I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: யோகம் தந்த வாழ்வு

Friday, 25 August 2017

யோகம் தந்த வாழ்வு

*உயிர் மீட்கும் மருத்துவம்*

51.யோகத்தால் வாழ்வு பெற்றவர்கள் …

" யோகமெனும் கடலில் நீந்தி
வாழ்வெனும் கரையை அடைந்த
தேகமது வாழ்க வாழ்க …
வானமது வாழ்த்த வாழ்க.! "

தேவியும் சாந்தியும் 

இன்றைய நவீன காலத்தில் விஞ்ஞானம் இத்தனை வளர்ந்த காலத்திலும் சிலர் உடலை வளைத்து நெளித்து சுருட்டி யோகாசனம் செய்வதைப் பார்க்கும்போது பலருக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், அப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வாடிக்கையாக சக்கரைக்கு மூன்று இரத்த அழுத்தத்திற்கு இரண்டு கொழுப்பிற்கு ஒன்று தைராய்டிற்கு ஒன்று என்று பல வண்ண மாத்திரைகளை வளைத்து வாயில்  போட்டுக் கொண்டு … இதில் சக்கரை இருக்கு ,இதில் கொழுப்பிருக்கு, இதில் உப்பிருக்கு என்று பல முக்கிய உணவுகளை தவிர்த்து  குற்றுயிராக வாழும்,  நவீன  மருத்துவம் என்று கூறப்படும் அலோபதி மருத்துவத்தின் பாதுகாப்பில் வாழும் நவயுக ஞானிகள் அனைவருக்கும் இக்கட்டுரை சமர்ப்பணம்.!

வினைப்பயன் இருப்பின் இதிலிருந்து தெளிவுபெறுங்கள்.!  இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உணவுகளையும் மனிதன் சாப்பிடலாம்.   உடல் அதன் சக்தியை உறிஞ்சி சக்கையை வெளியேற்றிவிடும்.மனிதனால் உருவாக்கப்பட்ட  அத்தனை நோயையும் உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும். நம்புங்கள் இதுதான் உண்மை.!  தேவை பொறுமையும்  விடாமுயற்சியும் தான்.!  அப்படி விடா முயற்சியால் தனது பிணியை வென்ற   இரண்டு சாதனை பெண்களை முதலில் உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.! முதலாமாணவர் தேவி.! இவர் குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்தவர். தனது 23 வது வயதில் இரண்டாவது பிரசவத்தின் போது ஏற்பட்ட கடுமையான உடல் அதிர்ச்சியின் காரணமாக நடக்கவும் எழுந்து நேராக நிற்கவும் முடியாமல்  அவதிப்பட்டதோடு அலோபதி மருத்துவத்தால் என்ன வியாதி, என்றுகூட கண்டறிந்து கூறமுடியாமல் ஒருவருடம்  அலைக்கப்பட்டு, இறுதியில் எங்களால் முடியாது யோகாசனம், பிசியோதெரபி போன்ற எதிலாவது தீர்வு கிடைக்கலாம்.! என்று, கைவிடப்பட்ட தேவியை பத்துநாட்களிலேயே அவரின் விடாமுயற்சியுடன் கூடிய யோகாசனப் பயிற்சி    50 சதவீதம் குணப்படுத்தியது.! முதலில் அவரால் ஒருவரின் துணையில்லாமல் நடக்கவோ, உட்காரவோ கூட முடியாது. கழிவறையில் கூட ஒருவர் அருகில் இருந்து பிடித்துக் கொள்ள வேண்டும். பத்துநாள் பயிற்சி மற்றும் வல்லாரைக் கீரையின் உதவியால்  தானே நடக்கவும் தனது குழந்தையை எடுத்துக்கொண்டு மாடிபடியில் ஏறி இறங்கும் அளவிற்கு தேறிவிட்டார் தேவி.! இப்பொழுது 5 வருடம் கடந்தநிலையில் 90 % வரை குணமடைந்து  ஆரோக்கியமாக உள்ளார்.! இந்தப் பெண்ணுக்கு பயிற்சி கொடுத்தது, எனக்கு  யோகத்தின் ஆற்றலை மீண்டும் உணர்த்திய அற்புத நிகழ்வு.! இரண்டாமாணவர் சாந்தி  இவரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை.  என்ன அய்யா , ஒருவேளை தூரதிருஷ்டி மூலம் குணமாக்கி விட்டீர்களா?. என்று கேட்டுவிடாதீர்கள்.! அப்படி இல்லை, சமீபத்தில் ஒருநாள் பொதிகை தொலைக்காட்சியில் வட்டு எறிதலில் ஆசிய சாம்பியனாக  முடிசூடி முதலிடம் பிடித்து வெற்றிபெற்ற  S.சாந்தி அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது அதில்,அவர் தான்  மீண்டும் விளையாட வந்ததே   பெரிய விசயம் என்றும், தனது திருமணத்திற்கு பின் தனக்கு, கடுமையான முதுகுத்தண்டுவட பாதிப்பு மற்றும்  இருதய வால்வு சுருக்கம் போன்ற  பிரச்சனைகள் அதிக அளவில் இருந்ததால்  டாக்டர்கள் வட்டைக்கையால் கூட தொடக்கூடாது. தொட்டால் வலி அதிகமாகிவிடும். அதனால்,தொடர்ந்து மருந்து மாத்திரைகள்  எடுத்து கொண்டு, ஓய்வெடுக்க வேண்டும். என்று; கூறிவிட்டனர்.! ஆனால், எனது பயிற்சியாளர் பெருமாள் இராமசாமி அவர்கள் தான், "அதெல்லாம் ஒன்றும் பயப்படாதே.!" சில யோகாசனப் பயிற்சிகள் இருக்கிறது.என்று கூறி பத்துவிதமான, யோகாசனப் பயிற்சிகளையும் எங்களது விளையாட்டு உடற்பயிற்சியோடு  சேர்த்து வழங்கி வந்தார்.! அதை செய்தபோது எனது உடல் வலி சில நாட்களிலேயே மறைந்தது.! தண்டுவடக் கோளாறும் இதயவால்வு பிரச்சனையும் கூட என்னை ஒன்றும் செய்யவில்லை.! அதோடு அவர் அடிக்கடி " மனம்தான் எல்லாம் நீ மனது  வைத்தால் எதையும் சாதிக்க முடியும் " என்பார்; என் குருவின் அந்த வார்த்தைகளும் பயிற்சிகளும் தான் என்னை இன்றைக்கு ஆசிய அளவில் தங்கம் வெல்ல வைத்துள்ளது.! என்றார்;அந்த தங்கமங்கை.!  இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தும் இயற்கையின் ஆற்றலை இடைவிடாது மனிதனிடம் பறைசாற்றி கொண்டே உள்ளது.! ஆனாலும், தீவினைப்பயனால் மனிதன் தொடர்ந்து  அனைத்தையும் வேடிக்கையாக கடந்துகொண்டே உண்ண வேண்டியதை எல்லாம் ஒதுக்கிவிட்டு வாடிக்கையாக இரசாயண மருந்துகளை உண்டு கொண்டிருக்கிறான்…! நன்மதியாளர்கள் நலம் பெறுக.!

