I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: நோய் நீக்கும் இயற்கைநுட்பங்கள்

Friday, 1 September 2017

நோய் நீக்கும் இயற்கைநுட்பங்கள்

*உயிர் மீட்கும் மருத்துவம்*

54.உயிர்க்கொல்லி வியாதிகளும்
உயிர் மீட்கும் வழிகளும்

" ஒன்றே குலம்
ஒருவனே தேவன்
ஒன்றே பிறப்பும்
ஒன்றே நிறைவும்
ஒன்றே பிணியும்
ஒன்றே மருந்தும்
கண்ணுக்கான உணவை
கண்கள் திண்ணுமா,
அருமை மூக்கிற்கான
உணவை மூக்கில்
திணிப்பியா,
கெண்டை காலுக்கான
உணவை காலில் தடவ வா,
வாயில் விசம் வைத்தால்
வாய் மட்டும் சாகுமா?
எல்லாம் ஒன்றுக்குள்ஒன்று
பிணைந்த நரம்புகள் ஒன்றை தொட்டால்  உயிரே அதிருமே
இதை நன்கு கற்றால்
உன் வாழ்வு புலருமே.! "

காய்ச்சல்: இரசாயண உணவால், இரசாயண மருந்தால்,தீயகாற்றால்,வைரஸால்,
சளியால் உடலில் சேர்ந்து விட்டக்கழிவை. உடல் தானே சுத்திகரிக்க செய்யும் வைத்தியத்தின் விளைவே காய்ச்சல்.!
காய்ச்சல் கண்டவர்கள் முதலில் இயற்கை எனிமாகேனை பயன்படுத்தி லேசான சுடுநீரில் பெருங்குடலை சுத்தம் செய்துவிட வேண்டும். இப்படி காலை,இரவு தினமும் செய்ய வேண்டும். அடுத்து நெற்றியில் ஒரு குளிர்ந்த நீர் துணியால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை அல்லது நீர் காயும்வரை நெற்றியில் துணியை நனைத்து வைத்து,  காய்ச்சல் குறையும் வரை பற்றிட்டு படுக்கக்காய்ச்சல் குணமாகும்.பொதுவாக காய்ச்சலுக்கு வேறு எந்த வைத்தியமும் செய்யத்தேவையில்லை. பசித்தால் மட்டும் சாத்துக்குடிச்சாறு அரிசிக்கஞ்சி போன்றவற்றை மட்டும் குறைந்த அளவு உண்டுகொள்ளலாம் அல்லது,ஒரிரு நாள் உணவை ஒதுக்கி இருந்தாலே காய்ச்சல் குறைந்துவிடும். டெங்கு,சிக்கன்குணியா,மூளைக்காய்ச்சல்,மலேரியா போன்ற காய்ச்சல்களின் வருகை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பலவீனத்தை குறிக்கிறது. மேற்கூறிய முறையிலேயே அதையும் குணப்படுத்தலாம். தேவையானால் வேளைக்கு இரண்டு துளசி மாத்திரை அல்லது ஒருத்தேக்கரண்டிநிலவேம்பு குடிநீர் பொடியில் ஒன்றரை டம்ளர் நீர்வைத்து அதை முக்கால் டம்ளராக வத்த வைத்த கசாயம், கையளவு மல்லிகை பூச்செடியின் இலையை இரண்டு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி அதை ஒரு டம்ளராக வத்த வைத்த  கசாயம்.2,வெற்றிலை,20 மிளகு,10 வேப்பிலையில் இரண்டு டம்ளர் நீர்விட்டுக் காய்ச்சி ஒரு டம்ளராக ஆக்கிய கசாயம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் தயாரித்து இரண்டு வேளையாக கசாயத்தை பகிர்ந்து கொடுக்கலாம். இப்படியே தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு கொடுத்து வந்தால்  எத்தகைய வைரஸ் காய்ச்சலும் குணமாகும்.! காய்ச்சல் இருப்பவர்களும் அடிக்கடி காய்ச்சல் வருபவர்களும்.டீ,காப்பி,பாட்டில் பானங்கள்,பிஸ்கெட்,சாக்லேட்  போன்ற இரசாயண உணவுகளையும் அசைவ உணவுகளையும் முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.!

தலைவலி:

ஊட்டச்சத்துக்குறைபாடு,நோயெதிர்ப்பு மண்டலத்தின் பலவீனம்,உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்கழிவுகள்,மனஅழுத்தம்,அதிக வேலை போன்றவற்றாலேயே தலைவலி வருகிறது. ஒற்றைத்தலைவலி உள்ளிட்ட எத்தகைய தலைவலி இருப்பவர்களும் தினமும் காலையில்  உணவிற்கு அரைமணி நேரம் முன்பு 10 துளசி இலையையும் 5 மிளகையும் மென்று தின்றுவந்தால் 40 நாட்களில் எத்தகைய தலைவலியும் பறந்து விடும். இதோடு தினமும் யோகமுத்ராசனம் 20 எண்ணிக்கை விதம் இரண்டு முறை, மட்ச்யாசனம் 50 எண்ணிக்கை ஒரு முறை.இதுபோன்ற யோகாசனங்களைதினமும் அரைமணி நேரம் செய்து வரவேண்டும்.இரசாயண உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.!

வயிற்றுவலி;

உணவு ஜீரணக்கோளாறு,மாதவிடாய் பிரச்சனைகள்,குடல்புண்,வாய்வுத்தொல்லை போன்ற காரணங்களாலேயே வயிற்றுவலி வருகிறது.
ஒரு டம்ளர் மாதுளை முத்துக்களில் சிறிது நீர் சேர்த்து  உரல் அல்லது மிக்சியில் அடித்து எடுத்துக்கொண்டு வடிகட்டி சிறிது மிளகு தூள் கலந்து காலை,மதியம் இரவு என தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்துவர வயிற்றுவலி போகும்.! அர்த்த ஹலாசனம்,நவாசனம்,சர்வாங்காசனம் புஜங்காசனம்,ஹூ க்ரியா,நாடிசுத்தி  உள்ளிட்ட யோகநுட்பங்களை தினமும் அரைமணி நேரம் பயில்வதோடு இரசாயண உணவுகளை முற்றிலும் தவிர்த்தால் நாள்ப்பட்ட வயிற்று வலிகள் கூட பறந்து போய்விடும்.!

