*உயிர் மீட்கும் மருத்துவம்
26.உணவும் விரதமும்
ஐயிரண்டு திங்கள் மையிருட்டில் தவம் செய்து ஒடுங்கி நெளிந்து
ஓம்கார வடிவாகி பிறந்து வளர்ந்து
பின் சுவைக்காக
நஞ்சுண்டு பறந்து திரியும் மானிடப் பிண்டங்கள் … பிணிவரும் முன்னே
தன் உடலை காத்திட …
பிணிவந்த காலத்தில்
உயிரை மீட்டிட …
ஒரு வழியுண்டு அதுவே இயற்கைவழி.! அதுவே இறைவழி.! வள்ளுவன் சொன்ன வழி …
கீதையும் உரைத்த வழி …
ஏசுதேவனும் மாநபியும் மகிழ்வாய் சென்ற வழி.!
அது பழம் உண்ணும் பெருவழி விரதமெனும் அருள்மொழி.!
-ஏகப்பிரியன்
உணவு மருந்தாக செயல் புரியவும் மருத்துவ குணமுள்ள உணவுப் பொருட்களை உணவாக உட்கொள்ளவும் பயிற்றுவிக்கப்பட்ட மனிதர்களில் தமிழர்கள் மிக முக்கியமானவர்கள்.!
ஆனால், இன்றைய விளம்பர உலகு அந்த பண்பட்ட கல்வியின் மீது ஒரு இரும்புத்திரையை போட்டு மூடிவிட்டு சின்னத்திரையின் மூலமும் பெரிய திரையின் மூலமும் பன்னாட்டு குப்பைகளை நம் வீட்டில் கொண்டு சேர்த்துவிட்டனர்.!!
பல் தேய்க்கும் பசையில் தொடங்கி ஹார்லிக்ஸ்,பூஸ்ட், பிஸ்கெட்,சாக்லேட், மரபணு மாற்றிய உணவுப்பொருட்கள் என்று நாம் பயன்படுத்தும் அத்தனையிலும் 90%
இரசாயண நச்சுக்களே நிறைந்துள்ளன.!
மேல் தோல் நீக்கிய அரிசியில், தானியங்களில் செய்த உணவுகளை சாப்பிடுவது உடலை வதைக்கும் ஒரு பாவச்செயல்.!
இதனால் மலச்சிக்கல் முதல் பல்வேறு நோய்கள் உருவாகும்.! இன்னும் மைதா,சீனி,மரபணுமாற்றிய காய்கனி மற்றும் நெல் இரகங்களைப் பற்றி கேட்டாலே நமக்கு நெஞ்சம் பதறுகிறது.!
ஆனால், அரசும் ,அரசு விவசாய கழகமும் இந்த மாபாதகச் செயலை செய்வதற்காகவே பல நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளனர்.!
அரசு ரேசன் கடையில் இரசாயண முறையில் விளைவிக்கப்பட்ட தீட்டிய அரிசி,தேயிலை, சீனி,மைதா போன்ற விசப்பொருட்களை கூசாமல் வழங்கி வருகிறார்கள்.!
அரசு விவசாய கழகத்தில் இரசாயண உரம் வாங்க மானியம் வழங்குவதோடு மரபணு மாற்றிய காய்கறி,மிளகு, தென்னை இரகங்களை விவசாயிகளுக்கு வழங்கி, மக்களின் ஆரோக்கியத்திற்கு சாவு மணி அடித்து வருகிறார்கள்.!
தனது சொந்த வரலாறு தெரியாத மக்களில் பலர் பற்பசையையும் சோப்பையும் கோக்,பெப்ஸி,முகபசை, இரசாயண மருந்துகள் தடுப்பூசி போன்றவற்றை பயன்படுத்துவது தான் நாகரீகம் என்று கருதி தங்கள் உடல்,மன ஆரோக்கியத்தை சீர்கெடுத்து கொள்வதோடு தங்கள்
சந்ததிகளின் வாழ்வையும் இந்த போலி கவுரவத்திற்கு பலியாக்கி விடுகிறார்கள்.!
