I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: குழந்தை வைத்தியம்

Wednesday, 24 May 2017

குழந்தை வைத்தியம்

குழந்தைக்கு மலச்சிக்கலா?

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல  தேனை  ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன்உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால் தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும்.

தினமும் இரவில் விளக்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தயின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.

நாட்டுமருந்து கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும் போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துகொள்ளவும். குழந்தையை குளிப்பட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

சில  குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வட்டிக்கட்டி ஊற்றினால் வாந்தி சற்றென்று நின்று விடும். குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும்.

குழந்தை தினமும் இரண்டு மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்ல உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு பிசைந்து வடிகட்டி சங்களவு புகட்டினால் ஒரு மணி நேரத்தில் கழிவு வெளியேறிவிடும்.!
மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம்.

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...