வறட்டு இருமல்

உடலில் நீர்ச்சத்து குறைவதோடு உடல் சூடும் அதிகரிப்பதால் தான் வறட்டு இருமல் வருகிறது.
கால்த் தேக்கரண்டி அதிமதுரப் பொடியை ஒருத்தேக்கரண்டி தேனில் குழைத்து தினமும் மூன்றுவேளை உணவிற்கு அரைமணி நேரம் முன்பு உண்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.!

சளி

நுரையீரலில் சேர்ந்துள்ள கெட்டக்காற்று,உணவுப்பாதை,மூக்கு போன்ற இடங்களில் சேர்ந்துள்ள நீர்,மற்றும் தூசுகளின் சேர்க்கை,அதிகமாக மாவு உணவுகளை உண்பது போன்றவற்றாலேயே சளி உருவாகிறது.!
தினமும் இரவில் தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு சின்ன வெங்காயச்சாறு ஒருத்தேக்கரண்டி,இஞ்சிச்சாறு ஒருத்தேக்கரண்டி,தேன் இரண்டுத் தேக்கரண்டி கலந்து குடித்துவந்தால் பத்துநாளில் சளி பறந்துவிடும்.!
அதிக சளி இருப்பவர்கள் இதையே மதியம் ஒரு முறை உணவிற்கு அரைமணி முன் தயாரித்து குடிக்கலாம்.!

ஆஸ்துமா,இழுப்பு,ஈஸ்னோ பீலியா

இவை இரத்தத்தில் சளி அதிகரிப்பதாலும் நுரையீரல்,மூக்கு,நெற்றியை சுற்றி உள்ள காற்று வாங்கி பகுதியில் ஏற்படும் வீக்கத்தாலும் வருகிறது.
ஆடாதோடை இலை ஒரு பங்கு,கடுக்காய்தோடு அரைப்பங்கு.தான்றிக்காய் தோடு,நெல்லிக்காய்  தோடு,சுக்கு தலா கால்ப்பங்கு சேர்த்துப் பொடித்து வைத்துக்கொண்டு தினமும் காலை,மதியம்,இரவு உணவிற்கு அரைமணி நேரம் முன்பு ஒருத்தேக்கரண்டி பொடியை எடுத்து தேவையான அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால்  6 மாதத்தில் இந்த நோய்கள் முழுவதும் குணமாகும். அதோடு தினமும் ஒரு வேளை அவல்,தேங்காய்,சத்துமாவு,முளைகட்டிய தானியங்களை சமைக்காது சாப்பிட வேண்டும்.
வாரம் ஒருநாள் எண்ணெய் குளியல்.தினமும் அரைமணிநேரம் 108 எண்ணிக்கைகள் கபாலபதி,ஹூ க்ரியா,பஸ்திரிகா,சுகப்பிராணாயாமம் போன்ற யோகப்பயிற்சிகளை மேற்கொள்வதோடு வாரத்திற்கு இரண்டு நாள் வாமன தௌதி,சூரண தௌதி போன்ற பயிற்சிகளையும் தினமும் இரவு உணவிற்கு முன் இளஞ்சூடான நீரில் இயற்கை எனிமாவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.!

மலச்சிக்கல், மூலவியாதி,தோல்நோய்கள்

பெருங்குடலின் இறுதியில் உள்ள சீகம் பகுதியின் பலவீனம்,நார்ச்சத்து குறைந்த உணவுகள், முறையான உழைப்பின்மை மற்றும் பரம்பரையின் காரணமாக மலச்சிக்கல் வருகிறது. நாள்ப்பட்ட மலச்சிக்கலின் காரணமாக மூலவியாதி வருகிறது.மலம் ஒழுங்காக கழியாத போது, மலக்கழிவில் இருந்து இரத்தத்தில் கலந்து விடும் சில திரவங்களாலும், இறந்த செல்கள் முறையாக வியர்வை சுரப்பியின் வழியாக வெளியேற முடியாத போதும் பல விதமான தோல்நோய்கள்  ஏற்படும். மேற்கண்ட சிக்கல்கள் அனைத்திற்கும் முதலில் மூன்று நாள் தொடர்ந்து சமைக்காத பழம்,காய்கறி தானிய உணவுகளை  வேண்டிய மட்டும் உண்டு வருவதோடு சீனி முதல் நூடுல்ஸ் வரை உள்ள அத்தனை இரசாயண உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.அதன்பிறகு தினமும் ஒருவேளை சமைக்காத உணவு
இரண்டு வேளை சமைத்த உணவு என்றோ அல்லது ஒருநாள் சமைத்த உணவு மறுநாள் பழச்சாறு விரதம் என்றோ தொடர்ந்து 3 மாதங்கள் கடைப்பிடித்தால் எத்தகைய மலச்சிக்கலும் தோல்நோய்களும் குணமாகிவிடும். தினமும் இரவில் தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒருத்தேக்கரண்டி திரிபலா சூரணத்தை அரைடம்ளர் சூடுநீரில் கரைத்து குடிக்க வேண்டும்.
தினமும் காலையில்,காலை கடனை கழித்தபின்பும், இரவு உணவிற்கு முன்பும் என இருமுறை, இளஞ்சூடான நீரில் இயற்கை எனிமாவை பயன்படுத்த வேண்டும்.!
இந்த வழிமுறைகளை கடைப்பிடிப்பதோடு தினமும் அரைமணி நேரம் உட்டியாண பந்தம்,நௌலி கிரியா, யோகமுத்ராசனம்,தனூரசனம்,சர்வாங்காசனம்,மட்ச்யாசனம் போன்ற யோகா நுட்பங்களை பயின்றுவந்தால் மேற்கண்ட வியாதிகள் குணமாகும்.!

