I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: ஆரோக்கிய கேள்வி பதில்கள்

Sunday, 24 September 2017

ஆரோக்கிய கேள்வி பதில்கள்

*உயிர் மீட்கும் மருத்துவம்*

55.கேள்வியும் பதிலும் தொடர்ச்சி

கேள்வி:உணவை ஏன் மென்று சாப்பிட வேண்டும்?

எந்த உணவுப்பொருளையும் கூழாக அரைத்து உமிழ்நீரோடு சேர்த்து மெதுவாக ஒரே மனதோடு உண்டால் மட்டுமே அவை முழுமையாக ஜீரணமாகும். அப்படி முழுமையாக ஜீரணமானால்  மட்டுமே அவற்றில் உள்ள சத்துக்கள் முழுவதும் நரம்புகளால்  உறிஞ்சப்பட்டு செல்களை ஆரோக்கியமாக்கும். முதலில் உணவுப் பொருள் எதுவாய் இருந்தாலும் அதை நன்கு ஜீரணமாக்கி ஊட்டப்பொருளாய் மாற்றுவதற்கு தேவையான உமிழ்நீர் வாயில் மட்டுமே சுரக்கிறது.இரண்டு வயிற்றுக்குள் உணவை அரைப்பதற்கு தேவையான  பல்கள் இல்லை.வாயில் மட்டுமே அவை உள்ளது. இது போன்ற காரணங்களாலேயே உணவை மென்று உமிழ்நீரோடு சேர்த்து உண்ண வேண்டியது அவசியமாகிறது.
ஒருவாய் உணவை  குறைந்தது 50 முறையாவது மென்று அதை கூழ் வடிவாக்கியே முழுங்க வேண்டும். இப்படி செய்தால் உணவின் தேவையும் பாதியாக குறையும் அதோடு உடலில் உள்ள எத்தகைய நோயும் விரைவில் குணமாகும்.!
நீரையும் இதுபோல் உமிழ்நீரோடு சேர்த்துக்கலக்கி மெதுவாக குடிக்க வேண்டும். அதாவது ஒரு வாய் நீரை வாயில் வைத்து அதை உமிழ்நீரோடு நன்றாக கலக்கி குறைந்தது  ஐந்து மடக்காக மெதுவாக குடிக்க வேண்டும்.இப்படி குடித்தால் மட்டுமே நீரின் ஆற்றல் உடலுக்கு முழுதாய் கிடைக்கும்.!

கேள்வி:உணவோடு ஏன் நீரருந்தக்கூடாது?

இரைப்பை ஒரு 950 மில்லி நீர் கொள்ளளவு கொண்ட ஒரு உறுப்பு. இதில் 700 கிராம் உணவையும் 500 மில்லி நீரையும் ஒரே நேரத்தில் அடைக்கும் போது அது பல்வேறு நிலைகளை கடந்து முழுமையாக அரைக்கப்பட்டு அதன் இரசத்தை உடல் கிரகித்துக் கொள்வதில் பல சிக்கல்கள் ஏற்படும். உதாரணமாக ஒரு வேளை உணவுடன் அரை டம்ளர் வரை நீரருந்தினால் அந்த நீரும் உணவும் சேர்ந்து பெருங்குடலில் திக்கான கூழ் போன்ற வடிவில் இருக்கும்.இப்படி இருந்தால் அதன் சத்துப்பொருட்கள் எளிதாக இரத்தத்தில் கலந்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுவே ஒரு வேளை சாப்பிட்ட ஐந்து இட்லியோடு மூன்று டம்ளர் நீரை குடித்தால் அவை  மோர்க்குழம்பு போன்ற பதத்திலேயே இரைப்பையில் இருந்து பெருங்குடல் வரை பயணிக்க வேண்டும். இப்படி நடந்தால் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் நீர்த்துப் போகும். இதன் காரணமாகவே உணவின் ஆற்றலை முழுமையாக உடலால்
கிரகித்துக் கொள்ள முடியாமல்
போவதோடு கழிவு வெளியேற்றமும் முறைப்படி நடக்காமல் போய்விடும்.நாம் தொடர்ந்து இது போன்றே உணவோடு நீரை  அருந்தி வந்தால் அஜீரணம் முதல் தோல் வியாதிகள், சக்கரை,சிறுநீரக செயலிழப்பு,இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு ஆரோக்கியக் குறைபாடுகள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருக்கும்.எனவே இந்தப்பழக்கத்தை கைவிட்டு விட்டு உணவு உண்பதற்கு குறைந்தது அரைமணி முதல் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது உணவு உண்டு அரைமணி முதல் ஒருமணி  நேரத்திற்கு பின்பாகவோ நீரருந்துவதே நல்லது..!
உணவில் காரம்,உப்பு,இனிப்பு, ஊறுகாய். அப்பளம்,இரசாயணப் பொருட்கள் போன்றவற்றை நாம் அதிகமாக சேர்த்துக் கொள்வதாலேயே உணவின் இடையில் விக்கல்,தாகம் போன்றவை ஏற்படுகிறது. இவற்றில் இரசாயணப் பொருட்களை முற்றிலும் தவிர்த்து மற்றவற்றை குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்தினால் இடையில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றாது.!
சூடுகஞ்சி,பழைய கஞ்சி,கூழ்,சூப்,பழச்சாறு போன்றவற்றை அதில் உள்ள நீரோடு சேர்த்து மெதுவாக குடிக்கலாம். அது ஜீரணத்தை கெடுக்காது.!
அது போலவே தரையில் அமர்ந்து சம்மணமிட்டு சாப்பிடுவதால் எளிதாக ஜீரணமாகும்.!

