#கடைசி_துளிவரை
#ருசியுங்கள்
--ஏகப்பிரியன்---
வெளிநாட்டினரிடம் தற்போது ஒரு வாழ்க்கை முறை பிரபலமாகி
வருகிறதாம்.(மினிமலிசம்)
சுற்றுலா வரும் வெளிநாட்டினரின் ஆடைகளை பார்த்துள்ளீர்கள் தானே?
மூட வேண்டிய பகுதிகளை மட்டும் சரியாக மூடியிருப்பார்கள். நம்மவர்கள் போல முழுக்கை சட்டை எடுத்து அதை அரைக்கையாக மடித்து போடும் பழக்கமோ அல்லது அரேபியன் அடிமைகளைப்போல ஐந்தடி பெண்ணுக்கு ஏழடியில் பர்தா தைத்துக்கொடுக்கும்
பழக்கமோ அவர்களிடம் கிடையாது.
இருந்தாலும் கூட தனது அலுவலகத்தேவைக்கும் தங்கள்
வசதிக்காகவும் அவர்களும் ஆடைகள் முதல் இன்னும் பல்வேறு விசயங்களில்
சற்று அநாவசிய செலவுகளை செய்து
வந்தனர்.தற்போது அதை மாற்றும் பொருட்டு ஒரு சில ஐரோப்பியர்களின் மூளையின் உதித்ததுதான் குறைந்த அளவு வசதிகளை பயன்படுத்திக்கொண்டு
அதிகப்பட்சம் மகிழ்வாக வாழும் கலை.
ஒவ்வெருவரும் போடும் உடை முதல்,உணவு,போக்குவரத்து,விருந்து,
பிறருக்கு செய்யும் உதவி என்று எல்லாவற்றுக்கும் குறைந்தப்பட்ச
அளவிலான பணத்தை மட்டும் பயன்படுத்திவிட்டு மற்றவற்றை
முழுவதும் சேமிக்கிறார்கள்.
ஆனால்,இதன் நோக்கம் சேமிப்பு
மட்டுமல்ல வீண் ஆடம்பரத்தை
தவிர்த்து மனித உணவிற்காக, வளர்ச்சிக்காக இயற்கையை சீரழித்து,
உருவாக்கப்படும் உணவு,உடை,ஆடம்பர
பொருள்கள்,இரசாயண பொருட்கள்
போன்றவற்றின் உற்பத்தியை
குறைத்து இயற்கையை முடிந்தவரை
பாதுகாக்கவே இதை செய்கிறார்கள்.
தங்கள் உணவிற்காக; இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உணவுப்பொருட்களையும்,
பழம் காய்கறிகளையும் தங்கள் தேவையின் 80% மட்டுமே வாங்கியோ விளைவித்தோ பயன்படுத்துகிறார்கள்.
இந்த அணியில் உள்ள ஒருவர் தனக்கென்று நான்கு செட்
உடை,ஒருஜோடி சப்பல்,ஒருஜோடி
ஷூ போன்றவற்றை மட்டுமே பயன்படுத்துவார்.
இப்படி தங்களிடம் உள்ள உடையையும் சப்பல்களையும் இனிமேல் பயன்படுத்தவே முடியாது என்ற நிலைவந்து கந்தலாகும் வரும் வரைபயன்படுத்துவர்கள்.பிறகுதான்
அதற்கு பதிலாக அடுத்த உடையையோ
பொருளையோ வாங்குவார்கள்.
ஒரு வீட்டில் ஒரு கார் மட்டுமே வைத்துக்கொள்வார்கள். அதுவும் இயற்கையை மாசுபடுத்தாத வகையில்
தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்த காரையே பயன்படுத்தும் வகையிலோ அல்லது ஒரு சிலர் பொது வாகனமான பேருந்து,இரயில் போன்றவற்றையும் பயன்படுத்தும்
வகையிலோ தங்கள் வேலைகளை திட்டமிட்டுக் கொள்கிறார்கள்.
இரண்டு கார்,நான்கு பைக்,வருசத்துக்கு
ஒரு புது வண்டி,ஆறுமாதத்திற்கு ஒரு செல்போன் என்பதெல்லாம் இவர்களை பொறுத்தவரை சமூக விரோதம்.!
தங்கள் குடும்ப விழாக்களையும், விருந்துகளையும் தங்கள் இடத்திலேயே குறைந்தப்பட்ச உணவுடன் அதிகப்பட்ச மகிழ்ச்சியோடு கொண்டாடி கொள்கிறார்கள்.!
இந்த அமைப்பில் உள்ளவர்கள் பல்வேறு நோய்களுக்கான இயற்கை மருத்துவ முறைகளையும் எளிய வெட்டுக்காயங்களுக்கு தானே தையல் போடவும் தெரிந்து வைத்துள்ளனர்.
குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் போதுமான இடவசதி உள்ள, எளியவீடுகளிலேயே வாழ்கிறார்கள். முடிந்தவரை தங்கள் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மூலமாகவும்
சூரிய ஒளியின் மூலமாகவும் மின்சாரத்
தேவையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
தங்கள் வீட்டில் 30 நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்களை பிறருக்கு தானமாக கொடுத்து விடுகிறார்கள்.
புதிதாக எந்தப்பொருளை வாங்குவதாய் இருந்தாலும் இது நமக்கு 100% பயன்படும் என்று தெரிந்தால் மட்டுமே வாங்குகிறார்கள்.!
இவர்கள் இப்படியெல்லாம் வாழ்வதற்கு வாழாமலே இருக்கலாம். என்று சிலர்
கூறலாம்.உங்க கஞ்சத்தனத்திற்கு
அளவே இல்லையாடா?என்று கூட
சிலர் கேட்கக்கூடும்.!
உண்மையில் இவர்கள்
தான் வாழ்கிறார்கள்.ஆமாம்,
இந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழும்,பிரச்சாரம் செய்யும் எவரும் பணத்திலோ அறிவிலோ குறைந்தவர்கள்
அல்ல அனைவருமே பெரும்பெரும்
பணக்காரர்கள்,மேதைகள்.!
அதனால்,பணம் இல்லாததால் எல்லாவற்றையும் என்னால் வாங்க முடியவில்லையே,என்னால் நினைத்தபடி மகிழ்ச்சியாய் வாழ முடியவில்லையே;என்று அங்கலாய்க்கும் நம்மைப்போன்ற சாதாரணர்கள் இவர்கள் அல்ல.!
இவர்களின் வாழ்க்கையை பார்க்கும் போதுதான் இன்றைய உற்பத்தி உலகில் நாம் இயற்கைக்கு புறம்பாக எத்தனை அழிச்சாட்டியம் செய்துவருகிறோம்
என்பது புலப்படும்.
பிரியாணி என்ற உணவை கண்டறிந்ததே இந்தியர்கள் தான். எதற்கு தெரியுமா? ஐந்து குழம்பு எட்டுக்கூட்டு,பழம்,பப்படம்,ஊறுகாய்
என்று இத்தனை விதமான உணவையும்
சமைத்து நேரத்தையும்,பணத்தையும்,
உணவையும் விரயம் செய்யாமல் எளிய முறையில் அனைத்து சத்துக்களையும்
உள்ளடக்கிய உணவை பெறவே இந்த
தந்திரம் கையாளப்பட்டது. இன்றைக்கு
பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள குருமா,அப்பளம்,ஊறுகாய்,ஐஸ்கிரீம் என்று புதிய பட்டியலை உருவாக்கி விட்டன சில நவீன விற்பனை மங்கிகள்.
கடலிலும்,நதியிலும்,ஓடையிலும் எங்கும் குப்பை,எதிலும் குப்பை,எளியவனின் வீட்டில் கூட ஒருவனுக்கு மூன்று ஜோடிசெருப்பிருக்கும்.உண்க,சுத்தம்
செய்ய, உண்ணாமல் எச்சில்
செய்து என்று ஒரு நாள் இந்தியாவில் உள்ள நம்மைப்போன்றவர்கள்
போட்ட குப்பைகளே இங்கு பல்வேறு
புதிய மலைகளையும் சாக்கடை நதிகளையும் உருவாக்கி வருகிறது.
காந்திதேசத்து மாந்தர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
ஒரு நெசவாளியால் கூட தனது மேலுடம்பை மறைக்க துணி நெய்ய முடியவில்லையே? என்று வருந்திய காந்தி மகான் …
இன்றுமுதல் நானும் மேலாடை அணியப்போவதில்லை என்று கூறியதோடு;தனது வேட்டிக்கிழிந்தால் அதை மேல்த்துண்டாகவும் துண்டு கிழிந்தால்தலையணைஉறையாகவும்,
உறையும் கிழிந்தால் அதை,கைக்குட்டையாகவும் இறுதி வரை ஒரு பொருளை பயன்படுத்தி அதை முழுவதும் உபயோகமாக்கிக் கொண்டதோடு, வாழ் நாளெல்லாம் நோம்பு நோற்று தாய்நாட்டிற்கு விடுதலையும் வாங்கித்தந்து;தன் உயிரைக்கூட மதவெறியின் உச்சம் உணர்த்த பயன்படுத்திக் கொண்ட ,மகாத்மா தேசத்தில் பிறந்த நாம் இன்று;வெள்ளையார்களால் கைவிடப்பட்ட குப்பைசேர் வாழ்க்கை முறையில் உழன்று வருகிறோம்.மீண்டும் விழிப்புணர்வு பெறுவோம், இயற்கையோடு இயைந்து நல்வாழ்வை நமதாக்கிக்கொள்வோம்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment