I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: கொடை உணவு

Wednesday, 16 May 2018

கொடை உணவு

குளிர்ச்சி தரும் நுங்கு 🎇

வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம்தான் பனைமரம். கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை நாடுவோம். நம் உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.

நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.

நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம்.

நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாகப் பயன்படுவது அதிசயமே.

மேலும் நுங்கை சாப்பிட்டடன் உடனடி நிவாரணம் கிடைக்கும். உடல் உஷ்ணத்தால் அவதிபடுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும். ரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு சிறந்த மருந்து.

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.
நுங்கின் மேல் தோல் துவர்ப்பாக இருக்கும். அதனை நீக்கி விட்டு பலர் சாப்பிடுவர். அந்த மேல் தோல் துவர்ப்போடு சாப்பிட்டால் நுங்கு வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.

நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும். பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு
சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும். சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும்.

குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில்  பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும்.நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.!

-இணையப்பகிர்வு

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...