*உயிர் மீட்கும் மருத்துவம்*
35.உடலின் அனிச்சை செயல்பாடுகள்
உடலை உயிர் இயக்குவதும்
இதயமும் நுரையீரலும்
சுருங்கி விரிவதும்
அழகை வியந்துப்பார்ப்பதும்
கழிவை வெளியேற்றுவதும்
திடீர் சோர்வும் எழுச்சியும் உறக்கமும்
உடலின் அனிச்சை மயக்கம்
இதன்றி நடக்காது உயிரியக்கம்.!
சுவாசிப்பது முதல் உயிர் வெளியேறுவது வரை உடலின் பல்வேறு செயல்களை நமது உடல் நமது
அனுமதியில்லாமல் தானே, செய்துவருகிறது.! என்பது அனைவருக்கும் தெரியும்.! ஒருவேளை இந்தப் பணிகளும்
வேலை செய்வது,ஓடுவது,வரைவது,எழுதுவது போன்று நமது கட்டுப்பாட்டில் இருந்தால் என்னவாகும் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.!
அப்படி உடலில் உள்ள அனைத்து இயக்கமுமே உயிர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டால்
உலகில் மரணமே ஏற்படாது.!
மூளையை நிறுத்தி இதயத்திற்கு ஓய்வு கொடுத்து சிலநாட்கள்
வைத்துவிட்டு பிறகு மீண்டும் இயங்க செய்யலாம்.!
உடலின் ஏதேனும் ஒருபகுதி
செயலிழந்து விட்டால் கிழிந்த மிதிவண்டியின் இருக்கையை மாற்றுவதைப்போல தூக்கி
கடாசிவிட்டு அடுத்த உறுப்பை
வாங்கி நாமே மாற்றிக்கொள்ளலாம்.!
பெருநோய்கள்,மனஅழுத்தம் போன்ற எதுவும் மனித உயிர்களை
வதைக்காது.! மனிதர்கள் விரும்பும் நிலையில் மகிழ்ச்சியாக, சுகமாக வாழமுடியும்.!
உண்மையில் யோகாவின் நோக்கம்
அதுதான் " மரணமில்லாப் பெருவாழ்வு "
குடலின் இயக்கம் அனிச்சை செயலாய் இருக்கிறது. ஆனால், யோகாவில் உடலை என்றும் இளமையாய் வைக்க ஆசனங்கள் இருப்பதைப் போலவே குடலை இயக்க அக்னிசாராக் கிரியை,
நுரையீரலின் இயக்கத்தை நிறுத்த பிராணாயாமம், இதயத்தை நிறுத்த பிராணசம்யமா,எண்ணங்களை நிறுத்த தியானம்,செயல்களை நிறுத்த சமாதி என்று யோகநிலையில் உள்ள பல்வேறு படித்தரங்கள் நம்மை நித்ய நிலைக்கு மிக அருகில் அழைத்து செல்கிறது.!
இதன் காரணமாகதான் பாபா ஏழாயிரம் ஆண்டுகளாக வாழ்கிறார்,வள்ளலார் ஒளி உடலாக இன்றும் வாழ்ந்துவருகிறார், விவேகானந்தருடன் முந்தாநாள் இரவில் பேசிக்கொண்டிருந்தேன்,கடவுள்தான் எனக்கு வேதத்தை கற்பித்தார். என்றெல்லாம்;நாம் கேள்விபடும் அனைத்தின் உள்ளும் இறவாநிலை/ இறைநிலை - நிலைத்தவாழ்வு.! என்ற இயற்கையை தாண்டிய பேராசை வெளிப்படுகிறது.!
இன்னமும் இமய மலையில் தங்கள் இதயத்துடிப்பை முற்றிலும் நிறுத்திவிட்டு பல ரிசிகள் வாழ்வதாக கூறுகிறார்கள்.!
சென்னையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிருஷ்ணமாச்சார்யா என்ற யோகி ஒரு முறை பல மருத்துவர்களின் முன்னிலையில் தன் இதயத்துடிப்பை சில விநாடிகள் முற்றிலும் நிறுத்திகாட்டியதாக கூறுகிறார்கள்.!
