I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: உயிரெல்லாம் உலகமயம்

Sunday, 27 May 2018

உயிரெல்லாம் உலகமயம்

மனதோடுபேசுகிறேன்

---ஏகப்பிரியன்---

21.ஸ்டெர்லைட்
முதலும் முடிவும்

உரிமையாளர்: அனில் அகர்வால்
தலைமையிடம் - இலண்டன்,இங்கிலாந்து.
நிறுவனப் பெயர் - வேதாந்தா ரிசோர்ஸ்
அமைந்துள்ள இடம் - தூத்துக்குடி.
முக்கிய உற்பத்தி - தாமிரம் (copper )

கழிவு உற்பத்தி - தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம்.

1993 உலக மயமாக்கல் ஒப்பந்தத்தை தொடர்ந்து  பி.வி.நரசிம்மராவ் ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட திட்டம்.

முதலில் தேர்வுசெய்த
இடம்- குஜராத்.

அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத்,மகராஷ்ட்ரா, கோவா, கர்நாடகா, கேரளா.

அனுமதி தந்து பிறகு மக்கள் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட இடம்  மகாராஷ்ட்ரா , ரத்னகிரி.
அப்போதைய மகராஷ்ட்ரா  முதல்வர் - சரத்பவார்.

இறுதியாக திட்டத்திற்கு அனுமதி தந்து
அடிக்கல் நாட்டியவர் -  முதல்வர் ஜெ.ஜெயலலிதா. <1994>
ஆலை இயங்க அனுமதியளித்தவர் - முதல்வர் மு.கருனாநிதி 1996.
அனுமதிக்க காரணமாக  தூத்துக்குடி துறைமுகம் வளரும் என்று கூறப்பட்டது.

முதல் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் -1996.
போராட்டம் நீர்த்த காரணம் - தென் மாவட்ட சாதிசண்டை.

தண்ணீர் எடுக்கப்படும் ஆறு - தாமிரபரணி.
ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7.
முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)
இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1).
மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3).
நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1).

ஐந்தாம் விபத்து - ஆயில் டேங்க் வெடிப்பு.ஆறாம் விபத்து - நச்சுப்புகை வெளியேற்றும்
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்
உற்பத்தி செய்தது - 2லட்சம் டன் (2005 கணக்கில்).
கழிவுகள் புகையாக காற்றிலும் நீர்க்கழிவுகளாகவும் பூமியிலும் கடலிலும் கலக்கப்படுகிறது.
ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர்
ஆலையை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா.

மீண்டும் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.

தமிழ்நாடு பசுமை வாரியம்  - தடை ,தேசிய பசுமை வாரியம் - அனுமதியளித்தது.

இதற்கு காரணம் உலக மயமாக்கல்  சட்டத்தில், இந்திய அரசாங்க த்திற்கும் நீதித்துறைக்குமே கூட சில அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
அதாவது இது போன்ற திட்டங்களுக்கு  எத்தகையை இடையூறுகள் வந்தாலும் எதிர்த்து,  தொடர்ந்து உற்பத்தியை பெருக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். என்பது உலக மயமாக்கலின் இரும்புப்பிடி சரத்துகளில் ஒன்று.

இதுபோன்ற அழிவுத்திட்டங்களை தவிர்க்க முடியாத சூழலில் கொண்டுவருவதாய் இருந்தால் மக்கள் வசிக்கும் இடத்திற்கும் குறைந்தது 10 கிலோமீட்டருக்கு தொலைவில் நிறுவ வேண்டும்.
ஆனால், மக்கள் நெருக்கமாய் வாழும் பகுதியில் இதுபோன்ற திட்டங்களை அனுமதித்த முட்டாள்களே தமிழ்நாட்டை இதுவரை ஆண்டுள்ளார்கள். தற்போதைய மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை செல்லாது என்று; உறுதியாக  கூற முடியும். ஆனால்,அதற்கு மக்கள் மீதும் இயற்கை மீதும்  உண்மையான அக்கறை உள்ள மத்திய,மாநில அரசுகள் அமைய வேண்டும்.

