I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: இன்றைய வாழ்க்கை முறை

Wednesday, 31 May 2017

இன்றைய வாழ்க்கை முறை

*உயிர் மீட்கும் மருத்துவம்*

27.ஆர்வக்கோளாறும்
அஜீரணக்கோளாறும்

" தேடுவதை நிறுத்து
தேடியது கிடைக்கும்.!
கண்களை மூடு
காட்சி தெரியும்.!
உன்னை இழ
உண்மையை அடைவாய்.! "

மிதமிஞ்சிய உணவுப்பழக்கத்தல் வரும் அஜீரணக்கோளாறைப் போலவே
மிதமிஞ்சிய அறிவுத் தேடலால் வருவதே அறிவுக்கோளாறு.!
எது நமக்குத் தேவையோ அதை கற்காமல் உலகில் என்ன வெல்லாம் கிடைக்கிறதோ அத்தனையையும்  கற்க முயலுவது ஒரு ஆர்வக்கோளாறு. நாம் நிறைவாக வாழ என்னவெல்லாம் தேவையோ அதை மட்டும் தேடாமல் உலகில் உள்ள அத்தனை செல்வங்களையும் வசதியையும் அடைந்துவிட நினைப்பது ஒரு வகை மனநோய்.  இதனால் பலரின் வாழ்க்கையில்  அமைதியின்மை முதல் மன அழுத்தம் வரை பல்வேறு உடல்,மனச்சிக்கல்கள் ஏற்படுவதோடு அவர்கள் சார்ந்த ஒரு நாடே வீழ்ச்சியை நோக்கிச் செல்லும்  சூழல் உருவாகிவிடும்.!
பசுமைப் புரட்சி என்ற பெயரில் அரசு விவசாய கழகம் மண்ணிற்கு விசம்  வைக்க  கூறியபோது ஆசையில்  ஆர்வக் கோளாறாய் அதை செய்த விவசாயிகள் இன்று அஜீரணக் கோளாறால் தங்களுக்கு தாங்களே விசம் வைத்து அழிந்துபோகிறார்கள்.உண்மையில் இன்றைக்கு உள்ள அத்தனை தொழில் நுட்பங்களும் ஆராய்ச்சி அறிவும் பூமிக்கு தேவையற்றவை. அவற்றால் எந்த நன்மையும் விளையாது. என்பதை இன்று கண்டுகொண்டோம்.!கல்வி முறை, வாழ்க்கை முறை,ஆட்சி முறை அத்தனையிலும் இந்தியா இன்று தோற்று நிற்கிறது.!இது அத்தனையும் ஆள்வோர்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகளின் ஆர்வக்கோளாறினால் ஏற்படுத்தப்பட்டு இன்று அஜீரணக் கோளாறில் முடிந்துவிட்டது.!நாம் கற்க தாய்மொழி கல்வி போதும், உழைக்க ஒரு வேலை போதும்,வாழ ஒரு துணை போதும், போக ஆறடி நிலம் போதும்.! ஏனெனில் பத்துநாள் பட்டினியாக இருந்தால் கூட ஒரே வேளையில் மூன்றுவேளை உணவையும் உண்ணமுடியாது.!
தினமும் நூறு நூலை கற்றாலும் அறிவால் சில கருத்தை மட்டுமே ஜீரணிக்க முடியும்.!
ஊரெல்லாம் ஆயிரம் இணைகளை  கவர்ந்தாலும் ஒரு  நாள் ஒரு துணையோடு மட்டுமே வாழ முடியும்.!
நமக்கு நான்கு வீடு இருக்கிறது என்பதற்காக கை,கால்,முண்டங்களை தனித்தனியாக ஒவ்வெரு வீட்டிலும் படுக்க வைக்கமுடியாது.!
பத்து ஜோடி செருப்பையும் ஆடையையும் ஒரே நேரத்தில் அணிந்துகொள்ள இயலாது.! மனித வாழ்க்கை  வரையறுக்கப்பட்டது.!
மனித மனமோ வரையறை இல்லாதது.! அன்று ஒன்றுமில்லாத காலத்திலேயே ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றவன் துறவி.!
இன்று எல்லாம் கிடைக்கும் காலத்தில் அத்தனைக்கும் ஆசைப்படு என்பவன் மோசடிக்கார வியாபாரி.! கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம் என்பது பழமொழி.! கண்டதைப் படித்தால் பைத்தியமாகலாம் என்பதே புதுமொழி.!
அவரவர் தேவைக்கேற்ற கல்வி,தேவைக்கேற்ற வசதிகள்,குறிக்கோளிற்கு ஏற்ற உதவிகள்  கிடைத்தால் உயரலாம்.! இவை அனைத்தும் அதிகமாக கிடைத்தால்  உயர முடியாது.! ஏனெனில் இருப்பது இரண்டென்றால் நன்றான ஒன்றை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கலாம். இருப்பது நூறென்றால் நூறை ஆராய காலம் பிடிப்பதோடு தவறான ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.! இன்று மதக் கொள்கைகளை தவிர மீதி அனைத்தும் உலகில் மிகமிக அதிகமாகி விட்டன.! தமிழகத்தில் ஜாதிகளைப் போலவே அரசியல் கட்சிகளும் நூற்றிற்கும் மேலுள்ளன.!
இவைகளை முறைப்படுத்தாத வரை நம்மால் சரியான ஆட்சியை தேர்ந்தெடுத்து மீண்டும் நாட்டை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற முடியாது.!
வெளிநாட்டில் கட்சியும் மதமும் இரண்டொழிய வேறில்லை.!
அதுவே அவர்களின் அடிப்படை பலம்.!