சக்கரை வியாதி

பிறவியிலேயே பான்கிரியாஸ் முறையாக இயங்காததாலும் அதிக உழைப்பு,அதிக ஓய்வு,முறையான உணவின்மை, அதிக இரசாயண உணவு,இரசாயண மருந்து போன்றவற்றின் தாக்கத்தாலும் சக்கரை வியாதி வரும். இதை குணப்படுத்த முற்றிலும் இயற்கை சார்ந்து வாழவேண்டும்.பற்பசை தொடங்கி வாயில் வைக்கும் அத்தனைப் பொருட்களிலும் இரசாயணத்தை தவிர்க்க வேண்டும். தினமும் 45 நிமிடங்கள் -10 சுற்று அக்னிசாரா கிரியா, 100 எண்ணிக்கை ஹூ கிரியா, 10 எண்ணிக்கை விதம் 6 முறை வக்ராசனம்,10 எண்ணிக்கை விதம் 3 முறை பத்ராசனம் ,மற்றும் 5 முறை சலபாசனம் போன்றவற்றையும் தொடர்ந்து செய்துவர வேண்டும். அதோடு தினமும் ஒருவேளை சமைக்காத காய்கறி,பழங்களையும், தானியங்களை உண்டு வரவேண்டும். இதுபோலவே சிறுகுறிஞ்சான் பொடி,நாவல்கொட்டை பொடி,ஆவாரம்பூ பொடி   மூன்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் காலை,இரவு உணவிற்கு அரைமணி நேரம் முன்,பொடியில் ஒருத்தேக்கரண்டி அளவெடுத்து வாயில் போட்டு கால் டம்ளர் நீர் குடித்து வந்தாலும்  இன்சுலின் சுரப்பு சீராகி சக்கரையின் பக்கவிளைவுகள் அனைத்தும் குணமாகும்.!
இதோடு வாரம் ஒருநாள் எண்ணெய் குளியல், மாதம் இரண்டுநாள் சூரியக்குளியல்,தினமும் இரவில் இளஞ்சூடான நீரில் எனிமா போன்றவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும்.முக்கியமாக தினமும்  200 கிராம் அளவிற்கு இனிப்புள்ள பழங்களை தவறாது சாப்பிட வேண்டும்.!

தைராய்டு:

இது உணவுச்சீரின்மை மற்றும் இரசாயண உணவின் தாக்கத்தால் ஏற்படும்.தைராக்ஸின் சீரின்மை முக்கியக்காரணமல்ல.! ஏனென்றால்,சக்கரை வியாதியைப் போன்று மருந்தை கொடுத்த உடன் இதன் பாதிப்பு மறைவதில்லை. எனக்குத்தெரிந்து தைராக்சின் சீர்மின்மையால் மெலிந்து,குண்டாகி,நாக்குக்குழறி,விழிபிதுங்கி என்று பல நிலையில் நோய் முற்றிய ஒருவரைக்கூட அலோபதி மருத்துவம் குணப்படுத்தியது கிடையாது. எனது நண்பர் ஒருவருக்கு சிறுவயது முதலே தைராக்சின் அதிகமாக இருப்பதால் கிட்டத்தட்ட இருபது வருடம் ஆங்கில மருத்துவம் பார்த்தும் ஒன்றும் வேலைக்கு ஆகாமல் இப்பொழுதுதான் இயற்கை வாழ்வியல் முறைக்கு திரும்பி உள்ளார்.
நடிகர் விஜயகாந்திற்கு தைராக்சின் சுரப்பு குறைவாக உள்ளதாக கூறுகிறார்கள்.அவர் இயற்கைக்கு திரும்பினால் அதிகப்பட்சம் ஒரு வருடத்தில்  குணமாவார்.!
இருவகை பாதிப்பு இருப்பவர்களும் சமையலுக்கு எந்த இரசாயணப் பொருட்களையும் பயன்படுத்தாமல்,தினமும் ஒருவேளை கைக்குத்தல் அரிசி அரக்கீரை,முருங்கக்கீரை,பொண்ணாங்கண்ணி கீரை,தோல் நீக்காத உடைத்த உழுந்து, இந்துப்பு போட்டுக் காய்ச்சிய கஞ்சியும் மற்ற இருவேளை சமைக்காமல் ஆவியில் வேகவைத்த இட்லி,ஆவியில் வேகவைத்த காய்கறி போன்றவற்றோடு அத்திப்பழம்,சீதாப்பழம்,மட்டி வாழைப்பழம் போன்றவற்றை மட்டும் சாப்பிட்டு வரவேண்டும்.  தினமும் 20 நிமிடங்கள் வரை சர்வாங்காசனம, விபரீத கரணி,சிரசாசனம்,மட்ச்யாசனம் போன்ற ஆசனங்களையும். 50 எண்ணிக்கை வீதம் சவனக்கிரியா, ஹூ க்ரியா போன்ற யோகநுட்பங்களையும் பயின்றுவரவேண்டும். தினமும் இரவில் எனிமா,வாரம் ஒருநாள் எண்ணெய் குளியல்,வாரம் ஒருநாள் மண்குளியல், வாரம் இரண்டுநாள் வாமனதௌதி  போன்ற பயிற்சிகளையும் செய்து வந்தால் குணம் கிடைக்கும்.அதோடு காய்ந்த வேப்பம்விதை,சுக்கு,மிளகு,திப்பிலி,பனங்கற்கண்டு சம அளவெடுத்து பொடித்து வைத்துக்கொண்டு காலை,மதியம்,இரவு உணவிற்கு அரைமணி முன், அல்லது அரைமணி பின் அரைத்தேக்கரண்டி பொடியை சிறிது சுடுநீரில் கலந்து குடித்துவர எல்லா வகை தைராய்டும் குணமாகும்.!

உயர் இரத்தஅழுத்தம்:

இரத்தக் குழாய்களில் அடைப்பு,அதிக வேலைப்பளு,இரத்த சுத்தமின்மை போன்ற காரணங்களால் இரத்த அழுத்தம் வரும்.

தினமும் காலை எழுந்ததும் 5 டம்ளர் குளிர்ந்த நீரை குடித்து காலைகடன்களை முடித்து, குளித்தபின் மகா முத்ராசனம்,ஜானுசீராசனம், 10 எண்ணிக்கை விதம் இரண்டு ஆசனமும் சேர்த்து மொத்தம் 6 தடவைகள். மட்ச்யாசனம் 60 எண்ணிக்கை ஒரு முறை.சாந்தியாசனம் 10 நிமிடம்.ஓம்கார தியானம் 10 நிமிடம் இந்தப் பயிற்சிகளை செய்துவிட்டு. காலை,இரவு உணவிற்கு அரைமணி முன்பு இரண்டு துளசி மாத்திரைகள் விதம்  உண்டுவந்தால் உயர் இரத்த அழுத்தம் குணமாகும்.அதோடு சமையலுக்கு இந்துப்பு,செக்கு எண்ணெய்கள், இரசாயணமில்லாத பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.தினமும் ஒருவேளை பழம் காய்கறிகளை மட்டும் உண்ண வேண்டும்.அதோடு தினமும் 20 நிமிடம் முதுகு குளியல் எடுப்பது மிகுந்த பலனைதரும்.!

