பு,காதல் என்று பல தளங்களில் மனது அலைபாயும், பிள்ளைகளை ஒரு குறிக்கோளை நோக்கி செல்ல பழக்க வேண்டும் …
என்ற ஞானம் கூட எனது பெற்றோருக்கு கிடையாது.!
ஆனாலும், எனது கலை திறமையால்
பல எதிர் பாலினத்தினரை என்னை நோக்கி ஈர்க்கும் வாய்ப்பு இருந்தும், எனது கூச்ச சுபாவத்தின் காரணமாக அவற்றையெல்லாம்
நான் தவிர்த்து வந்தேன்.!
என் வாலிப வயதில் எனக்கு ஒரு மிகப்பெரிய உடல் பிரச்சனை இருந்தது.இரவில் தூங்கும் போது இரண்டு நாட்களுக்கொரு முறை மூலசக்தி வெளியேறிவிடும்.!
யோகாவில் இதை மிக சுலபமாக சரியாக்கலாம் என்பது எனக்கு அன்று தெரியாது. அதோடு யாரிடமும் இதைப்பற்றி கேட்கவும் தயக்கமாக இருந்தது.! ஒருநாள் அய்யா, ஆசனா ஆண்டியப்பன் அவர்களின் யோகக்கலை என்ற நூலில் மூலாதரத்திலிருந்து
சகஸ்ராககாரத்தை நோக்கி என்ற கட்டுரையில் தினமும் பத்ராசனம்,சிரசாசனம் மற்றும் குண்டலினி தியானத்தை செய்து வந்தால் ஆண்,பெண் ஜனன உறுப்பு பிரச்சனைகள் அனைத்தும் சீராகும் என்ற கட்டுரையை படித்தேன். அதன் படி சில நாட்கள் பழகியும் தீர்வு கிடைக்கவில்லை.!
பிறகு அதே பயிற்சிகளோடு இரவில் தூங்கும் முன் குளித்துவிட்டு சைவ உணவை மட்டுமே இரவு உணவாக உண்டு விட்டு படுத்துப் பார்த்தேன். இதில் ஆச்சரியப்படும் விதமாக எனக்கு இருந்தப் பிரச்சினை சரியாகிவிட்டது.! அதன் பிறகு மாதத்திற்கு ஒரு முறை அதுவும் சரியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு கனவு வரும் அதோடு மூலசக்தியும் போய்விடும்.!
இதை எப்படி தடுக்க என்று யோசித்தபோது கனவு வந்தவுடனேயோ அல்லது பாதியிலேயோ எழுந்துவிட்டால் இதை தடுக்கலாம். என்று தீர்மானித்து
பல மாதங்கள் முயன்று பார்த்தேன். அதுவும் தோல்வியில் முடிய … ஏன் ஞாயிறு அதிகாலையில் மட்டும் இது நிகழ்கிறது, என்று ஆராய்ந்ததில் அன்றுதான் நான் காலை ஆறு மணிவரை தூங்குவது தெரிந்தது மற்ற
நாட்களில் யோகா செல்வதற்காக ஐந்து மணிக்கே எழுந்து விடுவேன். பிறகு ஞாயிறும் 5 மணிக்கே எழ ஆரம்பித்ததும்.! இந்தப்பிரச்சனை தீர்ந்தது.ஆனாலும், 6 மணி வரை என்றாவது தூங்கினால் போச்சு கெட்ட கனவு வந்துவிடும்.!
எனது திருமணத்திற்கு பிறகு இந்தப் பிரச்சனையே இல்லை.! ஆனால், மனைவியை பிரிந்து சென்னையில் பணிபுரியும் காலத்தில் மீண்டும் இது தலைகாட்டியது. நானும் ஒவ்வெரு முறையும் கனவின் பாதியோடு எழ முயல்வேன். முடியவே முடியாது.!
சென்ற மாதம் ஒரு ஆய்விற்காக 30 நாட்கள் இல்லறத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தேன் …சென்ற ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முன்பு வருவதைப்போன்ற ஒரு கெட்ட கனவு வந்தது … கனவு ஆரம்பித்த முதல் நிமிடமே நான் எனது படுக்கையில் இருந்து சட்டென்று எழுந்து அமர்ந்து, வேட்டியை தொட்டுப் பார்த்துகொண்டு … மிகமிக ஆனந்தம் கொண்டேன்.! ஏனெனில், எனது உடலும் மனதும் அன்றுதான் எனது முழு கட்டுப்பாட்டில் வந்ததை உணர்ந்தேன்.! இப்பொழுது எனது உடலில் சேகரிக்கப்பட்ட மூல ஆற்றலிலுள்ள அத்தனை விட்டமின்களும் தாதுப்பொருள்களும் எனது உடலை இன்னொரு பரிமாணத்தில் இயங்க செய்வதை உணர்கிறேன்.!
மூலசக்தியை இழந்து கடவுளை உணரலாம் என்பதோ அல்லது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்றோ
கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது இப்பொழுது மிக தெளிவாக புரிகிறது.!
சிற்றின்ப வேட்கையை சரியாக கையாள தெரியாதவரை பேரின்ப அனுபவம் ஒன்றுள்ளது என்பதே ஒருவருக்கும் தெரியாமல் போய்விடும்.!
மூலசக்தியை சேகரிக்கும் ஆற்றல் கொண்டவர்களே சாதனையாளர்களாகவும்
உடல் ஆரோக்கியமிக்கவர்களாகவும் விளங்குகிறார்.!
நொந்து கொட்டவர்கள் அதன் பின் வரும் சோர்வான மயக்கத்தை இதுதான்
ஞானம், இதுதான் சுதந்திரம் என்றெல்லாம் நினைத்து ஏமாந்துவிடுவதோடு பிறரையும் கெடுக்கிறார்கள்.!
*ஆதலால் பதின் பருவ தூண்டல்களை* *கடந்து*
*பல்வேறு சாதனைகளை* *செய்யுங்கள் இளையோர்களே*
-ஏகப்பிரியன் DYT
தொடரும் …
100% 🌿இயற்கை
மூலிகை 🌷தயாரிப்புகளுக்கு
amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in
You tube - amyogatrust
yoga for all
No comments:
Post a Comment