உணவுப்பொருள்,நீர்,உப்பு,எண்ணைய் போன்ற அனைத்தும் சத்துக்கள் நீக்கப்பட்ட குப்பைகளாகவே கடையில் விற்கப்படுகிறது.!
இதோடு போதாக்குறைக்கு நீர்நிலையை மாசுப்படுத்தல்,கனிமவளங்களை கொள்ளையடித்தல்,புதிய புதிய கொள்கைகளை வகுத்து அரசியல், அதிகாரப் போர்வையில் நாட்டின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்குதல் போன்ற பல்வேறு பணிகள் இன்று தேசமெங்கும் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.!
இந்நிலையில் நோய்களின் பெருக்கத்தையும் இளவயது மரணங்களையும் தடுப்பது யாராலும் இயலாத காரியமாகவே ஆகிவிட்டது.!
ஆயினும் மனம் தளராமல் தமிழ் முன்னோர்களும் உலக தீர்க்கத் தரிசிகளும் வகுத்து தந்துள்ள இயற்கை வாழ்வியல் முறைகளை கடைப் பிடித்துவர ஆரோக்கியமாக வாழ்வதுடன் எத்தகைய நாள்ப்பட்ட உயிர்க்கொல்லி பிணிகளையும் குணப்படுத்த முடியும்.!
அதற்கு நாம் செய்ய வேண்டிய இரண்டு முக்கியக் காரியங்கள் என்னவெனில் ஒன்று முடிந்தவரை இயற்கையான இரசாயண கலப்பில்லாத உணவுகளை அளவோடு உண்பது.! இரண்டு உணவின் கழிவுகளை உடலில் சேர விடாமல் உடல்நிலைக்கு தகுந்தவாறு மூலிகைகளை எடுத்துக் கொள்வது மற்றும் அடிக்கடி உண்ணா நோன்பு, பழச்சாறு விரதம்,நீர்விரதம் போன்றவற்றை கடைப்பிடிப்பது.! இவைகளை மிகச்சரியாக திட்டமிட்டு செய்பவர்கள் புற்றுநோய்,சிறுநீரக செயலிழப்பு,மூளைக்காய்ச்சல், அடிக்கடி நோய்வாய்ப் படுதல், சக்கரை,இரத்த அழுத்தம்,மன அழுத்தம், உடல்பருமன்,வைரஸ் நோய்கள் போன்ற எத்தகைய பிணியால் துன்பப்படுபவர்களாக இருந்தாலும் இந்த இரண்டு வழிமுறைகளையும் சரியாக
கடைப்பிடித்தால் எத்தகைய வியாதியிலிருந்தும் விடுபடலாம்.!
இன்னொரு முக்கிய விசயம் என்னவென்றால் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மனிதானாய் பிறந்த ஒவ்வெரு வரும் தினமும் பழக வேண்டும்.! ஏனெனில் உணவிலுள்ள சத்துப் பொருட்களை உள்ளுறுப்புகளும் நரம்பு மண்டலங்களும் சேகரித்துக் கொள்ள தேவையான உந்துதலை திட்டமிட்ட உடற்பயிற்சி,மூச்சிப்பயிற்சி, சுத்திகரிப்பு பயிற்சிகள் போன்றவற்றாலேயே வழங்க முடியும்.!
இதை தவிர புதிதுபுதிதாக வந்துகொண்டிருக்கும் பேலியோ டயட்,செயற்கை விட்டமின் மாத்திரைகள் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவை தீராத துன்பத்தையே தரும்.!