குறை இரத்த அழுத்தம்

நரம்புத்தளர்ச்சி,உடல் பலவீனம்,இரத்தத்தில் சத்துக்குறைபாடு,மனக்கவலை போன்ற காரணங்களினால் குறை அழுத்தம் உருவாகும்.
தினமும் காலையில் எழுந்ததும் 5 டம்ளர் வெதுவெது நீரைக்குடித்து காலை கடனை முடித்தபின் உஷ்ட்ராசனம் 30 எண்ணிக்கை விதம் இரண்டுமுறை,சக்கராசனம் 15 எண்ணிக்கை விதம் இரண்டுமுறை,சர்வாங்காசனம் 30 விநாடி வீதம் இரண்டுமுறை,மட்ச்யாசனம் 30 விநாடி விதம் 2 முறை,மக்கராசனம் ஒரு முறை 5 நிமிடம். போன்ற பயிற்சிகளை செய்து வருவதோடு,தினமும் மூன்று பரல் பூண்டை பச்சையாக மதிய உணவோடு மென்று சாப்பிட்டு வரவேண்டும்.
வாரம் இரண்டுநாள் சூரியக்குளியல்,வாரம் ஒரு நாள் எண்ணெய் மசாஜ் போன்றவற்றையும் செய்துவந்தால் குறை அழுத்தம்
சீராகும். உணவில் முருங்கைகாய்,கீரை,பேரிச்சம் பழம்,மாதுளம்பழம்,கேழ்வரகு,பட்டாணி போன்றவற்றை செய்து வந்தால் குணமாகும்.!

கொழுப்பு,இதயநோய், மாரடைப்பு

தினமும்  காலையில்  பத்து நிமிடம் குறைந்த ஆடையுடன் சூரியக்குளியல் எடுத்துக்கொள்ள வேண்டும். 10 நிமிடம் சாந்தியாசனம்,10 நிமிடம் ஓம்கார தியானம் 10 நிமிடம்,பிரபஞ்சா பிராணாயாமம் ஐந்து சுற்றுகள். மதியம் அரை டம்ளர் விதையுள்ள கருப்பு திராட்சையின் இரசத்தில் நான்கு பூண்டு பரல்களை சதைத்துப்போட்டு உணவிற்கு அரைமணி முன்னால் அல்லது பின்னால் குடித்து வருவதோடு,தினமும்  இரவில் சுடுநீர் எனிமா,வாரம் இருமுறை எண்ணெய் குளியல் செய்வதோடு அசைவ உணவு,இரசாயண  உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றை தொடர்ந்து கடைபிடித்து வர இரண்டு மாதத்தில் மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும்.!

நரம்புத்தளர்ச்சி,வலிப்பு,சோர்வு,
பக்கவாதம்,ஆண்மைகுறைவு

ஊட்டச்சத்துக் குறைபாடு,கவலை,நரம்பு மண்டல பலவீனம் போன்றவற்றால்  மேற்கண்ட நோய்கள் வருகிறது.
தினமும் அரைமணி நேரம் வீரியஸ்தம்பன்,ஜானுசீராசனம்,பரிவர்த்தாசனம்,நாடிசுத்தி,பிரபஞ்சா தியானம் போன்ற யோகப் பயிற்சிகளை செய்து வரவேண்டும்.தினமும் ஒருவேளை பாதாம் பருப்பு,முந்திரிப்பருப்பு,வேர்க்கடலை,தேங்காய்,வாழைப்பழம்,கருப்பட்டி போன்றவற்றை மட்டுமே சாப்பிட வேண்டும்.வாரம் இரண்டு நாள் எண்ணெய் குளியல்,தினமும் 10 முதல் 15 நிமிடம் சூரியக்குளியல், தினமும் 15 நிமிடம் முதுகுதண்டு குளியல்,தினமும் இரவு உணவிற்கு முன் இயற்கை எனிமா போன்ற வற்றையும் எடுத்துகொள்ள  வேண்டும்.அதோடு தினமும் காலை,மாலை உணவிற்கு முன் இரண்டு அமுக்ரா மாத்திரை அல்லது நெல்லிக் காயளவு அமுக்ரா லேகியத்தை சாப்பிட்டு கால்டம்ளர் சுடுநீரை குடித்துவர 6 மாதத்தில் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.!

கண் நோய்கள்

கண்ணிற்கு வரும் நரம்பு மண்டல பாதிப்பு,ஊட்டச்சத்து குறைபாடு,
தூக்கமின்மை,கணிணி,கைப்பேசி போன்றவற்றை அதிகம் பயன்படுத்துதல்,அதிகசூடு, மனஅழுத்தம் போன்ற காரணங்களாலும் பரம்பரை ரீதியிலான பாதிப்புகளினாலும் கண்பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் தோன்றுகிறது. தினமும் காலை மாலை இருவேளையும் கண்களை சுருக்கி விரித்து, கருவிழியை பக்கவாட்டில் நகர்த்தி,கண்களை வலம் இடமாக சுழற்றி செய்யும் கண்பயிற்சி.<நமது சாந்தியாசனம் குறிப்பில் உள்ளது>
அதோடு உணவில் அத்திப்பழம்,பாதாம்பருப்பு,கருப்புதிராட்சை பொண்ணாங்கண்ணி கீரை,முருங்கைகீரை,கற்றாழை ஜூஸ்,சின்ன வெங்காயம்,பீட்ரூட்,கேரட் போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வரவேண்டும்.தினமும் ஆறுசுற்று சூரியநமஸ்காரம்,பர்வட்டாசனம் 15 எண்ணிக்கை விதம் 3 முறை,சர்வாங்காசனம் 30 விநாடி விதம் 2 முறை,ஹலாசனம் 30 விநாடி விதம் 2 முறை.சிரசாசனம் 3 நிமிடம்,நின்ற பாதாசனம் 30 எண்ணிக்கை 2 முறை செய்து வரவேண்டும். ஒரு டம்ளர் சோற்றுக்கற்றாழை சதையோடு ஒரு டம்ளர் முருங்கை இலைச்சாறு,நான்கு டம்ளர் செக்கு தேங்காய் எண்ணெயை கலந்து காய்ச்சி தினமும் காலையில் தலையில் தேய்த்து குளித்து வரவேண்டும்.மாதம் இருமுறை மண்குளியல் எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை தினமும் இருவேளை தலைக்கு குளித்துவிட வேண்டும். தினமும் 10 நிமிடம் பிரபஞ்சா தியானம் செய்யலாம். இந்த வழிமுறைகளை தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு,கண்சிகப்பு,கண் உறுத்தல்,கண் கூசுதல்,கண்ணில் நீர் வழிதல் போன்ற எத்தகைய குறைபாடும் 48 நாளில் குணமாகும்.!

