I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: உயிர் சக்தியுள்ள உணவு

Sunday, 24 September 2017

உயிர் சக்தியுள்ள உணவு

*தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும் !*
----------------------------------------
*பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றம் எடுக்க வேண்டும் !*
----------------------------------------
*காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும் !*---------------------------------------
*நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்...!*
----------------------------------------
ஆக எது கெட்டு போகிறதோ !
புழு வண்டு வைக்கிறதோ !
எது அழுகி நாற்றம் எடுக்கிறதோ !
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
எது குப்பைக்கு போகிறதோ !
அவைகள் மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கு இல்லாத உணவுப் பொருள்கள்.
----------------------------------------
3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் பாட்டில் வாட்டர் கேன் வாட்டர் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்??
-----------------------------------------
பழமுதிர் நிலையகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரம் ஆனாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள்
நல்ல தரமான பொருட்களா ?? சிந்திப்பீர்.
-----------------------------------------
இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே
கடும் காரத்தை உள்வாங்கி புழு வந்து வைத்து கெட்டுப்போகிறது...

பூச்சிக் கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது மணமாக விற்பனை செய்யப்படும் சக்தி மசாலா, ஆச்சி மசாலா போன்ற பாக்கெட்டுகள் நல்ல பொருளா??

*இல்லவே இல்லை...!*

ரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சு தான் .

டி.வி. விளம்பரம் பார்த்து எந்த உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கினால் அதை விட மடமையும் முட்டாள் தனமும் வேறு எதுவும் இல்லை...

கெட்ட உணவுப் பொருள்களை மெகா கடைகளில் வாங்குவது
ஒரு பொழுது போக்காகவும் - சமூக கௌரவமாக மாறி விட்டது...

*உண்மையை உணர்வோம்*

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...