இதுவரை அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு  புற்றுநோய்,தோல்நோய்கள், ஆஸ்துமா,காசநோய், போன்ற பல்வேறு வியாதிகள் ஏற்பட்டு  மக்கள்  தொடர்ச்சியாக மாண்டு வருகிறார்கள்.
அந்தப்பகுதி தேவாலயங்களில் தொடர்ந்து மரண பிராத்தனைகளே அதிகமாக நடைபெறுவதாக சின்னக் குழந்தைகளையும் தங்கள் இளவயது கணவர்களையும் இழந்தப் பெண்கள் கதறியதை வாட்ஸ்அப்பில் பார்த்தபோது பசுபக்தர்களைத் தவிர மீதம் உள்ள தமிழ்மக்கள் அனைவரும் துடித்துதான் போனார்கள்.

கடந்த நூறு நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் விடிவு வராத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடந்த போராட்டத்தில் ஆட்சியர் அலுவலக முற்றுகையின் போது தடையை மீறி கூடினார்கள், அலுவலக கண்ணாடியை உடைத்தனர்,போலீசாரை கல்லால் அடித்தார்கள்,வாகனங்களை எரித்தார்கள் போன்ற காரணங்களைக் கூறி காவல்துறை  தனது குறிப்பார்த்த்து தாக்கும் யுக்தியின் புதிய பரிமாணத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் அப்பாவி மக்கள் மீது வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார்கள்.

தமிழக அரசு,ஆட்சியர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போன்றவர் களின் அலட்சியத்தாலோ அல்லது எதிர்க்கட்சிகள் கூறுவது போல திட்டமிடப்பட்ட  தாக்குதலாக கூட இருக்கலாம். ஏனெனில் கலவரத்தை தூண்டியதே காவல் துறைதான் என்றும் சென்னை பாணியில் பல்வேறு வாகனங்களுக்கு தீ வைத்ததும் காவல் துறை நபர்கள் தான் என்றும் பொது மக்களில் பலர் குற்றம் சாட்டுகிறார்கள். அதோடு  கண்ணீர் புகையை வீசிய பிறகு காவல் வாகனங்களின் மேலே ஏறி நின்று சீருடை அணியாத காவலர்கள் அதி நவீன துப்பாக்கியால்  போராட்டக்காரர் களின் இதயம்,வாய்,தலை என்று மிக சரியாக குறிப்பார்த்து சுட்டுக்கொன்றிருப்பதும் இந்தப் போராட்டத்தில்  முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் இருக்கவே முன்பே 144 தடையுத்தரவை அமுல் படுத்தியதாகவும் கூறுகிறார்கள்.

அதுபோலவே இவ்வளவு துல்லியமாக இப்படி ஒரு திட்டமிட்ட தாக்குதலை நடத்தும் அளவிற்கு தற்போதைய மாநில அரசிற்கு அறிவோ,துணிச்சலோ கிடையாது; என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இது முழுக்க முழுக்க மத்திய அரசால் முன் கூட்டியே வடிவமைத்துக் கொடுக்கப்பட்ட தாக்குதல் என்று கூறுவதில் பெரிய  உண்மைகள் இருக்கலாம்.

கொலைக்களத்தில் 10 பேர் இறந்து விட்டனர் 12 பேர் இறந்து விட்டனர். போன்ற தகவல்கள் வந்துகொண்டிருந்த போது  "காவல் துறையால் வெறும் பத்து பேரைதான் சுட முடிந்ததா? தமிழ்நாடு போலீசுக்கு பயிற்சி போதவில்லையா?

சாகுறவன் அத்தனை பேரும் கிறுஸ்தவர்கள். இந்து மதத்தின் விடிவெள்ளி மோடிக்கு எதிராக போராடியதால் சாகிறார்கள் " போன்ற மனிதமற்ற நக்கல் பதிவுகளை பேஸ்புக்,வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களில் போட்ட பாஜ பெயரில் இயங்கிய இரத்தவெறி கும்பல்களும்  இந்த தாக்குதலுக்கு பின்னால் மத்திய அரசின் அத்தனை அதிகாரமும் இயங்கி உள்ளதோ? என்ற சந்தேகத்தை தெளிவுப்படுத்துகிறது.
இன்னும் நூற்றுக்கணக்கான மக்களை அடித்து துன்புறுத்தியதோடு பலரை இன்னும் நீதிமன்றத்தில் கூட ஆஜர் செய்யவில்லை நமது கண்ணியமான காவல்துறை.
தமிழ்நாட்டில் முதல் முறையாக தென் மாவட்டங்களுக்கு இணையசேவையை இரத்து செய்து கலவர காட்சிகளை பொதுமக்கள் பரப்புவதை தடைசெய்து  அரசு சாதனைப் படைத்தது.