ஆனால், அவர் தனது பிரதான சீடர்களுக்கோ அல்லது தனது மகன் தேசிகாச்சார்யாவிற்கோ அதை கற்றுகொடுக்கவில்லை.! அதற்கு காரணம் இது ஆபத்தானப் பயிற்சி கொஞ்சம் பிசகினாலும் மரணம் நிச்சயம் என்று கூறியதாக அவரின் மகன் தேசிகாச்சார் ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.! இதயத்தை நிறுத்தும் ஆற்றல் பெற்ற தனது தந்தை இறுதியில் தனது மனைவியின் பிரிவு தாளாமல் 106 வயதில் உணவை முற்றிலும் நிறுத்தி உயிர் துறந்ததாக தேசிகாச்சார் கூறியுள்ளார்.! எப்படி இருந்தாலும் கிருஷ்ணமாச்சார்யா உயிரை நீட்டும் ஒரு மந்திரத்தை தனது மகனிற்கு கற்றுக்கொடுத்துள்ளார் அந்த மந்திரத்தை வைத்துதான் கலைஞர் கருணாநிதி 96 அகவை கடந்து இன்னும் உயிர்வாழ்வதாக நான் நினைக்கிறேன்.!
ஆமாம் கலைஞரின் யோகாகுரு தேசிகாச்சார்தான்.!
<ச்சே, சசிகலா கொஞ்சம் தயவு காட்டியிருந்தா … ஜெயாம்மா கூட தேசிகாச்சாரிடம் யோகமெனும் உயிர் நீட்டும் மந்திரம் கற்று இன்னும் கொஞ்சநாள் வாழ்ந்திருப்பாங்க..
தமிழ்நாடும் கொஞ்சம் ஆசுவாசமா இருந்திருக்கும்.>
சரி,அரசியல் எதற்கு? நீயும் யோகா ஆசிரியர்தானே, உனக்குத் தெரிஞ்சா அந்த மந்திரத்தை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுய்யானு.!
கேட்டீங்கனா; அட,அததானே 35
பதிவுகளாக எழுதியிருக்கேன்.!
முடிஞ்சா படித்து பயின்று பயனடையுங்கள்.!
இந்தப் பதிவில உடல் தானியங்கி
தன்மையை மீறுவதால் உடலுக்கு ஏற்படும்
சில சிக்கல்களை மட்டும் பார்ப்போம்.!
முதலில் தூக்கம் இன்று உங்களுக்கு இரவு 9 மணிக்கு தூக்கம் வருகிறது என்றால் நீங்கள் வீட்டிலிருந்தால் உடனே தூங்க போய்விடுங்கள், அதிகாலை 5 மணிக்கு விழிப்பு வந்ததும் எழுந்துவிடுங்கள்.!
அதைவிடுத்து 6 மணிக்கு அலாரம் அடிக்கட்டும் எழலாம் என்று காத்திருக்காதீர். அதுபோலவே அலாரம் வைத்து விட்டோமே என்று பாதி தூக்கத்தில் எழுந்து அவசர அவரசமாக பணிக்கு கிளம்பாதீர்.!
அப்படி தூக்க இயல்பு நிலையை மீறினால்
உங்களுக்கு வருவது நடுக்குவாதம்,தூக்கமின்மை,எரிச்சல் போன்றவை.!
காலையில் எழுந்ததும் நீர் குடித்து காலை கடனை இயல்பாக கழிக்க வேண்டும். வரவில்லையெனில் வரும்போது போய்கொள்ளலாம் அதைவிடுத்து கழிவறையிலேயே முக்கிக் கொண்டே இருந்தால் மூலவியாதியும், வரும்போது போகாமல் அடக்கிவைத்தால்
மலச்சிக்கலும் தோல்நோயும் வரலாம்.!
