*உயிர் மீட்கும் மருத்துவம்*
23 இயற்கை ஊட்டச்சத்தும் உடல் கிரகிப்புத் திறனும்
"வசியென்ற காற்றும்
ஓமென்ற நாதமும்
ஒளிதந்த சுடரும்
வானக காந்தமும்
நிலைபெற்ற பூமியும்
அது கொண்ட நீரும்
விளையும் பயிரும்
விதைக்கும் மனிதனும் -
வரப்பெற்ற ஜீவனை
வாழ்விக்கும் தோழரே.!"
---ஏகப்பிரியன்
உயிர் வாழத் தேவையானவை இரண்டு ஒன்று நீர் மற்றொன்று உணவு என்றுதான் நாம் நினைத்து கொண்டுள்ளோம்.!
இன்னும் சிலர் காற்றின் பங்கையும் சூரியனின் பங்கையும் கூட உணர்ந்துள்ளோம்.!
இவை மட்டுமல்ல ஐம்பெரும் ஆற்றல்களையும் கடந்தும் ஜீவன்களின் ஆரோக்கிய வாழ்விற்கு இரண்டு முக்கியத் தேவைகள் இருக்கிறது.!
ஒன்று ஒலி மற்றொன்று கிரகிப்புத் திறன்.! ஒலியென்பது காற்று,பூமி, கடலலை,இதயம்,அருவி, மரம் போன்று இயங்கிக் கொண்டிருக்கும் பொருளிலும் கட்டில்,மேசை,புத்தகம் போன்ற இயங்காத பொருளிலும் இருக்கிறது.!
இயங்கு பொருளில் இருக்கும் ஒலி/ஓசை இயங்காத பொருளிலும் ஊடுருவி உள்ளது.!
நாம் உணர்கின்ற அத்தனையும் காட்சியாக,ஒலியாக அல்லது இரண்டும் கலந்ததாகவே இருக்கிறது.!
இந்த உலகத்தில் உள்ள ஒலிகளின் மூல ஒலியாக ஓ … ம்.! விளங்குகிறது.! இது ஏதோ மதக்குறியீடு என்று ஒதுக்கிவிட வேண்டாம்.!
இது எந்த மதமும் தெரியாத மனிதர்களே பிறக்காத நிலையிலும் தொடர்ந்து பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ரிதம்.!
அ உ ம் என்றோ ஆ மே ன் என்றோ,ஆ மீ ம் என்றோ எப்படி குறிப்பிட்டாலும் அதன் மூலம் ஓம் என்பது தான்.! தனிமையில்,அதிகாலையில்,தியானத்தில் செடிகளின் தொடுகையில்,இருட்டில்,தனது உடலில் பலரும் இந்த ஓம் என்ற ஒலியின் ரிதத்தை உணர்ந்திருக்கலாம்.! அப்படி உணராதவர்கள் புலணரிவு குறைந்தவர்கள் அல்லது
இன்னும் இயல்பை உணராதவர்கள் என்பது பொருள்.!
சரி இப்பொழுது விசயத்திற்கு போவோம்.! உடலில் நோய் தோன்றுவதற்கு முக்கியக் காரணிகளில் ஒன்று பிரபஞ்ச ஒலியில் தோன்றும் மாறுபாடு. மற்றொன்று உடல் மூல ஓசையான ரிதத்தில் தோன்றும் மாறுபாடு.! இரத்த அழுத்தம்,புற்றுநோய்,தோல்நோய்கள்,ஆண்மைக்குறைவு, மன அழுத்தம்,சக்கரை என்று இதுவரை பெயரிடப்பட்டுள்ள, இனி பெயரிடப்போகும் எல்லா வியாதிகளுக்கும் மூல காரணம் உடல் மூல ஒலியில் தோன்றிய கோளாறுகளே.!
இதை சீர் செய்வது மிக எளிது தினமும் 30 நிமிடங்கள் ஓம்/ அ உம் /ஆமென்/ஆமீன் என்றும் கூறினால் போதும் உடல்நிலைப் படிப்படியாக முன்னேற்றம் காணும்.! அடுத்து முறையான உடற்பயிற்சியும் சத்தான உணவும் மிக முக்கியம்.!