அங்கும் கூட  வெளிநாட்டு தூண்டுதலின் பேரில் கொள்கை ரீதியில் சில குட்டி நாடுகள் தங்களுக்குள் மோதி  தனக்குத் தானே சவக்குளி வெட்டிக்கொள்கிறார்கள்.!ஆனாலும்,அமெரிக்கா,இங்கிலாந்து, சிங்கப்பூர்,ஜப்பான்,ஜெர்மன்,  சைனா,கிவ்பா போன்ற நாடுகளின் அரசியல் செயல்பாடுகள் உலகிற்கு முன்னுதாரணமாய் உள்ளன.!
நமது நாட்டை வளர்ந்த நாடுகள் தங்கள் குப்பைகளை விற்கும் இளிச்சவாய நாடாக ஆக்கி வைத்துள்ளனர்.!அரசு,விளம்பரப்பட நிறுவனங்கள்,சினிமா நட்சத்திரங்கள்,விளையாட்டு வீரர்களை விலைக்கு வாங்கி அவர்களின் மூலம் கேடான சட்டங்களைப் போட்டும்,  போலியான விளம்பரங்களை செய்தும் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றி கொள்கிறார்கள்.!
அதற்கு அரசிற்கு துணையாக  தங்கள் ஆன்மாவை உணராத மக்களில் பலரும் ஆதரவாக செயல்படுகிறார்கள்.!
உதாரணமாக உலகில் உள்ள அத்தனை மருத்துவ முறைகளும் இந்தியாவில் உள்ளன.! அவற்றை சாதி,மத பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.! சைனாவின் அக்குப்பஞ்சர் மருத்துவ முறையை இங்கு பல இஸ்லாமியர்களும்,கிறுஸ்தவர்களும் முன்னெடுத்து செல்கிறார்கள்.!ஆனால், இந்தியாவின் யோக மருத்துவ முறையை இந்தியர்களான இவர்களில் பலர் இன்னும் தெரிந்துகொள்ளவே தயங்குகிறார்கள்.!
அதை ஒரு மதச்சடங்கு என்று ஒதுக்கி விடுகிறார்கள்.!
இன்றும் கூட நமது கேப்பை கூழை கேலி செய்துவிட்டு பல இந்தியர்கள் பீட்சாவையும், கோக்கையும் சாப்பிட்டு  ஆகாவென கூறிக்கொள்கிறார்கள்.! அரசு நமது மூலிகைப் பொருட்களையும்,இயற்கை தானியங்களையும் ஏற்றுமதி செய்துவிட்டு மரபணு மாற்றிய விதைகளையும் இரசாயண மருந்துகளையும் இறக்குமதி செய்கிறது.!
உள்ளூரில் விவசாயம் செய்யவும் குடிக்கவும் நீரில்லாத போது வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கும் மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கும் நீர் வழங்குகிறது.!
இலவச தாலியை வழங்கும் அரசே அதை அறுக்க குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகளை நடத்துகிறது.!
படித்தவர்கள் பலர் தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வியை கற்க பள்ளிகளுக்கு நன்கொடையாக இலட்சங்களை வழங்குகிறார்கள்.!
எளியவர்கள் பலரும் தேவையில்லாத பலப் பொருட்களை கடனுக்கு வாங்கிப் போட்டுவிட்டு
ஓய்வு நேரத்தில் கூட இன்னொரு பணியை செய்து அதிக வருமானம் பெற ஆலாய் பறக்கிறார்கள்.!
தாஜ்மகாலை மொகலாயன் கட்டினான்,இரயில்வேயை ஆங்கிலேயன் கொண்டுவந்தான்.! அவர்களின் அறிவோ அறிவு என்று சிலர் இன்னும் வியந்து போகிறார்கள்.!
தமிழர்களின் பாரம்பரிய கட்டிட ஞானத்தை மறந்துவிட்டு.!
இன்றைக்கு பலரும் உடை,உறைவிடம்,உணவு,வாழ்க்கை முறை,கல்வி,மருத்துவம் போன்ற அனைத்திலும் அன்னிய அடையாளங்களையே பின்பற்றுகிறோம்.!உண்மையில் நமது தேவை இதுவல்ல.! அன்பு,அமைதி, உணவு, இயற்கை சூழ்ந்த பாதுகாப்பான வாழ்க்கை முறை.! அதை நாம் அடைய வேண்டுமானால்.! எங்கும் தேட வேண்டாம் தேடுவதை நிறுத்தினால் போதும் நமக்குத் தேவையானவை அத்தனையும் நமது விவசாய நிலத்தில் கிடைக்கும்.!
அறிவை பெறுவதற்காக உலக ஊடகங்களை நாளெல்லாம் விழித்துப்பார்க்க வேண்டாம்.! கண்களை மூடி அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் போதும் இறைநிலை அகக் காட்சியின் மூலம் அனைத்து ஞானத்தையும் வழங்கும்.!
இந்தியாவின் ஆன்மாவை உணரும் முயற்சியில் நாம் நம்மையே இழந்தால்
உண்மையான பேரின்ப பெருவாழ்வை இப்பூமியிலேயே அடையலாம்.!
இதுவே இன்றைய அஜீரணக் கோளாறை நீக்க உள்ள ஒரேவழி.!
செய்வோமா,சகோதரர்களே?

--ஏகப்பிரியன் D.Y.T

தொடரும் …

100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு

🌿AUM HERBALS🌿
Mobile & Whats app
9629368389

http://amyogatrust.blogspot.in
http://aumherbals.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...