பல்தேய்க்க வேப்பம் குச்சி,மூலிகை பல்பொடி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இரசாயண களிம்புகளை வைத்து தேய்ப்பதால்
சுவைமங்கல்,நோயெதிர்ப்பு ஆற்றல் குறைதல்,ஈறுகளின் மூலம் நரம்புகளில் இரசாயணம் சேருதல்,இளமையிலேயே பல் சொத்தையாதல் போன்றவை ஏற்படும்.!
குளிப்பதற்கு மூலிகை பொடி, பயத்தமாவு கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். மாறாக சோப்பு,சேம்பு போன்றவற்றை போட்டு குளித்தால் வியர்வை குறைதல், தோல்நோய் போன்றவை ஏற்படும்.!
அதுபோல் வெளியில் போகும்போது வெறுமனே இயல்பான முகத்தோடு போக வேண்டும். அதைவிடுத்து வெளிநாட்டுக் கம்பெனி சூரியனை காட்டி மிரட்டி விற்ற மேல்ப்பூச்சு களிம்புகளைப் போட்டு போனால் எலும்பு அடர்த்திக்குறைவு,தோல்நோய் போன்றவை நிச்சயம்.!
காலை எழுந்ததும் பழைய நீராகாரம் அல்லது எலுமிச்சை,தேன் கலந்த நீரைப் பருக வேண்டும். காப்பி,தேனீர் குடித்தால் வருவது இரத்தசோகை,சத்துக்குறைபாடு போன்றவை.!
காலையில் பிராணாயாமம் செய்யும் போது மூச்சை எவ்வளவு நேரம் இயல்பாக உள் நிறுத்த முடியுமோ அதைவிட ஒரிரு விநாடிகள் அதிகமாக உள் நிறுத்தலாம் மாறாக 20 - 30 விநாடிகள் அதிகமாக உள்நிறுத்தி பயிற்சி செய்வதால் இழுப்பு, நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படும்.!
காலை உணவு அறுசுவையும் நிறைந்த நமது தட்ப வெட்பத்திற்கு ஏற்ற கேழ்வரகு,சோளம்,தினை,அரிசி,உளுந்து,காய்கறி போன்றவற்றில் செய்த உணவாக இருக்க வேண்டும்.மாறாக விளம்பரத்தைப் பார்த்து நூடுல்ஸ்,பிஸ்கெட், பீட்சா,சாக்லேட் என்று இருந்தால்
அஜீரணத்தொல்லை முதல் குடல்புற்றுவரை வர வாய்ப்புள்ளது.!சிறுநீரை அடிக்கடி அடக்கினால் வருவது சிறுநீரககல்.!
சளி,ஜலதோசம்,தலைவலி,ஏப்பம்,
தூக்கமின்மை,காய்ச்சல்,மாதவிடாய் நிறுத்த என்று அடிக்கடி ஆங்கில மாத்திரையை எடுப்பதால் வருவது
சிறுநீரக செயலிழப்பு,கல்லீரல் வீக்கம்,பலவிதமான புற்றுநோய்கள்.!
இது போலவே ஹார்லிக்ஸ்,பூஸ்ட்,செயற்கை சத்துப்பொருட்கள், பாக்கெட் உணவுகள்,பாட்டில்குளிர்பானங்கள்,பாடிமாஸ் பவுடர்கள், விட்டமின் மாத்திரைகளை வழக்கமாக பயன்படுத்துவோருக்கும் சிறுநீரகம் காலியாவது உறுதி.!
சென்ற மாதம் ஒரு முகநூல் நண்பரொருவர் தனது 27 வயது மகனை நம்மிடம் அழைத்துவந்திருந்தார்… வந்தது முதலே அந்தப்பையன் பேய்ப்பிடித்ததாக நம்பப்படுபவர்கள் செய்வதைப்போல மூச்சை வேகமாக இழுத்து விட்டுக் கொண்டே இருந்தார்.!
என்னடா இது,ஒருவேளை சுடுகாட்டு சித்தனைப் பார்க்க வேண்டியவர்கள் இங்கு வந்துவிட்டார்களோ?