பல்நோய்கள்

இரத்தத்தில் சத்துகுறைபாடு,அதிக இரசாயண உணவு,பல்லை இரசாயண பற்பசைகளை பயன்படுத்தி சுத்தம் செய்தல்,உணவு உண்ட பின்னும் இரவில் தூங்குவதற்கு முன்னும் பல்களை தேய்த்து சுத்தம் செய்யாமல் இருத்தல் போன்ற காரணங்களால்
பல் சம்மந்தப்பட்ட வியாதிகள் வருகிறது. தினமும் ஒருவேளை சமைக்காத தேங்காய்,கேரட்,வெள்ளரிக்காய்,வாழைப்பழம் போன்றவற்றை உண்டு வருவதோடு உணவில் கேழ்வரகு,அகத்திகீரை,பேரிச்சம்பழம்,முருங்கைகீரை,முட்டைகோஸ்,காலிபிளவர்,பசுந்தயிர்,பசும்பால்,வெண்ணெய்,நெய் போன்றவற்றையும் அதிகம் பயன்படுத்த வேண்டும். தினமும் 30 நிமிடம் - சூரியநமஸ்காரம் 6சுற்று,பர்வட்டாசனம் 3×15 விநாடிகள்,சர்வாங்காசனம் 3×30 விநாடிகள்,சிரசாசனம் 1×60 விநாடிகள்,மட்யாசனம் 1×50 விநாடிகள்,சீத்தளி பிராணாயாமம்,நாடிசுத்தி பிராணாயாமம் தினமும் காலை,மாலை தலா பத்து சுற்றுகள். வாரத்தில் இரண்டுநாள் நல்லெண்ணெய் கொப்பளிப்பு.
தினமும் இரவில் இயற்கை எனிமா,வாரம் ஒருநாள் எண்ணெய் குளியல் போன்றவற்றையும் தவறாது செய்துவர பல் சம்மந்தப்பட்ட எல்லா வியாதிகளும் குணமாகும்.!

மனஅழுத்தம்,தூக்கமின்மை,பதட்டம்

எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாமல் போதல்,அதிக வேலைப்பளு, அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் கொண்டு வரும் மக்களை வதைக்கும் திட்டங்கள்,குடும்ப வாழ்க்கையில் உள்ள குளறுபடிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளால் மேற்கண்ட நோய்கள் வரும்
காலை எழுந்தது 5 டம்ளர் குளிர்ந்த நீரை குடித்து காலை கடன்களை முடித்த பின்னால் 10 சுற்றுகள் மந்திர பிராணாயாமம்,7 நிமிடம் சுகதியானம் அல்லது விபாசனா தியானம் செய்து கொள்ளலாம்.காலை உணவிற்கு அரைமணி நேரம் முன்பு 10 பாதாம் பருப்பு அல்லது 30 கிராம் வேர்க்கடலையை சாப்பிட வேண்டும்.
தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். வாரம் இரண்டு நாள் எண்ணெய் குளியல்,மாதம் இரண்டு நாள் வாழையிலை குளியல்,தினமும் இரவு தூங்குவதற்கு முன் தாரணை தியானம் 10 நிமிடங்கள் செய்துவிட்டு 4,7,8 பிராணாயாமம் 10 சுற்றுகள் வரை செய்துவிட்டு படுத்தால் ஆழ்ந்த தூக்கம் வருவதோடு மனஅழுத்தம்,பதட்டம் மறையும்.இதோடு தினமும் 20 நிமிடம் இயற்கை மரங்கள் சூழ்ந்த பகுதியில் அமருதல்,குழந்தைகளுடன் விளையாடுதல்,நண்பர்களுடன் மனம்விட்டு பேசுதல்,எளியவர்களுக்கு உதவுதல், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லுதல்,நல்ல இலக்கிய நூல்களை படித்தல், போன்ற செயல்களில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தொடர்ந்து செய்து வந்தால் மேற்கண்ட குறைபாடுகள் முற்றிலும் தீரும்.தேவைப்பட்டால் ஒருடம்ளர் சோற்றுக்கற்றாழை ஜூஸில் நான்கு தேக்கரண்டி தேன்,அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு,இரண்டு கிராம்பு சிறிது கசகசா சேர்த்துப் போட்டு தினமும் ஒருவேளை குடித்து வந்தால் மனம் லேசாக இருப்பதோடு தூக்கமின்மையும் போகும்.!

மூட்டுவலி,முதுகுத்தண்டு வலி,கழுத்துவலி,குதிகால் வலி,உடல்வலி

நாள்ப்பட்ட முறையற்ற உடல் இயக்கம்,ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பிட்ட பகுதிக்கு வரும் இரத்த ஓட்டத்தில் தடை,உடலில் தங்கி எலும்புகளில் புகுந்து விடும் இரசாயண உணவு மற்றும் மருந்துகளின் தேக்கம் போன்றவற்றின் காரணமாகவே மேற்கண்ட நோய்கள் வருகிறது.
தினமும் காலையில் வெயிலில் 30 நிமிடங்கள் கைகால்,இடுப்பு,கழுத்து எலும்புகளை தளர்வாக்கும் எளிய உடற்பயிற்சி செய்துவிட்டு. புஜங்காசனம் 3×10 விநாடிகள்,சலபாசனம் 3×10 விநாடிகள்,நாபிஆசனம் 4×10 விநாடி. இதோடு சாந்தியாசனம் 10 நிமிடம்,நாடிசுத்தி 10 சுற்றுகள் செய்து வரவேண்டும்.தினமும் ஒருவேளை சமைக்காத உணவோடு இரண்டு டம்ளர் இயற்கை ஊட்டச்சத்து மாவு கூழ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் இருவேளை இயற்கை எனிமா,வாரம் ஒருநாள் எண்ணெய் குளியல், மாதம் இரண்டு நாள் மண்குளியல் போன்றவற்றையும் செய்துவர மேற்கூறிய பாதிப்புகள் சீராகும்.!

