I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: நிற்பதுவே நடப்பதுவே

Monday, 17 July 2017

நிற்பதுவே நடப்பதுவே

*உயிர் மீட்கும் மருத்துவம்*

34.நிலைக்குமா நிலையாமைகள்?

" குழந்தையாம் பருவம் கடந்து
மழலையாம் பருவம் பெற்றோம்.!
மழலையாம் பருவம் கடந்து
வாலிபமாம் பருவம் பெற்றோம்.!
வாலிபமாம் பருவம் கடந்து
இளமையாம் பருவம் பெற்றோம்.!
இளமையாம் பருவம் கடந்து
முதுமையாய் முற்றுபெறுவோம்.!
வாழ்வென தோன்றும் பாதை …
மரணத்தில் முடியும் கீதை.!
சாதியின் சடங்கு
மாயை …
மதத்தின் விலங்கு மாயை …
அன்னையின் அன்பு மாயை …
அறிந்த நல்கல்வி மாயை …
காதலின் இன்பம் மாயை …
பதவியின் சுகமும் மாயை …
பண்ணிய தியாகம் மாயை …
தேடிய செல்வம் மாயை …
வாடிய நொடியும் மாயை  …
பாடிய கடவுளும் மாயை  …!
இருப்பதுபோல் தோன்றி இல்லாமல் போவது  மாயை.!
ஆயின்,
இருக்கின்ற பூமி தன்னை நலமாக  வாழச்செய்து செய்து
இயற்கையை காத்தல்
இன்பம்.!
இளையோருக்கு அளித்தல் இன்பம்.!
அதுவே நிரந்தரம்
உயிர் வாழும் வரம்தரும்.!
மரமில்லா பூமித்துண்டு
- மரணத்தின் இறுதிச்சங்கு.!
தூய நீரில்லா பூலோகம் -
பகை கொண்ட எமலோகம்.!
காற்றை விசமாக்கும்
விஞ்ஞான வளர்ச்சி
- உலகை அழிக்கும்
பலமான முயற்சி.!
அமுதூறும் விளைநிலத்தில் அமிலம் எடுக்கும் திட்டம்
-தாயை விற்று பாலை வாங்குவதைப் போன்ற மட்டம்.!
சுயநல கத்திக்கொண்டு … இயற்கையை
வெட்டிக்கொன்று  …
மாயையில் மயங்கித்
திரியும் மானிடா,
திடங்கொள்ளு.!
தீமையை விட்டுத்தள்ளு …!
இருக்கின்ற பூமிதன்னை இதமாக வாழச்செய்து  … இயற்கையை
காத்தல்
செய்வோம் …!
இளையோருக்கு ஈந்து செல்வோம்.!
அதுவே நிரந்தரம்  …
உயிர் வாழ்வு நிலைபெறும்.!

-ஏகப்பிரியன் DYT

எதைப்பற்றியோ எழுத முனைந்தேன். ஆனால்,அதில் தற்கால  அரசியல் வியாதிகளின் பிண அரசியல் நாற்றம் வயிற்றைப் புரட்டியதால் இந்த அளவில்  இதை முடித்துக் கொண்டேன்.!

நலம் பெருகட்டும்  …

தொடரும் …

100%🌿 இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு 
AUM HERBALS
Mobile & whatsapp
9629368389

amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in

Youtube - amyogatrust
yoga for all

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...