இரண்டு மூன்று நாட்கள் கடைகள் எதுவும் திறக்கவில்லை. பெண்கள்,குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. வெளியே தலைகாட்டிய ஆண்களை காவல் துறை இழுத்துச் செல்கிறது. போன்ற தூத்துக்குடி மக்களின் மரண ஓலம் கூட ஆளும் எடப்பாடி கும்பலுக்கு கேட்கவில்லை.

ஸ்டெர்லைட் படுகொலைகளை தற்போது தமிழ்நாட்டில்  பிஜேபியினர் மட்டுமே  முழு மனதாக ஆதரித்து பேசி வருகிறார்கள்.

உலக மயமாக்கலின் நீட்சியாக வந்துள்ள ஸ்டெர்லைட்,அனுஉலை,நியுட்ரினோ போன்ற திட்டங்களைக் கூட  சாமான்ய மக்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால்,தூத்துக்குடியில் உள்ள பாஜ கும்பலும் நாகர்கோவிலில் உள்ள பாஜ கும்பலும் தனது அருகில் இருக்கும் மனிதனின் உயிர்ப்போராட்டத்தை  கொச்சைப்படுத்தி ஸ்டெர்லைட் படுகொலையின் போது வெடிவெடிப்பதும், கூடன்குளம் அனுஉலையை அனுமதிக்கும் தீர்ப்பின் போது இனிப்பு வழங்கி கொண்டாடுவதும் இவர்கள் ஒரு வித சைக்கோ நோயாளிகளாக  மாறிவிட்டனரோ? என்று;  நினைக்கத் தோன்றுகிறது.

தற்போது நமது அருகில் வசிக்கும்  இதுபோன்ற இரத்தவெறி கும்பல்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாய் இருந்தாலும் அவர்களை முதலில் போராடி துரத்த வேண்டும். மாவட்டச் செயலாளர்,கிளைச்செயலாளர்,பிரச்சார பீரங்கி,அள்ளக்கைகள்,ஆளுங்கட்சி,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்  என்று எவராக  இருந்தாலும்  நமக்கு அருகில் இருந்து கொண்டு நமது பிறப்புரிமையை கொச்சைப்படுத்தும் இது போன்ற தீயசக்திகளை முதலில் செருப்பால் அடித்து திருத்த வேண்டும். முடியாவிட்டால் உரைவிட்டே துரத்தவேண்டும். மக்கள் கலெக்டர் அலுவகத்திலோ,தலைமைச் செயலகத்திலோ, பிரதமர் அலுவலகத்திலோ போராட வேண்டாம். இது போன்ற உள்ளூர் துரோக கும்பலின் கழுத்தைப் பிடித்தாலே போதுமானது. அவனின் அலறல் சத்தம் கோட்டையை எட்டி உடனே அரசு மக்களை நோக்கி வந்துவிடும். அல்லது அரசு அல்ல,நம்மை சுற்றியுள்ள மக்களே, நமக்கு பதவி வழங்கி உள்ளார்கள். என்ற; உண்மை  இந்த நன்றிகெட்ட, காட்டிமிராண்டி கும்பலுக்கு உடனே உரைக்கும்.!

அரசு இனி எத்தனை அடக்கு முறையைக் கையாண்டாலும் கூட, ஸ்டெர்லைட்  ஆலையை மூடும் நாள் விரைவில் வந்தே தீரும்.! அதற்கு முன்பே மூளை கெட்ட போலி மதவாத கும்பலுக்கும் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க அவர்களுக்கு சலாம் போடும் அடிமை தமிழக அரசிற்கும் நல்ல முடிவை இயற்கை ஏற்படுத்தித் தரும்.!

தங்கள் வாழ்வை மீட்க போராடி, தங்கள்
உயிரை நீத்த போராளிகள்
அனைவருக்கும்
#இதயஅஞ்சலிகள்
🍁🍁🍁🍁🍁?
?🍁🍁🍁🍁🍁🍁
தொடரும்

www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...