கட்டி

உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உடல் அவற்றை,ஒரு இடத்தில் ஒதுக்கி வைப்பதே கட்டியாய் வருகிறது.

எருக்கன்பூ,ஊமத்தன் விதை இரண்டும் சம அளவாக 50 கிராம் அளவிற்கு எடுத்து சதைத்து அதோடு 300 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து சூடாக்கி கிண்டி கொழகொழ பதத்தில் எடுத்து வைத்துக் கொண்டு வெளிகட்டி உள்ள இடத்தில் வைத்து கட்டிவிட வர கட்டி மூன்று முதல் பத்து நாளில் பழுத்து உடைந்துவிடும்.உள்ளுக்குள் உள்ள கட்டிகளுக்கு பத்து நித்ய கல்யாணி  பூக்களை பிய்த்துப்போட்டு இரண்டு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி அது ஒருடம்ளர் அளவானதும் இறக்கி வடிகட்டி சிறிது பனங்கற்கண்டு கலந்து, பகிர்ந்து காலை,மதியம் என உணவிற்கு அரைமணி நேரம் முன்பு தொடர்ந்து 30 நாட்கள் குடித்துவர கட்டி கரைந்துவிடும். இரசாயண உணவுகளை முற்றிலும் தவிர்த்து தினமும் இரண்டு வேளை சமைக்காத பழம்,காய்கறி,தானியங்களை மட்டுமே உண்டுவரவேண்டும். இதோடு தினமும் இரவில் இயற்கை எனிமா,தினமும் 20 நிமிடம் சூரியக்குளில்,வாரம் மூன்றுநாள் மண்குளியல் போன்ற வற்றையும் செய்து வர இரண்டு மாதத்தில் எத்தகைய கட்டியும் கரையும்.!

சிறுநீரகக்கல்

சிறு நீரகத்தில் சேரும் அதிகமான கழிவுகளால் கல் உருவாகிறது.நீர் குடிக்காமல் இருத்தல், உப்புநீரை குடித்தல்,இரசாயண உணவுகளை சாப்பிடுதல்,முறையான உடலுழைப்பின்மை போன்றவையும் கல் உருவாக முக்கியக் காரணம்.

முதல் நாள் முழுவதும் பழ உணவுகளை மட்டும் உண்டுவிட்டு அடுத்தநாள் காலை எழுந்ததும் ஆறுடம்ளர் நீர் குடித்து காலை கடன் கழித்த பிறகு 500 மில்லி வாழைத்தண்டுச் சாறில் சிருங்கி பற்பம் 1 கிராம்,நண்டுக்கல் பற்பம் 1 கிராம் சேர்த்து கலக்கி குடித்து விட்டு ஒரு மணி நேரம் எதுவும் குடிக்காமல் இருந்துவிட்டு பிறகு ஒரு லிட்டர் நீர் விதம் இரண்டு மூன்றுமுறை வரை நீரை குடித்துவந்தால் ஒரே நாளில் 10mm வரை உள்ள கற்கள் வெளியேறிவிடும். தினமும் ஒருவேளை பழ உணவை எடுத்துக் கொள்வதோடு காலை,மதியம் உணவிற்கு இரண்டு மணி நேரம் பின் ஒவ்வெரு வேளையும் ஒருலிட்டர் நீர் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல்,கழிவுகள் சேருவதை தடுக்கும்.!

பித்தப்பை கல்

பசிக்கும் நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பதாலும்,
பரம்பரை காரணமாகவும்
இரசாயண உணவுகளின் தாக்கத்தாலும், நாள்பட்ட மலச்சிக்கல் காரணமாகவும் பித்தப்பையில் கல் உருவாகும்.
தினமும் ஒருவேளை சமைக்காத பழம்,காய்கறி தானியங்களை உண்பதோடு, இரண்டு வேளை இரசாயண கலப்பில்லாத உணவுகளை உண்டுவர வேண்டும். தினமும் அரை மணி நேரம் யோகா. பஸ்திமோத்தானாசம் 3×20 விநாடி,தனூராசனம் 3×20 விநாடி,
பவன முத்தாசனம் 2×15 விநாடி,
சர்வாங்காசனம் 2×30 விநாடிகள்,
மட்ச்யாசனம் 1×60 விநாடி,ஹூ க்ரியா 200 எண்ணிக்கை சுகப் பிராணாயாமம்,நாடிசுத்தி பிராணாயாமம் காலை, மாலை தினமும் பத்து சுற்றுகள் வரை செய்துவர வேண்டும். வாரம் இரண்டுநாள் எண்ணெய் குளியல்,மாதம் இருமுறை மண்குளியல்,தினமும் இரவில் இயற்கை எனிமா போன்றவற்றை கடைப்பிடித்து உணவில் கொய்யா,வாழை,மாம்பழம்,பூண்டு,வாழைத்தணடு,தடியங்காய்,பூசணிக்காய் போன்றவற்றை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
மருந்தாக 500 மில்லி விளக்கெண்ணெயில் 200 கிராம் வெள்ளைபூண்டு
30 கிராம் இந்துப்பு
20 கிராம் பெருங்காயத்தை அரைத்துப்போட்டு சிவக்க காய்ச்சி வடிகட்டி வைத்துகொண்டு.  தினமும் இரவு உணவிற்கு முன் அல்லது பின்
இதில் 15 மில்லி எண்ணெயை வாயில்விட்டு விழுங்கி விட வேண்டும்.
இப்படி தொடர்ந்து 3 முதல் 6 மாதம் வரை செய்துவர கரையும் நிலையில் உள்ள கல் கரைந்து விடுவதோடு வாய்வுத்தொல்லை,அதிகசளி போன்ற குறைபாடுகளும் மாறும்.!