உணவில் முதல் தரமான உணவு எதுவெனில் இயற்கையில் விளைந்த தேங்காய், வாழை,கொய்யா, மா,பலா,கிழங்குகள், பப்பாளி, கேரட்,பீட்ரூட், கீரைகள், சாத்துக்குடி,திராட்சை போன்ற காய்கனிகளே இந்த உணவில் அப்படி என்ன உள்ளது என்றால் இதில் தான் விட்டமின்களும், பிராண சக்தியும் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன.! அடுத்து சிறுதானியங்கள்,பருப்பு,உலர் கொட்டைகள் இவற்றில் கொஞ்சம் கொழுப்பும் நிறைய புரதச்சத்தும் மாவுச்சத்தும் உள்ளன.!
ஆக கடைசியில் உள்ளவை தான் மாமிச உணவு,முட்டை,பால்,தயிர், எண்ணெய் போன்றவை இவற்றில் மிருக கொழுப்பு,புரதம், விட்டமின் சி, பி 12 போன்ற சத்துகள் நிரம்பி உள்ளன.!
மனித உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளவும் சுறுசுறுப்பாக இயங்கவும் அதற்கு முதல் தேவை அன்றன்று பறித்த காய்கனிகள் மட்டுமே.!
உடல் வளர்ச்சிக்கும் உடல் வெப்ப சக்தி இயக்கத்திற்கும் தானியங்கள் மற்றும் தாவர மற்றும் மிருக கொழுப்புப் பொருட்கள் தேவைப்படுகின்றன.!
மாமிச உணவுகளான மீன்,முட்டை,இறைச்சி போன்றவற்றை மாவும் சக்கரையும் நிறைந்துள்ள அரிசி,கோதுமை, மைதா,சிறு தானியங்கள் போன்றவற்றோடு சேர்த்து உண்ணும் போது மனிதன் அளவிற்கு அதிகமாக உண்டு விடுகிறான்.!
இதனாலேயே உடல் பருமன்,சக்கரை,இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறான்.!
இதற்கு மாற்றாக பேலியோ பார்ட்டிகள் தானியங்களை எடுக்காமல் மாமிச உணவு மற்றும் காய்கனிகளை மட்டும் உண்டு ஆரோக்கிய மாக வாழ்வதோடு எடையையும் குறைக்கலாம் என்கிறார்கள்.!
இது தேவையில்லாமல் எலியை பிடிக்க பாம்பை வளர்க்கும் கதை.! ஏனெனில் உடல் சக்தியை சீரழிக்காமல் உணவின் சக்தியை உள்வாங்கிக் கொண்டு உடலை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் காய்கனிகளுக்கு மட்டுமே உண்டு.!
சமைத்த சிறுதானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் இந்த ஆற்றல் மிக குறைந்த அளவு மட்டுமே உள்ளது.! மாமிச உணவு மற்றும் பால், தயிர் போன்ற உணவுகளுக்கு தனது சக்தியை மட்டும் தன்னை உண்ட உடலுக்கு வழங்கிவிட்டு கழிவுகளை தானே வெளியேற்றும் சக்தி கிடையாது.! இந்த காரணத்தினாலேயே மாமிச உணவையும் தானிய உணவுகளையும் அதிகமாக உட்கொள்பவர்களுக்கு மலச்சிக்கல்,வாய்வுத்தொல்லை,மாரடைப்பு,இதய நோய், உடல் பருமன்,சக்கரை,இரத்த அழத்தம் போன்ற வியாதிகள் அதிகமாக வருகிறது.! அதோடு இந்த உணவின் எச்சங்களே உடலில் வியர்வை நாற்றம், ஊறல், சிடுசிடுப்பு, போன்றவற்றையும் தருகிறது.!
உணவின் இன்னொரு முக்கியத்தீங்கு மசாலாப் பொருட்கள் வத்தல்,பச்சமிளகு, சமையல் உப்பு,புளி, சோடாப்பு,அஜினாமோட்டோ,ரீபைண்ட் ஆயில், கலர்ப்பொடிகள் போன்றவற்றை பயன்படுத்தி செய்யப்படும் அத்தனை உணவுப் பொருட்களும் மனித உடலுக்கு தீங்கை மட்டுமே செய்யும்.!