கேள்வி: திருமணம், சடங்கு போன்ற விருந்துகளில் எப்படி தரையில் அமர்ந்து சாப்பிட முடியும்?

பதில்: திருமணம், மற்றும் பல்வேறு குடும்ப,அலுவலக விருந்துகளிலும் உணவு விடுதிகளிலும்  நாம்  உணவு உண்ணும் மேசையில்  அமர்ந்து சாப்பிடலாம். மாதத்தில் ஒரிரண்டு நாள் இது போன்று சாப்பிடுவதால் உடலுக்கு கேடு ஒன்றும் ஏற்படாது.ஆனால்,பொதுவாக திருமணம் போன்ற விழாக்களிலும் உணவு விடுதிகளிலும் ரீபைண்ட் ஆயில், சீனி,அஜீனாமோட்டோ,சோடாப்பு,கலர்ப்பொடி,கலப்பட சமையல் பொடி போன்றவற்றையும் பேப்பர்கப், பாலீதின் கவர்,பிராய்லர் சிக்கன் அதுவும் பல் நாட்களுக்கு முன்பே பதப்படுத்திய மாமிச உணவுகளையே அதிகம் பயன் படுத்துகிறார்கள். இதுவே மிக ஆபத்தானது.! 500 பேருக்கு உணவு சமைக்க ஒரு சமையல்காரரிடம் ஆர்டர் கொடுத்தார் ஒரு நண்பர்.  அந்த சமையல்காரர்  கொடுத்த பொருள் வாங்குவதற்கான லிஸ்டில் கால்கிலோ  அஜீனாமோட்டோ, ஒரு கிலோ கலர்ப்பொடி,  200 கிராம் சோடாப்பு, இரண்டு கிலோ சிட்ரிக் அமிலம்   போன்றவை குறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்த நண்பர் இதெல்லாம் எதற்கு என்று கேட்க; இதையெல்லாம் கொட்டினால் தான் உணவு சுவையாக இருக்கும் என்று சமையல்காரர் கூறியுள்ளார். இவற்றில் மைதா,சீனி,பாக்கெட் பால்,ரீபைண்ட் ஆயில் போன்றவற்றையும், பிராய்லர் சிக்கனையும் சேர்த்து மாலை நேர விருந்தில் சுவையாக மூன்று புரோட்டாக்களையும் இரண்டு ஆப்பத்தையும் கறியோடு கலந்து உண்டுவிட்டு சிட்ரிக் அமிலம் கலந்த ஜூஸையோ அல்லது பாக்கெட் பால் கலந்த டீயையோ குடித்து விட்டு வந்தால் போதும். மாதம் முழுவதும் கம்பு,கேழ்வரகு போன்ற தானியங்களையும் உண்டு,மூலிகைச்சாறுகளையும் குடித்து,நடைப்பயிற்சி,உடற்பயிற்சி,யோகா போன்றவற்றையும் செய்து  சேர்த்த ஆரோக்கியத்தை இந்த ஒரு வேளை உணவே கபளிகரம் செய்து விடும்.!
முன்பெல்லாம் திருமண மண்டபத்தில் பெரிய வார்ப்பில் நீரை சூடாக்கி கொடுப்பார்கள். இப்பொழுது குடிக்க ஆக்சிஜனை  நீக்கிய சக்கை நீரை பாட்டிலில் அடைத்துக் கொடுக்கிறார்கள்.கெமிக்கல் தடவிய பேப்பர் கப்பில் சூடான பாயாசத்தை ஊற்றிக் கொடுக்கிறார்கள். சுத்தம் என்ற பெயரால் இப்படித்தான் ஒவ்வெரு  விசயத்திலும் வியாபாரத்தை புகுத்தி மனித ஆரோக்கியத்தோடு விளையாடு கிறார்கள்.! இதனால் தான் நம்மைப் போன்ற இயற்கை விழிப்புணர்வு மிக்கவர்கள் எந்த விருந்துகளிலும் கலந்து கொள்வதில்லை.!
மற்றபடி முடிந்தவரை வீட்டில் தரையில் பாய் விரித்து அமர்ந்தும் வெளி இடங்களில் உணவு
உண்ண ஒதுக்கியுள்ள  இடத்தில் அமர்ந்தும் உணவை உண்ணலாம்.!

