I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: ஆஸ்ரமத்திற்கு வரும் வழி

Sunday, 6 May 2018

ஆஸ்ரமத்திற்கு வரும் வழி

நட்பாளர்கள் கவனத்திற்கு

வெளியூர்களில் இருந்து மே 11,12,13  இயற்கை வாழ்வியல் முகாமிற்கு பேருந்தில்  வருபவர்கள் நெல்லை- நாகர்கோவில் வழியில் நாகர்கோவிலிற்கு சுமார் 15 கிலோமீட்டர் முன்பாக வரும்  ஆரல்வாய்மொழி  நிறுத்தத்தில் இறங்கினால் சுப்ரமணியபுரத்தில் உள்ள அன்னை ஆஸ்ரமம் 2 கிலோமீட்டர் தான்.!
ஆட்டோவில் வந்துவிடலாம்.!
பெங்களூர்,சென்னை,கோவை,மதுரை போன்ற ஊர்களில் இருந்து இரயிலில் வருபவர்கள் ஆரல்வாய்மொழி நிறுத்தத்தில் இருந்து ஆட்டோவில் வந்துவிடலாம்.!
சில இரயில்கள் ஆரல்வாய்மொழியில் நிற்காது அதனால் முதலிலேயே விசாரித்து ஆரல்வாய்மொழிக்கு முந்தைய நிறுத்தமான வள்ளியூரில் இறங்கி பேருந்தில் ஆரல்வாய்மொழி வந்து அங்கிருந்து ஆட்டோவில் வந்துவிடலாம்.!
நெல்லை வழியாக சொந்த வாகனத்தில் வருபவர்கள் ஆரல்வாய்மொழி  பேருந்து நிறுத்தம் தாண்டி நாகர்கோவில் வரும் வழியில் சுமார் ஒருகிலோ மீட்டர் வந்தால் வலதுப்பக்கம் ஒரு கோயிலுக்கான அலங்கார வளைவு
தென்படும் அங்கு திரும்பி நேரே  மேலே வந்தால் இறுதியில் முருகன் மலைக்கோவில் ஒன்று இருக்கும்
அதன் அடிவாரத்தில் அன்னை ஆஸ்ரமம் என்ற பெயர்பலகை இருக்கும் பார்த்து வந்துவிடலாம்.!
நாகர்கோவிலிலிருந்து வருபவர்கள் ஆரல்வாய்மொழி பேருந்து நிறுத்தத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாகவே இடது பக்கம் ஒரு பெரிய மரமும் அலங்கார வளைவும் தென்படும் அந்த வழியாக  மேலே வந்தால்   இறுதியில் முருகன் மலைக்கோவில் வரும் அதன் அடிவாரத்திலேயே அன்னை ஆஸ்ரமம் உள்ளது.
நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கும் அனைவரும் மே 10 - வியாழன்று மாலை ஆறு மணி முதல் வெள்ளி காலை ஆறு மணிக்குள் வந்து சேர்ந்து விடுவது அவசியம்.!
ஏற்கனவே தொலைபேசியில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவர்.! இதுவரை முன்பதிவு செய்யாதவர்கள் தங்கள் வரவை தவிர்க்கவும்.
நாம் மே 11,12,13 வெள்ளி,சனி,ஞாயிறு மூன்று நாளும் இயற்கை முகாமில் இருப்பதால் முகாமிற்கு வருபவர்களைத் தவிர மற்ற முகநூல்,வாட்ஸ்அப் நண்பர்கள் யாரும் தொடர்புகொள்ள வேண்டாம்.!
எல்லா மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் இயற்கை
வாழ்வியல் முகாம் நடைபெற உள்ளது.!
இதில் இயற்கை எனிமா,கபசுத்தி,யோகா,தியானம்,பழ உணவு,பிராணசிகிட்சை போன்ற பல்வேறு இயற்கை வாழ்வியல் நுட்பங்கள் நேரடியாக கற்பிக்கப்படுகிறது.!
அடுத்தடுத்த முகாமில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ள நட்பாளர்கள் இப்பொழுதே முன்பதிவு செய்து கொள்ளலாம்.!

நலம் பெருகட்டும் …

AUM HERBALS
9629368389
9629131089

www.aumherbals.com
amyogatrust.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...