I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: உடல் உணரும் தருணம்

Friday, 18 May 2018

உடல் உணரும் தருணம்

மனதோடு பேசுகிறேன்

---ஏகப்பிரியன்----

18.காயமே இது பொய்யடா

நீங்கள் தீராத வியாதியாலோ, துன்பத்தாலோ பாதிக்கப்பட்டிருந்தால் வெறுமனே உங்கள் உடலையும் எண்ணத்தையும் கவனியுங்கள். உங்களைச் சுற்றி உள்ள நன்மையும் தீமையும் கலந்த பிற ஆற்றல்கள் என்ன சொல்கிறது,உங்களை எங்கு செலுத்துகிறது? என்று;ஆழமாக அதே நேரம் வெறுமனே  கவனியுங்கள்.

மருத்துவன் சொல்வதையும் மனோதத்துவக்காரன் சொல்வதையும் முழுதாக நம்பாதீர்கள். ஏனெனில் இவர்களைப் போன்ற ஒரு பெருங்கூட்டம் பல மருந்துகளையும்  பெரிய பெரிய கருவிகளையும் வைத்துக் கொண்டு,புதிய  ஆராய்ச்சிகள்  என்ற பெயரில் தனது பிழைப்பிற்காகவும் தங்கள் வாழ்க்கையை கடத்துவதற்காகவும் பல ஈக்களையும் எறும்புகளையும் பிடித்து வைத்துக்கொண்டு, இது ஏதேன் காலத்து கிருமி என்று;உங்களை நம்ப வைக்கிறார்கள்.
இவை அத்தனையும் கட்டுக்கதை.

உங்கள் உடலும் மனதும்  உங்களிடம் மட்டுமே உள்ளது,உங்கள் கடந்த கால நோய்கள் பற்றியும், மனநிலை பற்றியும், நிகழ்கால வாழ்க்கைச் சூழல் பற்றியும்  எந்த மருத்துவனாலும் மனோவியலாளனாலும் உங்களை விட சிறப்பாக அறிந்து கொள்ளவே முடியாது.

அவனவன் சில தத்துவத்தையும் அளவீடுகளையும் வைத்துக் கொண்டு உங்களை அந்த கட்டத்தில் பொருத்திப் பார்க்கிறான். பிறகு அவனுக்கு தோன்றியதையும் கருவிகள் கூறியதையும் வைத்து ஏற்கனவே தயாராக வைத்துள்ள மருந்து மாத்திரைகளையும் ஆலோசனைகளையும் உங்களுக்கு வழங்குகிறார்கள். இது சரியாக இருக்காது. ஏனெனில்,இறந்த உடலையும்,அமெரிக்க ஆராய்ச்சி மையங்கள் செய்த ஆராய்ச்சி முடிவுகளையும் வைத்து உயிரோடு, ஆண்டிப்பட்டியில் உலவும் உங்களுக்கு மருத்துவம் கூறுவதைப் போன்ற வேடிக்கையான விசயம்  உலகில் வேறு எதுவும் இல்லை.

தெருவில் போற, ஒரு பெண்ணின் கைகளைப் பிடித்தால் அவள் கூச்சலிடுவாள். ஆனால்,உங்கள் மனைவியின் கையையோ,மகளின் கையையோ நீங்கள் பிடித்துக் கொள்ளலாம். ஆனால்,இவர்களோ உங்கள் உடலில் இருக்கும் எல்லாக் கோளாறுகளையும்  அன்னியப் பெண்ணின் கைகளை பிடிப்பதற்கு ஒப்பானதாக கூறுகிறார்கள். என் உடலில் இருக்கும் கல்லோ,கட்டியோ,கொழுப்போ, மனநலக்கோளாறோ அன்னியப் பெண் அல்ல மாறாக அவை எனது மனைவியைப் போல மகளைப்போல எனக்காக உருவாக்கப்பட்டவை. என்னை சீர்ப்படுத்தவே அவர்கள் என்னோடு உள்ளனர். மிக மிக  நெருக்கடியான சூழலில் மட்டுமே இவர்கள் எனக்கு எதிராக செயல்படுவார்கள் மற்றபடி அவர்கள் என்றும் என் நலத்தை மட்டுமே எண்ணி இருப்பார்கள். ஆதலால், நான் தேவையின்றி இப்பொழுதே அவர்களை குற்றம் கூற அவசியம் இல்லை.