என்று நான் மிரண்டு "என்னங்கய்யா இழுப்புனு சொன்னீங்க, இது வேற மாதிரியில்லா இருக்கு?
" இழுப்பு தாங்க, மதுரைல ஒருவரிடம் வாசியோகம் படித்துவந்தார், சொவ்வாக்கிழமைவீட்டில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது முதல் இப்படி ஆகிவிட்டார். இது சரியாக எதேனும் வழி உள்ளதா,
மருத்துவமனைக்கு சென்று இரண்டு முறை ஊசியும் போட்டோம். ஊசி போட்டவுடன் மூச்சு மட்டுமல்லாது உடல் முழுவதும் மரத்துப்போனது போல் ஆகி விடுகிறான்.
அதனால் , பிறகு போடுவதில்லை "
என்ற பெரியவரும், அவரோடு வந்த சில உறவினர்களும் நான் எதாவது மாயம் செய்வேனா என்று பார்த்துக் கொண்டிருந்தனர் …
சரியாகிவிடும் என்றபடி அவரை குப்புற கொஞ்ச நேரம் மக்கராசனத்தில் படுக்க வைத்தேன்.!
உச்சந்தலை வர்ம பகுதியை சிறிது
நேரம் இடம் வலம் இடமாக தூண்டிவிட்டேன்.! கொஞ்சம் ஆசுவாசமானது போல் தோன்றியது.!
அடுத்து என்ன செய்வது? என்று யோசித்த போது …
எனது குருநாதர்களில் ஒருவரான புலவர் கிருஷ்ணமூர்த்தி அய்யா எப்பொழுதோ கூறிய
"ஒரு இயக்கத்தின் வேகத்தை குறைக்க அதன் எதிர் இயக்கத்தை தூண்ட வேண்டும் "
என்ற சூத்திரம் நினைவில் வந்தது.!
உடனே அறையில் இருந்த நீரில் இந்துப்போட்டு கலக்கி சுமார் ஒரு ஐந்து டம்ளர் நீரை குடிக்க வைப்போம். என்று; கொடுத்தேன். இரண்டு டம்ளர் நீரை குடிக்கும் போதே வ்வே வ்வேனு … சிலமுறை வாந்தியெடுத்தார் பிறகு வலுகட்டாயமாக அவ்வளவு நீரையும் குடிக்க வைத்தேன் …
அவ்வளவுதான் நான்கைந்து முறை வாந்தி பிறகு இரண்டு மூன்று முறை பேதியானது.!
பிறகு பனங்கற்கண்டு, எலுமிச்சை ,உப்பு கலந்த நீரை குடிக்க
கொடுத்து படுக்க வைத்தேன்.! குருவருளால் இழுப்பு முற்றிலும் நின்று விட்டது.!
பெரியவரும் அவருடன் வந்தவர்களும் இது எப்படிங்க நின்னுடுச்சி, ஆச்சரியமா இருக்கு.! பிறகு இழுப்பு வருமா, இனி வாசியோகம் பண்ணலாமா? என்றெல்லாம்;பல, கேள்விகளை கேட்டனர்.!
இன்னும் ஒரு இரண்டு மாதத்திற்கு எந்தப் பயிற்சியும் செய்யவேண்டாம்.!
மீண்டும் இழுப்பு வந்தால் மட்டும் தூதுவளையை மை போல் அரைத்து சுண்டைக்காயளவு காலை,மாலை அரைடம்ளர் பசும்பாலில் கொடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன்.!
வாசியோகம் மட்டுமல்ல எல்லா யோகமும் பண்ணலாம்.!
ஆனால்,என்ன யோகம் செய்வதாய் இருந்தாலும் இயற்கையின் இயல்போடு இயைந்து மிக கவனமாக பயிற்சி செய்வது மிக முக்கியம்.!
அல்லது இது போல் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.!
கவனம்.! கவனம்.!
-ஏகப்பிரியன் DYT
தொடரும் …
100% 🌿இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு🍃
AUM HERBALS
Mobile & Whatsapp
9629368389
amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in
No comments:
Post a Comment