கேள்வி: நான் வெளிநாட்டில் வசிப்பதால் நிறைய பேக் செய்யப்பட்ட  இரசாயண உணவுகளை உண்ண வேண்டி உள்ளது. இதை தவிர்க்க என்ன செய்வது?

பதில்: பொதுவாக வீட்டிலோ,ரூமிலோ உணவு தயாரிக்கத் தேவையான பொருளை வாங்கி சமையல் செய்வதே நல்லது.பிஸ்கெட்,சாக்லேட்,பேரீச்சம்பழம்,உலர் பழங்கள்,ரொட்டி,ஐஸ்கிரீம் போன்றவற்றிலேயே கெடாமல் இருக்க அதிக இரசாயணத்தை கலப்பார்கள்.  அயல் நாட்டில் வசிப்பவர்கள் முடிந்தவரை இவற்றை பயன்படுத்துவதை முதலில் பாதியாக குறைத்து நாளடைவில்
முழுவதுமாக நிறுத்தலாம்.!

கேள்வி:தூக்கமின்மையைப் போக்க ஏதேனும் எளிய வழியை  கூறுங்கள்?

பதில்:ஆழ்ந்த தூக்கம் வர இரவு தூங்குவதற்கு முன் மூலிகை பல்பொடியால் பல் தேய்த்து விட்டு 4,7,8 பிராணாயாமம் பத்து முறை செய்து விட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். அதாவது படுக்கையில் உட்கார்ந்து ஒன்றிலிருந்து  நாலு எண்ணிக்கை இரண்டு நாசிகளிலும் மூச்சை இழுத்து ஒன்றிலிருந்து 7 எண்ணிக்கைகள் உள் நிறுத்தி ஒன்றிலிருந்து எட்டு எண்ணிக்கைகள் வெளிவிட வேண்டும். இதுபோல் 10 சுற்றுகள் வரை செய்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.! இதுபோலவே தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒரு சின்ன வெங்காயத்தை சதைத்து நாசி அருகில் பிடித்து நான்கைந்து முறை ஆழ்ந்து சுவாசித்து விட்டு  தூங்கப்போனால் ஆழமான தூக்கம் வரும்.!
சிந்தனை அதிகமாக இருப்பவர்கள் மனதிற்குள் சிவாயநம என்று படுக்கையில் படுத்த பின்  தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் சிந்தனை தடைப்பட்டு ஆழ்ந்த தூக்கம் வரும்.!
அவரவர் மத மந்திரங்களையும் பயன்படுத்தலாம்.!
தாரணை தியானம் செய்து விட்டு தூங்கினாலும் ஆழமான தூக்கம் வரும்.!

கேள்வி:மலச்சிக்கல் இல்லாமல் இருக்க என்ன செய்வது?

பதில்:தினமும் ஏதேனும் ஒருவேளை உணவிற்கு முன் மூன்று துண்டு தேங்காவை மென்று அதன் சக்கையோடு சேர்த்து தின்று வந்தால் மலச்சிக்கலே வராது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தேங்காய் பாலை நன்றாக அரைத்து வடிகட்டி லேசாக சூடாக்கிக் கொடுக்கலாம்.
தினமும் ஒரு வேளை தேங்காய் சாப்பிட்டாலே போதும். மலச்சிக்கல் தீர்ந்துவிடும்.!

கேள்வி:கண் காடராக்ட் குணமாக இயற்கை வழியுள்ளதா?

பதில்:தினமும் காலை,மாலை 6 சுற்றுகள் சூரியநமஸ்காரம் செய்வதுடன் தினமும் பத்து நிமிடம் சுத்தமான ஆமணக்கெண்ணெயை விட்டு எரிய வைத்த விளக்குத்திரியை ஒன்றரை அடி தூரத்தில் அமர்ந்து கண்ணை இமைக்காமல் பார்த்து வரவேண்டும். அதோடு தினமும் காலையில் 300 கிராம் முதல் 1500 கிராம் வரை [வயதிற்கு தகுந்தவாறு]சின்ன வெங்காயத்தை தோல்நீக்கி பொடியாக  கண்ணில் நீர் தாரைத்தாரையாய் வடியும் அளவிற்கு வெட்டி வந்தால் பத்து நாளிலேயே காடராக்டு சரியாகிவிடும்.!

தொடரும் …
-ஏகப்பிரியன் DYT
aumherbals.blogspot.com

*பகிரவேண்டாம்*

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...