வெங்காயம்,பூண்டு,மிளகு,கொத்தமல்லி,மஞ்சள், இந்துப்பு போன்றவற்றையும் அளவோடு பயன்படுத்தினால் ஆரோக்கியம் தரும்.!
அளவிற்கு மிஞ்சினால் இதுவும் துன்பம் தரும்.!
மேற்கத்திய நாட்டினரும் அரேபிய பாலை வனத்தினருமே மாமிச உணவுகளை தொன்றுத்தொட்டே அதிகமாக தின்று வருகிறார்கள்.! இந்த எச்சங்களை எரிக்கவே கிறுஸ்தவர்கள் பழ உணவு விரதத்தையும் இஸ்லாமியர்கள் இரமலான் விரதத்தையும் மேற்கொள்கிறார்கள்.!
இந்திய தத்துவங்களைப் பொறுத்த வரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பலர் தனது அசைவ உணவுப் பழக்கத்தை கடந்து வந்துவிட்டனர்.!
ஆயினும் மாவுப் பொருட்கள், பால்,தயிர்,வெண்ணைய் போன்றவற்றை தொடர்ந்து உண்பதால் உடலிலும் மனதிலும் தோன்றிடும் சலிப்பைப் போக்கவும், கழிவை நீக்கவும் நோய்களை குணப்படுத்திக் கொள்ளவும் உண்ணாநோன்பு, நீர்விரதம், மவுன விரதம்,செயல்விரதம் போன்ற பல்வேறு விரதங்களை கையாண்டு வெற்றி கண்டனர்.!
நாளடைவில் அனைத்து விரத முறைகளையும் பலர் கேலிக்குறியதாக மாற்றிவிட்டனர்.!
இப்பொழுது இரமலான் விரத காலத்தில் தான் இஸ்லாமியர்கள் அதிக இறைச்சி உணவுகளை உண்கிறார்கள்.!
அதை தவிர்த்து இரமலான் முழுவதும் பழ உணவுகளையும் சைவ உணவுகளையும் மட்டுமே உட்கொண்டால் நோன்பின் நோக்கம் நிறைவேறுவதோடு உடலிலும் புதிய உத்வேகம் பிறக்கும்.!
இன்று இந்திய மக்களில் பலருக்கு விரதம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.!
எத்தகைய உடல்,மன ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்களும் ஒரு நாள் பழ உணவு விரதம்
மறு நாள் நீர் விரதம் என்று தொடர்ந்து 10 நாட்கள் கடைப்பிடித்தால் அந்தந்த நோய்களின் தாக்கம் 80% வரை குறைந்துவிடும்.!
இதுகூட முடியாதவர்கள் இடையுணவு விரதம் அதாவது மூன்று வேளை உணவைத்தவிர இடையில் எதையும் உண்ணாது நீர் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம்.! அல்லது உணவில் 60%வரை இயற்கை காய்கனிகளை மட்டுமே உண்டு அதிக இயற்கை உணவு விரதம் இருக்கலாம்.!
அனைவருமே உணவில் எப்பொழுதும் மாமிச மற்றும் தானிய உணவை குறைத்துக் கொண்டு முறையான உடலியல் பயிற்சிகளை கடைப்பிடித்து வந்தால் வாய்வுத்தொல்லை, உடல் பருமன்,சக்கரை போன்றவற்றை எளிதில் குணப்படுத்துவதோடு அடிக்கடி நோய்வாய்ப்படுதல்,புற்றுநோய்,சிறுநீரக செயலிழப்பு போன்ற எந்த வியாதியும் நெருங்காத ,வயிறு என்ற ஒன்றே இல்லாத மனிதனைப் போல் லேசாக உணரலாம்.!
செய்வோமா சகோதரர்களே?
-ஏகப்பிரியன் DYT
தொடரும் …
☘ 100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
Mobile & Whatsapp
http/amyogatrust.blogspot.in
http/aumherbals.blogspot.in
No comments:
Post a Comment