ஒலி உடலின் அடிப்படையை சீரமைக்கும். உணவு ஆற்றலை நரம்பு மண்டலங்களில் பரவச்செய்ய உதவும், உடற்பயிற்சி எல்லா ஆற்றல்களையும் உடல் கிரகித்துக் கொண்டு சக்திபெற வழிகாட்டும்.!
உடல் ரிதத்தை சீரமைப்பது மிக எளிது பைத்தியம் பிடித்தவன், இரத்த அழுத்தம் கொண்டவனை எல்லாம் சில மணிதுளியில் சீராக்க முடியும்.! ஆனால் அதற்கு நோயாளியின் நரம்பு மண்டலமும் உள் உறுப்புகளும் வேகமாக செயல்படும் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.! அடுத்து அவன் எடுத்துக்கொள்ளும் உணவு முழுவதும் இயற்கை தன்மை கொண்டதாய் இருக்க வேண்டும்.! இயற்கை ஆப்பிளோ,நெல்லிக்காயோ,வாழைப்பழமோ சக்தியை பெருக்கி நோயை ஓரிரு மாதத்திலோ ஒரிரு வருடத்திலோ முற்றிலும் குணமாக்கும்.! இரசாயண மருந்துகள், செயற்கை விட்டமின் மாத்திரைகள், செயற்கை ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் போன்றவற்றால் நோயை ஒரு காலத்திலும் குணமாக்க முடியாது.!
வேண்டுமானால் சுற்றிக் கொண்டிருக்கும் பைத்தியத்தை அமைதியாக அமர வைக்கலாம்.!
எல்லோரையும் கத்திக் கொண்டிருக்கும் இரத்த அழுத்த நோயாளியை தன்னை கூட உணர முடியாமல் பாதி மயங்கிய நிலையில் வைத்துக் கொள்ளலாம்.!
இவற்றால் நரம்பு மண்டலம் இயற்கை இயங்கு திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கும்.!
இந்த வகையில் இரசாயண மருந்துகளும் இரசாயண உணவுகளும் மனிதர்களுக்கு மிகப் பெரிய தீங்கை விளைவிக்கின்றன.!
மன அழுத்தம், இரத்த அழுத்தம்,தைராய்டு ஆண்மைக்குறைவு போன்ற எந்த வியாதியால் பாதிக்கப்பட்டவராய் இருந்தாலும் யோகா அவருக்கு மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் மீட்டு தருவதில் சிறந்த முறையில் பயனளிக்கும்.! ஏனெனில் யோகாவில் மட்டுமே
ஓசையை சீராக்கும் நாதப்பயிற்சி, நரம்புகளை வலிமையாக்கும் நாடிசுத்தி,கழிவுகளை நீக்கும் கிரியைப் பயிற்சி,உடலையும் உள்ளுறுப்புகளையும் பலமாக்கும் யோகாசனம்,அமைதியை தரும் தியானம், ஆழமான நம்பிக்கையை விதைக்கும் பிராத்தனை, எண்ணத்தால் வெற்றியடைச் செய்யும் பிராணசிகிட்சை இன்னும் உணவொழுக்கம்,மூலிகைகளைப் பற்றிய அறிவு
போன்றவை அடங்கியுள்ளன.!
மற்ற முறைகளில் இத்தகைய ஒருங்கிணைப்பு கிடையாது.!
அதனால் தான் உடற்பயிற்சி என்பது LKG படிப்பு போன்றது என்றும் யோகா என்பது PHD கல்வி போன்றது என்றும் பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.!
செயற்கை மருந்துகளும் செயற்கை சத்தூட்டிகளும் யாருக்கு உதவுமெனில் நோய்வாய்ப் பட்டு, உள்ளுறுப்பு தனது கிரகிப்புத்திறனை முற்றிலும் இழந்து இனி மீட்கவே வழியில்லை என்ற நிலையில் மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் நாட்களை நகர்த்த உதவும்.!மற்றபடி நன்றாக நடமாடும் காலத்திலேயே செயற்கை ஊட்டச்சத்து,செயற்கை மருந்துகளை எடுத்துக் கொள்வது தற்கொலை செய்வதற்கு சமமானது.!
இந்த உண்மையை உணர்ந்து இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்வோம்.!
-ஏகப்பிரியன்
தொடரும் …
🌿இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு💥
AUM HERBALS
Mobile & Whats App
9629368389
http://aumherbals.blogspot.in
http://amyogatrust.blogspot.in
No comments:
Post a Comment