படுக்கையில் கிடந்த பக்கவாத நோயாளிகள் எழந்து நடந்தனர்

கடந்த ஆண்டு ஒரு நாள் … இரண்டு  பக்கவாத நோயாளிகளை
ஒரே நாளில் வேறுவேறு இடங்களில் சந்தித்தேன். இரண்டு பேருமே படுத்தப் படுக்கையாய் கிடந்தவர்கள். யாரேனும் ஒருவரின் உதவி இல்லாமல், சுயமாக படுக்கையை விட்டு எழுந்து அமரகூட  அவர்களால் முடியாது.! ஆனால், அவர்களை நான் சந்தித்த பத்தாவது நிமிடத்திற்குள் இரண்டு பேரையும் எழுந்து நடக்க வைத்துவிட்டேன்.!

பயப்படாதீர்கள்.! முடவர்கள் நடக்கிறார்கள்,
குருடர்கள் பார்க்கிறார்கள்
என்று கிறுஸ்து காலத்திற்கு செல்லவில்லை.!

உண்மையில் நடந்ததை தான் சொல்கிறேன். அதில் ஒருவர், ஏற்கனவே ஒர் ஆண்டிற்கு முன் நம்மிடம் பக்கவாதத்திற்கு யோக சிகிட்சை பெற்று,பிறகு அவரின் மனைவிக்கு புற்றுநோய் வந்துவிட்டதால் கவனிப்பின்றி பயிற்சியை விட்டவர்.!