அவரவர் மனச்சான்றின் படி தங்கள் வாழ்க்கை முறையை சீராக்கிக் கொண்டால், எல்லா உடல் மன நோய்களையும் உடல் தானே குணப்படுத்தி விடும். மிகமிக நெருக்கடி நிலையில் மட்டுமே மூன்றாம் நபரின் மத்தியஸ்தம் உங்களுக்குத் தேவைப்படலாம்.
உடல் பற்றியும் மனம் பற்றியும் மேல் நாட்டு வியாபாரிகள் ஆராய்ந்து கூறிய அத்தனை விசயங்களையும் ஒவ்வெரு குறைபாட்டிற்கும் அவர்கள் வைத்துள்ள ஓராயிரம் பெயர்களையும் மறந்து விடுங்கள். நான் சக்கரை நோயாளி,ஆஸ்துமா நோயாளி,இரத்த அழுத்த நோயாளி,எனக்கு புற்றுநோய் என்று;உங்கள் நோயோடு உங்களை அடையாளப்படுத்துவதை விட்டுவிடுங்கள். இன்னும் மனம் சம்மந்தப்பட்ட அத்தனை வியாதிகளுக்கும் என்னென்ன பெயர் கூறினார்களோ, அத்தனை பொய்களையும் மறந்து விடுங்கள்.

"உடலில் ஆரோக்கிய முன்னேற்றம் வேண்டும்  என்றும்;மனதில் சிந்தனை தெளிவு வேண்டும் என்றும்,மட்டுமே எப்பொழுது மனதில் பதியுங்கள், உங்கள் வாழ்க்கை முறையிலும் சிந்தனையிலும் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள். அப்பொழுது  என்ன நடக்கிறது என்று உங்களுக்குள் தொடர்ந்து மாதக்கணக்காக ஆண்டுக்கணக்காக கவனித்துக் கொண்டே வாருங்கள்; இடையில் இந்த உணவுக்கு மாறுவோமா?  அந்த மூலிகை மருந்து நல்லதா?  திருவண்ணாமலை வைத்தியரிடம் போலாமா?
பாலத்து ஜோசியனிடம் பரிகாரம் உள்ளதா,
மந்திர தந்திரங்களில் அடங்குமா? என்றெல்லாம்; யோசித்து மன உறுதியை இழக்காமல் தொடர்ந்து இயற்கை வழியில் நம்பிக்கையோடு செல்லுங்கள், நலமெல்லாம் நாடி வரும்.

எனக்கு சிறுவயதில் மலச்சிக்கல், யோகம் செய்தேன் சரியாகிவிட்டது. இளைய வயதில் இதயநோய் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டேன் சரியாகி விட்டது. முதுகுவலியால் சில காலமும் மன வலியால் பல காலமும் சாதா போராடினேன் சரியான உணவையும் எடுத்துக் கொண்டு, எதையும் முழு கவனமுடன் செய்ய ஆரம்பித்தேன், சரியாகி விட்டது.

பித்தப்பையில் கல்,கல்லீரலில் கொழுப்பு என்றார்கள். மொத்தமும் பொய்யென்று சத்துணவையும் சாந்தியாசனத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்தேன், சரியாகிவிட்டது.

காய்ச்சல் வந்தால்  நெற்றியில் பற்றும் துளசி மாத்திரையையும் போட்டு விட்டு படுத்து விடுகிறேன், போய்விடுகிறது.
உடல் வலி என்றாலோ, இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும்  என்று; என் மன மொழியோடு வலியை  ஊடுருவிப் பார்க்கிறேன்,
ஒன்றுமில்லாது போகிறது.
பித்த மயக்கம் என்றாலோ,அஜீரணக் கோளாறு என்றாலோ  வேப்பங்குச்சியால் பல் விளக்கிவிட்டு, வாந்தி எடுத்தவுடனேயே உடல் சாந்தியாகி விடுகிறது.

பெருங்கோபம் என்றால் உடனே கடகடவென  மனதில் உள்ளதை எழுதி வீசிவிட்டு, கண்மூடி எண்ணத்தை ஆழமாக தியானிக்கிறேன், மனம் லேசாகி விடுகிறது.

ஆமாம்,எம் சித்தன்
சொன்னதே உண்மை;
உடலும் மனமும் பொய் ஆன்மாவின் இறவா நிலையே மெய்.!

தொடரும்

www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...