குடலிறக்கம்

பெருங்குடலை தாங்கும் தசை போன்ற பகுதி பலவீனமாவதாலும் உடலை அதிகம் வருத்தி செய்யும் வேலைகளாலும் குடலிறக்கம் ஏற்படுகிறது.
தினமும் நவாசனம் 3×20 விநாடிகள்,அர்த்த ஏகபாத சிரசாசனம் 6×10 விநாடி,சர்வாங்காசனம் 2×30 விநாடிகள்,சிரசாசனம் 1×120 விநாடி,சமஸ்திதி ஆசனம் 1×60 விநாடிகள் செய்து வர வேண்டும். வேறு எந்த ஆசனங்களையும் செய்வதை தவிர்க்க வேண்டும். தினமும் ஒரு வேளை சமைக்காத உணவு, மற்ற இருவேளையும் இரசாயண கலப்பில்லாத எளிய உணவுகளை அரை வயிறு மட்டும் உண்ண வேண்டும்.வாரம் ஒரு முறை மண்குளியல்,தினமும் இரவில் இயற்கை எனிமா போன்றவற்றை யும் கடைப்பிடித்து வர நாளடைவில் குடலிறக்கம் சீராகும்.!அதிக வலியோ,அல்லது அடிக்கடி பேதி போதல் போன்ற கோளாறுகள் தென்பட்டால் அறுவை சிகிட்சை செய்வதே நல்லது.!

மஞ்சள் காமாலை:
       ரத்தத்தில் அதிகப்படியான பித்தம்(2mg/dl - normal 1mg/dl) பித்தம் இருப்பதே மஞ்சள் காமாலை(Joundice) எனப்படுகிறது.
  கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று காரணங்களால் மஞ்சள் காமாலை வருகிறது.
    1. பித்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் அதிகப்படியான பித்தமானது ரத்தத்தில் கலக்கிறது. இது obstructive jaundice எனப்படுகிறது.

2. ரத்த செல்கள் அழியும் போது ஏற்படும் ஏற்படும் வேதி வினை மாற்றத்தால் ரத்தத்தில் பித்தம் கலப்பது Hemolytic jaundice எனப்படுகிறது.

3. கல்லீரலின் செல்கள் பாதுக்கப்படுவதால் உண்டாவது (Hepatic jaundice) எனப்படுகிறது.

      இரண்டடிக்கு குறைவான வளர்த்தியாய் இருந்தால் வேரோடும் இரண்டடிக்கு மேலாக வளர்ந்த செடியெனில் தேவையான அளவு கீழா நெல்லி இலையையும்  எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 200 மில்லி  மோரில் கலந்து காலை வெறும் வயிற்றிலும், மாலையிலும் இதுபோல் 10 நாட்கள் அருந்த குணமாகும். உப்பு காரம் சேர்க்காத சுடு கஞ்சியை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
அதோடு தேவையான அளவு காட்டு நெல்லிக்காயை நான்காக வெட்டி இரண்டு மணிநேரம் வெயிலில் வைத்து உலர்த்தி பின் மூழ்கும் அளவு நல்ல தேனில் கலந்து  மூடிவைத்து , தினமும் தொடர்ந்து மூன்று வேளையும் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு எடுத்து 48 நாட்கள் உண்டுவர வேண்டும்.தினமும் இரவில் எனிமா,வாரம் இருமுறை மண் குளியல்,தினமும் அரைமணி நேரம் சாந்தியாசனம்,சுகப்பிராணாயாமம்,நாடிசுத்தி பிராணாயாமம் போன்றவற்றை செய்து வருவதோடு 60 நாட்களுக்கு  இரசாயண,அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.!

சிறுநீரக செயலிழப்பு

    சிறுநீரக செயல்பாட்டு அலகு எனப்படும் nephrons பாதிக்கப்பட்டு சிறு நீர் உற்பத்தி பாதிக்கப்படுவதே kidney failure அல்லது சிறுநீரக செயலிழப்பு எனப்படும். இந்நிலையில் ரத்தத்திலுள்ள கழிவுப்பொருட்களானது சரியாக அல்லது முழுவதுமாக வடிகட்ட முடியாமல் போய்விடும். அதிக பணி,அதிக உடலுறவு,அதிகமாக மது அருந்துதல், காரீயம் போன்ற வேதிப்பொருட்கள் செறிந்துள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படுகிறது.
தினமும் காலையில் 30 நிமிடம் யோகா. மார்ஜரி ஆசனம் 5×10 விநாடிகள்,உஷ்ட்ராசனம் 3×10 விநாடிகள்,சர்வாங்காசனம் 1×30 விநாடிகள்,மட்ச்யாசனம் 1×50 விநாடிகள்,நாடிசுத்தி 5 சுற்றுகள்,சாந்தியாசனம் 10 நிமிடம்.தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடம் வரை வெயிலில் அமர்ந்திருக்க வேண்டும்.100 கிராம் இஞ்சியை தட்டி ஒரு லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை துணியில் பிழிந்து முதுகு புறம் கிட்னி இருக்கும் இடத்தை சுற்றி 15 நிமிடம் வரை ஒத்தடம் கொடுக்க வேண்டும்.உணவாக கொய்யா,ஆப்பிள்,விதையுள்ள கருப்பு திராட்சை,பப்பாளிபழம்,முந்திரிப்பருப்பை மட்டுமே மிக குறைந்த அளவு கொடுக்க வேண்டும்.மருந்தாக அரைகப் சோற்றுக்கற்றாழை ஜெல்லில் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து காலை,மாலை இருவேளை கொடுக்க வேண்டும். ஆங்கில மருத்துவர்கள் விதையுள்ள பழங்களை கொடுக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள். இது தவறு.
தினமும் ஒருவேளை இயற்கை எனிமா மாதம் இருமுறை வாழையிலை குளியல் போன்றவற்றையும் தொடர்ந்து செய்து வர ஒரிரு மாதங்களில் சிறுநீரக இயக்கம் சீராகும்.! <இந்த முறையை கையாண்டு எனக்கு தெரிந்த இருவர் குணமடைந்துள்ளனர்>