இன்னொருவரை அன்றுதான் ஒரு மாணவர் அறிமுகம் செய்திருந்தார்.
நான்கு வார்த்தை, ஆள்காட்டி விரலால் தலையில் நாலுசுற்று, முதுகில் நாலுசுற்று ,
முன்பக்கமாக கொஞ்ச நேரம்
பின்பக்கமாக கொஞ்ச நேரம்
அழுத்திப்பிடித்து, தூக்கிநிறுத்தி
நடக்க விட்டேன் … நடந்தே விட்டார்கள்.! இதுதான் மனதின்
சக்தியாய் விளங்கும் பிரபஞ்ச  ஆற்றலின் அற்புதம்.! இதை நான் எந்த கல்லூரியிலும் கற்கவில்லை,
எந்த குருவும் எனக்கு இதை நேரடியாக போதிக்கவில்லை, இதற்கு முன், இதுபோல் நானே செய்ததில்லை.! எல்லா உயிர்களும் மேன்மையடைய வேண்டும்  என்று தினமும் பிராத்திக்கிறேன் அவ்வளவே எனது பங்கு.!
அந்த  பிராத்தனையே இந்த அற்புதத்தை செய்தது என்று, நான் உறுதியாக நம்புகிறேன்.!
அருமை.! என் ஒருவனின் பிராத்தனை, ஒரே நாளில் இரண்டு படுக்கை நோயாளிகளை எழுந்து நடக்க வைக்கும் என்றால்  இந்த உலகம் முழுவதும் உள்ள அத்தனை மனிதர்களும் - எல்லா உயிர்களும் மேன்மையடையட்டும் … என்று,
தினமும் பிராத்தனை செய்தால் … எத்தகைய
மாற்றம் வரும்.! இந்த உலகே சொர்க்க பூமியாக மாறிவிடுமே.!

பொதுவாக வைத்தியத்தை பற்றிப் பேசும் போது சொல்வார்கள்
வைத்தியம் செய்பவன் தன்னை நம்ப வேண்டும். வைத்தியத்தை பெற்றுக்கொள்பவனும் வைத்தியனை நம்ப வேண்டும். இந்த இரண்டு
நம்பிக்கையும் இணைந்துவிடும்
போது,அவர்கள் செய்யும் வைத்தியமும் தன்னை நம்பியவர்களை குணமாக்கிவிடும்.! இதைதான்,இயேசு கிறுஸ்து  பைபிளில் நானல்ல உன்னை இரட்சித்தது …
உன் விசுவாசமே உன்னை இரட்சித்தது. என்றார்;
இவை அனைத்திற்கும் பிராத்தனையே மூலதனம்.!
எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும் மேன்மை யடையட்டும்.!

வருத்தப்பட்டு பிணியை
சுமக்கும் மனிதர்களே,
நீங்கள் எல்லோரும்
என்னை பயிலுங்கள்
உங்கள் பிணி
பனிபோல் விலகும்.!
இதுவே யோகத்தின் குரல்.!

