I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: கற்றாளை மகிமை

Monday, 14 May 2018

கற்றாளை மகிமை

குமரிசாக்லெட்
கிருதம். மருந்து செய்முறை.

தேவையான பொருட்கள்:
1.சித்தாமணக்கெண்ணெய் -1லிட்டர்
2.சோத்து கத்தாழை சோறு  -1/2 கிலோ
3.தரமான பனங்கல்கண்டு  -1/2கிலோ
4.வெள்ளை வெங்காயம்    -250 கிராம்
5.சீரகம்                                    -25 கிராம்

செய்முறை:
         
            சோற்று கற்றாழை மேல் தோல் சீவி சோறு எடுத்து ஏழுமுறை கழுவி சாக்லெட் அளவு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பனங்கல்கண்டை  அரைத்து சலித்து பொடித்து வைக்கவும்.சீரகத்தை வறுத்துப் பொடித்து வைக்கவும்.வெள்ளை வெங்காயத்தை இடித்து சாறு எடுத்து வைக்கவும்.
            சித்தாமணக்கு எண்ணெய்யை அடுப்பில் வைத்து  பொடித்து வைத்துள்ள பனங்கல்கண்டு, சீரகம் மற்றும் கற்றாழை சோறு மற்றும் வெள்ளைவெங்காய சாறு இவைகளை எண்ணெய்யுடன் கலந்து எரித்து வரவும்.நீர் சுண்டி மெழுகு பதம் வந்ததும் இறக்கி பத்திரப்படுத்தி வைக்கவும்.
தீரும் நோய்கள்:

1.நவமூலமும் தீரும்.

2.அல்சர், ரணம்,வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, குடல் புண்கள் தீரும்.

3.பசியின்மை, புளியேப்பம்,பொருமல், மந்தம் இவை தீரும்.

அளவு:   காலை மாலை பதினைந்து மி.லி அளவு சாப்பிட வேண்டும்.உடல் பலத்திற்கு தக்கபடி அளவை  கூட்டிக் குறைத்து சாப்பிட வேண்டும்.
மேலும்,
4.மேக ரோகம் அதனால் ஏற்பட்ட பலவீனம்.

5.நீர்கசியும் கிரந்தி,அரிப்பு, தினவு, எரிச்சல்.

6.உஷ்ணத்தினால் மஞ்சள்,சிவப்பு நிறங்களில் நீர் போதல்.

7.தாது இழப்பு, விந்து நட்டம், விந்து நீர்த்தல், பலவீனம் , விந்து முந்துதல் தீர்ந்து  விந்து தடிப்பாகும்.

8.அரையாப்பு, தொடைக்கட்டி, உறுப்புகளின் அக,புற ரணங்கள், சீழ் வடிதல் தீரும்.

9.மிக அற்புதமான மலச்சிக்கல் நிவாரணி.

10.தொடர்ந்து கொடுத்து வர குழந்தைகளின் உடல் தேறும்.

அளவு:
காலை மாலை ஐந்து மில்லி அளவு கொடுத்து காரம், புளி நீக்க வேண்டும்.!

இணையப்பகிர்வு

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...