புற்றுநோய்,வைரஸ் நோய்கள்

உடலில் உள்ள நோயெதிர்ப்பு ஆற்றல் முற்றிலும் சீரழிந்த நிலையில் இரத்தப்புற்று,நுரையீரல் புற்று,கர்பபைபுற்று,மார்பகப் புற்று போன்ற பல்வேறு புற்றுநோய்கள் ஏற்படுகிறது.இராமகிருஷ்ண பரமஹம்சர்,இரமண மகரிசி போன்ற மகான்களுக்கும் கூட புற்றுநோய் வந்துள்ளது.ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதை வாடிக்கையாய் கொண்டவர்கள்,ஏசி அறையிலேயே இருப்பவர்கள்,சரியான உணவு முறையை பின்பாற்றாதவர்கள்,உடலுழைப்பு அதிகம் இருப்பவர்களுக்கு இந்நோய் 50% வரை அதிகமாய் வரும் வாய்ப்புள்ளது. என்று கொலம்பியா பல்கலை கழக ஆய்வு கூறுகிறது.
எந்தவகை புற்றுநோய் வந்தாலும் முதலில் சளி,மலம்,சிறுநீர்,வியர்வை போன்றவற்றை உடலில் தேங்க விடாமல் தினமும் மூன்று வேளையும் எனிமா கொடுத்தல்,நாடிசுத்தி பிராணாயாமம் செய்தல்,3 நிமிடம் வரை சிரசாசனம் செய்தல் போன்றவற்றை  தொடர்ந்து செய்து வருவதோடு இரண்டு வேளை  சமைக்காத இயற்கை பழம்,முந்திரிப்பருப்பு,பாதாம்,வேர்க்கடலை,அத்திப்பழம் போன்றவற்றை மட்டுமே உண்ணுவதோடு ஒருவேளை மட்டும் கைக்குத்தல் அரிசிக் கஞ்சியில் 10 துளசி இலை ஒருத் தேக்கரண்டி மஞ்சள் தூள்,மூன்று பூண்டு பரல்களை தட்டிப்போட்ட கஞ்சியை மட்டுமே கொடுக்க வேண்டும்.  மருந்தாக இயற்கையில் விளைந்த மரவள்ளிக்கிழங்கை <இரண்டு கிலோ அளவிற்கு> சிறிய துண்டாக வெட்டி அதை உரல் அல்லது மிக்சியில் போட்டு சிறிது நீர் ஊற்றி கூழாக அரைத்து எடுத்துக் கொண்டு இந்த கலவையில் மேலும் கொஞ்சம் நீர்விட்டு சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொண்டு அதோடு சம அளவு தேன் கலந்து மண்பானை அல்லது குளிர்பெட்டியில் வைத்து கொண்டு
மூன்று வேளையும் உணவிற்கு முன் மூன்று தேக்கரண்டி விதம் குடித்து வர வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி வந்தால் முதல் இரண்டு நிலையில் உள்ள புற்று நோயாளிகளும்,சமீபத்தில் அறுவை செய்து கொண்ட புற்று நோயாளிகளும் நிச்சயம் பாதுகாப்பு பெறுவார்கள். இறுதி நிலையில் இருப்பவர்களுக்கும் வாழ்நாளை நீட்ட உதவும்.!

பெண்களுக்கு வெள்ளைப்படுதல்,நீர்க்கட்டி,மாதந்திரவலி போன்றவற்றுக்கு தகினமும் அரைமணி முதல் ஒரு மணிநேரம் வரை இடுப்புக்குளியல் எடுத்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.<இடுப்புக்குளியல்,பத்துவகை குளியல் பகுதியில் உள்ளது.> குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவம் பகுதியில் பெண்கள்,மற்றும் குழந்தைகள் நோய்க்கான இயற்கை தீர்வுகள் உள்ளன.! உடல் பருமனுக்கு ஏற்கனவே பதிவிட்டுள்ளோம்.!
ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்கள் மட்டுமல்லாது இயற்கை வாழ்வியல் நாட்டமுள்ள அனைவரும் மூலிகை,பல்பொடி,மூலிகை குளியல் பொடியை பயன்படுத்துதல் தினமும் ஒருவேளை சமைக்காத உணவை மட்டுமே சாப்பிடுதல்,இயற்கை எனிமா,கண்குடுவை,நேதி குடுவை போன்றவற்றை பயன்படுத்த கற்றுக்கொள்ளுதல்,எப்பொழுதுமே சமையலுக்கு இந்துப்பு,செக்கு கடலை எண்ணெய்,செக்கு நல்லெண்ணெய்,செக்கு தேங்காயெண்ணெயை மட்டுமே பயன்படுத்தல்,அசைவ உணவுகளையும் இரசாயண உணவுகளையும் முடிந்தவரை தவிர்த்து பிராய்லர் கோழி,பிராய்லர் முட்டை,பாக்கெட் பால்,சீனி,மைதா,போன்றவற்றை அறவே தவிர்த்தல்,வாரம் ஒருநாள் எண்ணெய் குளியல்,மண்குளியல் போன்றவற்றை செய்தல்,தினமும் இரவில் பத்து மணிக்குள் தூங்குவது,சமூக வலை தளங்களிலும் தொலை காட்சியிலும் குறைந்த நேரம் மட்டுமே உலவுதல், தினமும் ஒரு மணி நேரம் யோகம் பயிலுதல்,மாதம் ஒருநாள் மௌனவிரதம் அனுசரித்தல்,தினமும் இரவில் பல்தேய்த்தல் போன்ற நல்ல பயனுள்ள வழக்கங்களை கை கொள்ள வேண்டும். அதோடு பசித்து உண்ணும் மூன்று வேளை உணவை தவிர இடை வேளையில் பசித்தாலும் நீர்,அல்லது வெறும் பழச்சாறுகளை மட்டுமே அருந்துதல், முடிந்தவரை இரசாயண மருந்துகளை பயன்படுத்தாமல் இருப்பது போன்ற அனைத்து நல்ல வழக்கங்களையும் அனைவரும் கைக் கொள்ளுதல் போன்றவை  ஆரோக்கிய  அவசியம்.!
நலம் பெருகட்டும்  …

-ஏகப்பிரியன் DYT

தொடரும் …

aumherbals.blogspot.in

*பகிரவேண்டாம்*

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...