மோகன் என்றொரு  யோகன்  …

இளமையில் வறுமை கொடிது என்று அவ்வை கூறுவார். அதனிலும் கொடுமை இளமையில் பிணி என்பதை நான் உணர்ந்த தருணம் அது.! ஆஸ்துமா,இழுப்பு,அலர்ஜிக்கான இலவச வகுப்பு ஒன்று நமது செட்டிகுளம் யோகா மையத்தில் 2013 ஆம் ஆண்டு நடைப்பெற்றுகொண்டிருந்த போதுதான்,நான் முதன்முதலாக அந்த மாணவரை சந்தித்தேன். ஒரு 24 வயது மதிக்கலாம். கறுப்பு என்றாலும் களையானவர் என்பார்களே அப்படி ஒரு ஒளிபொருந்திய முகம்.! அவருக்கு நுரையீரலில் உள்ள ஒருபக்க அறை முழுவதும் வீங்கி உள்ளதால் நடக்கும் போது மட்டுமல்ல சும்மா படுத்திருக்கும் போது கூட அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.! நவீன மருத்துவ முறையில் அத்தனை பரிசோதனைகளையும் செய்து பார்த்ததோடு, இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மருத்துவம் பார்த்தும் எந்தவித ஆரோக்கிய முன்னேற்றமும் இல்லாமல் இருந்தவர். ஒருநாள் ஹீலர் பாஸ்கரின் பேச்சை கேட்டு ஆங்கில மருந்துகளை முக்கால்வாசி நிறுத்திவிட்டு சில வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்து  கொஞ்சம் முன்னேற்றம் கண்டவர் முழுவதும் இயற்கை வாழ்வியலை கடைப்பிடிக்கும் ஆவலுடன் நமது மையத்திற்கு என்னை காணவந்திருந்தார். பேசிக்கொண்டே இருக்கும் போது திடீரென்று நெஞ்சை அழுத்தி கொடுப்பார் பிறகு சில ஏப்பங்களை விட்டுவிட்டு பேச ஆரம்பித்தால்  மீண்டும் மூச்சு அடைக்கிறது என்பது போல சற்றுநேரம் குனிந்து அமர்ந்துகொள்வார்.
ஒருவேளை உணவு சாப்பிட்டால், மூன்றுவேளையும் நெஞ்சு எரிகிறது. என்றும் , இரவில் உறங்கும் போது கூட நெஞ்சில் யாரோ கட்டையை வைத்து நெருக்குவதுபோல் இருக்கு  என்றும் தனது பிணித்துயரை பட்டியலிட்டார்.!
நிறைவில் இலவச ஆஸ்துமா வகுப்பில் கலந்து கொண்டவர்களை, பத்திரிகைகளுக்கு கொடுப்பதற்காக, நாம் புகைப்படம் எடுத்த போது … வேண்டாம் அய்யா,என்னை படம்பிடிக்க வேண்டாம். நான் நோயாளியாக அடையாளம் காணப்படுவதை விரும்பவில்லை.   என்றார்; அவர் பெயர் மோகன்  பாலிடெக்னிக் படித்துக்கொண்டு பொறியியல் துறையில் சுயவேலையின் மூலம் கைநிறைய பணம் சம்பாதிப்பவராய் இருந்தார்.  நமது பயிற்சி மையத்தில் தொடர்ந்து அவருக்கு சில மாதங்கள் பவன முத்தாசனம்,உஷ்ட்ராசனம்,சிரசாசனம்,பஸ்திரிகா பிராணாயாமம்  போன்ற பல யோக நுட்பங்கள்  கற்றுகொடுக்கப் பட்டது. அனைத்தையும் கற்றுதேர்ந்ததோடு, முற்றிலும் இயற்கை வாழ்வியல் முறைக்கு திரும்பி இரசாயண உணவு, இரசாயண அழகுப்பொருட்கள், பற்பசை,பவுடர் என்று அனைத்தையும் துறந்து ஆரோக்கிய வாழ்வை தமதாக்கிக் கொண்டார். மோகன்; " முன்பெல்லாம் ஒருவேளை உணவைகூட என்னால் இயல்பாக ஜீரணம் செய்ய முடியாது. ஆனால், இப்பொழுது பசித்த போதெல்லாம் உண்கிறேன். மாத்திரை மருந்துகளை முழுவதும் நிறுத்திவிட்டு நீங்கள் கொடுத்த மூலிகை சூரணத்தை சாப்பிட்டு வருகிறேன். தினமும் வீட்டிலும் ஒருநேரம் உஷ்ட்ராசனம்,சிரசாசனம், ஹூ க்ரியா, ஓம்கார தியானம் போன்றவற்றை செய்கிறேன். என் வீட்டில் இருப்பவர்களே அசந்துதான் பார்க்கிறார்கள்.  சாதாரணமாக  இயல்பாக சுவாசிக்கவே முடியாதவன் எப்படி தலைகீழாக நின்று சுவாசிக்கிறேன் என்று ஆச்சரியப்படுகிறார்கள். எனக்கும் வியப்பாகதான் உள்ளது. 80% நான் குணமாகிவிட்டேன்.!மிகமிக  நன்றி அய்யா, ஹீலர் பாஸ்கரையும், யோகாவையும் நான் அறியாமல் போயிருந்தால் வாழ்நாள் முழுவதும் ஒரு நோயாளியாக, நவீன  மருத்துவத்தோடு  போராடிக்கொண்டிருந்திருப்பேன். என்று;கூறி எனது சார்பில் இன்னொரு யோகா இயற்கை வாழ்வியல் முகாம் நடத்த உதவுகிறேன் " என்றும்;கூறிவிட்டு என்னை ஒரு யோகா ஆசானாய் மிகவும் பெருமை கொள்ள வைத்து சென்றார்.!  பிறகு ஒருவருடம் கழித்து மீண்டும் ஒருநாள் கைப்பேசியில் அழைத்து "ஒரு முக்கியமான விசயம் … உங்களிடம் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும். நீங்கள் சொல்வதை வைத்துதான் இனி எனது வாழ்க்கையே உள்ளது. "என்று கூற; நான்  சொல்லுங்க, உடல் நிலை நன்றாகத்தானே உள்ளது? என்றேன்;
"ஆமாம் அய்யா, அதுவல்ல பிரச்சனை, இன்னொரு முக்கியமான விசயம் நேரில் வருகிறேன்." என்று; கூறி உடனே அவர் என்னைப்பார்க்க வந்திருந்தார்.!

