I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: ஆரோக்கிய பிராணாயாமம்

Saturday, 15 July 2017

ஆரோக்கிய பிராணாயாமம்

திருமூலர்  அருளிய ஒரு அற்புத
பிராணாயாமம்

🚩நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டு இடது நாசியில் மூன்று எண்ணிக்கை காற்றை இழுத்து 12 எண்ணிக்கைகள் இரண்டு மூக்கையும் மூடி உள்நிறுத்தவும் அந்த நேரத்தில் ஆசனவாயையும் இறுக்கிக் கொள்ளவேண்டும்
பிறகு  ஆசனவாயை விட்டு ஆறு எண்ணிக்கைகள் வலது நாசியில் காற்றை வெளிவிடவேண்டும். <3,12,6 >இது ஒரு சுற்று இதுபோல் பத்து சுற்றுகள் செய்ய வேண்டும். அதாவது இடதில் இழுத்து , உள்நிறுத்தி , வலதில் வெளிவிடுவது ஒருசுற்று.! <வலது நாசியில் மூச்சை வெளிவிடலாம். ஆனால், வலதுநாசியில் இழுக்கலாகாது.!
அதுபோல் இடதுநாசியில் இழுக்கலாம் ஆனால், வெளிவிடக்கூடாது>
அடுத்து  கையை மாற்றி இடது நாசியில் 3 எண்ணிக்கை இழுத்து
வலதுநாசியில் 6 எண்ணிக்கை வெளியேவிட்டுவிட்டு பிறகு இரண்டு மூக்கு மற்றும் ஆசனவாயை இறுக்கி 12 எண்ணிக்கைகள் காத்திருக்கவும். இது ஒருசுற்று. பிறகு மீண்டும் 3,6,12 என்ற விதத்தில் இதுபோல் 5 சுற்றுகள் செய்து பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும்.!
நாளைக்கு காலை, மாலை என இரண்டுவேளை செய்யலாம்.!

🚺பயன்கள்

1.உடலில் உள்ள கெட்டக்காற்றுகள் வேகமாக வெளியேறும்
2.நுரையீரலின் இயங்கு சக்தி அதிகமாகும்
3.உடல் மிதக்கும் சக்தி ஏற்படும்
4. இரத்தஅழுத்தம் சீராகும்
5.இளமையான தோற்றம் கிடைக்கும்
6.உடல் எடை சீரான நிலையில் பாதுகாக்கப்படும்
7. குண்டலினி ஆற்றல் மேம்பட்டு ஆன்ம விழிப்பு நிலை ஏற்படும்
8.கவனகுவிப்பு திறன் மேம்படும்
9.நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம் சீராகும்
10.அதிக நேரம் தியானம் செய்யும் ஆற்றல் வளரும்.!

♨இது ஆரம்ப நிலையினருக்கு கொஞ்சம் கடினமான பயிற்சியாக தெரியும். ஆனால், தொடர்ந்து பிராணாயாமம் பயில்பவர்களுக்கு மிகவும் சுலபமாக செய்ய வருவதோடு நீடித்த ஆரோக்கியத்தையும் வழங்கும் அற்புத பயிற்சி இது.!

🍁http//amyogatrust.blogspot.in
Mobile:9629368389

நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...