என்ன விசயம் மோகன்?
"அய்யா,இப்ப என்னைப்பொருத்தவரை உடல்நிலை நன்றாக உள்ளது. எங்கள் வீட்டில் என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்கள்"

நல்ல விசயம், செய்து கொள்ள வேண்டியது தானே?
"நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்.பிறகு, எதற்கும் இருக்கட்டும் என்று நான் முதலில் மருத்துவம் செய்த ஆங்கில மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்தேன்.அந்த ரிப்போர்டுகளை பார்த்த மருத்துவர், இப்பொழுதும் உன் உடல்நிலை பழையதுபோல் தான் உள்ளது. நீ திருமணமே  செய்யக்கூடாது, ஒருவேளை நீ  திருமணம் செய்தால் இல்லற வாழ்க்கையில் உன்னால் ஈடுபடவே முடியாது. அதோடு நுரையீரல் இயக்கம் முற்றிலும் சீரழிந்து உயிருக்கே ஆபத்தாகி விடும். என்கிறார்கள்"
என்றார்;
உங்களுக்கு என்ன தோன்றுகிறது மோகன்?
"நான் நன்றாக இருக்கிறேன்.  ஆனால்,எனக்கு இல்லற இன்பத்தில் நாட்டம் இல்லை.
முன்பிருந்ததை விட பலமடங்கு முழு ஆரோக்கியமாக உணர்கிறேன்.ஆனாலும் ,மருத்துவ அறிக்கையின் படி  நான் இன்னும் முழு நோயாளியாகத்தான் இருக்கிறேன் என்கிறார்கள். நீங்களே பாருங்களேன்" என்று; தனது ஸ்கேன் ரிப்போர்டை எனது கைகளில் கொடுத்தார்.
நான் அதை  என் கைகளில் வாங்கி மேசையில் வீசியெறிந்தேன். உடனே அவர் என்னிடம் என்ன அய்யா, உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லையா? என்றார்; "மோகன் எனக்கு மனித உடல் இயங்கு சக்தியில் முழு நம்பிக்கை உண்டு. ஆனால்,இதுபோன்ற மருத்துவ அறிக்கையில் முழு நம்பிக்கை இல்லை. ஏனெனில், மருத்துவ அறிக்கையின் படி மிக ஆரோக்கியமாக இருப்பதாக கூறியுள்ள பலர் நடக்கவே முடியாமல் படுக்கையில் கிடப்பதை நான் பலமுறை பார்த்துள்ளேன்.
அதனால், இது பொய், நீங்கள் உணரும் ஆரோக்கியம் மட்டுமே மெய் " என்றதும். அவர் ஆர்வமாக
அப்ப நான் திருமணம் செய்து கொள்ளலாமா?
என்னால் இல்லறத்தில் ஈடுபட முடியுமா?
எனக்கும் ஆரோக்கியமான பிள்ளைகள் பிறப்பார்களா? என்று பல கேள்விகளை முச்சுவிடாமல் கேட்டார்;

"100%  உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக  அமையும், நீங்கள் ஆரோக்கியமான பிள்ளைகளை பெறுவீர்கள்.! நலம் பெருகட்டும் …  என்று என்னையும் அறியாமல் ஆசி கூறி அனுப்பி வைத்தேன்.!
பின்பு சில மாதத்திலேயே அவரின் இனிய திருமண நாள் வந்தது … நானும் அங்கு சென்றிருந்தேன் … என்னையும் எனது மனைவியையும்  பார்த்ததும்  தனது துணைவியோடு ஓடி வந்து  பணிந்து  ஆசி வேண்டினார். வாழ்க வளமுடன், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க, நலம் பெருகட்டும் …என்று வாழ்த்தி வந்தேன்.!
என்னுள் அமர்ந்து வாழ்த்திய இறைநிலையின் ஆசி பலித்தது … இன்று மோகன் பெண்ணும் ஆணுமாக இரண்டுபிள்ளைகளை பெற்று ஆரோக்கியமாக பெருவாழ்வு வாழ்ந்து வருகிறார்.!
யோகத்தால் வாழ்வு பெற்றவர்களில் ஒரு சிலரை மட்டும் தான் இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.!
யோகாவின் ஆற்றலாலும், இயற்கையின் ஆசியாலும் என்னைத் தொட்டும் தொடராமல் கடந்த சில ஆரோக்கிய குறைபாடுகளை பற்றி  இன்னொரு பதிவில் கூறுகிறேன்.!

----ஏகப்பிரியன் DYT

தொடரும் …

aumherbals.blogspot.in

🌿 *100% இயற்கை மூலிகை மருந்துகளுக்கு🌹
AUM HERBALS
Mobile & Whats app
*9629368389*

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...