மனதோடு பேசுகிறேன்
---ஏகப்பிரியன்---
20.ரமலான் நோன்பும் ஆராய்ச்சி புளுகும்
அமெரிக்க பல்கலை கழகங்களும் ஆய்வகங்களும், மருத்துவம் மட்டுமல்லாது, பல்வேறு விசயங்களைப் பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றன.
இந்த ஆராய்ச்சி முடிவுகளை உடனே அமெரிக்க கம்பெனிகளும், உலக ஊடகங்களும் உலகமெல்லாம் விரைவில் பரப்புவார்கள். பிறகு உலக இரட்சகர்கள் என்று கூறப்படுகின்ற மருத்துவர்களும் அதிகம் படித்த அறிவாளிகளும் இவர்களோடு சேர்ந்து போட்டிப்போட்டுக் கொண்டு தங்களை நாடி வருபவர்களிடமும் சமூக ஊடகங்களிலும்அந்த விசயத்தை பற்றிக் கூறி மூலை முடுக்குகளிலெல்லாம் கொண்டு சேர்ப்பார்கள்.
உடனே அப்பாவி மக்களும் இதை உடனடியாக கடைப்பிடித்து தங்கள் ஆரோக்கியத்திலோ வாழ்க்கை முறையிலோ மிகப்பெரிய மாறுதல் வருவதற்காக
காத்திருப்பார்கள்.
உண்மையில் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளை அமெரிக்க ஆய்வாளர்கள் மட்டுமே மிக அதிகமாக நடத்துவதற்கு என்ன காரணம்? என்பதையே நாம் இப்பொழுது ஆராய இருக்கிறோம்.
மனிதர்கள் அனைவரையும் ஒரு வாழ்க்கை முறையையோ மருத்துவ முறைகளையோ கடைப்பிடிக்க செய்ய வேண்டியே, எல்லா ஆராய்ச்சிகளும் செய்யப்படுகின்றன. மருத்துவத்தை பொறுத்தவரை உடலியல் செயல்பாடு,பாக்டீரியா,வியாதிகளின் தன்மை, தடுப்புமருந்து என்று எத்தனையோ ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்த வண்ணமே இருக்கிறார்கள்.
கொழுப்பு, சக்கரைநோய்,இரத்த அழுத்தம் போன்றவற்றில் ஏற்கனவே அமெரிக்க ஆய்வகங்கள் கூறிய பல தகவல்கள் வியாபார ரீதியிலானவை என்பது;தற்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது.
உண்மையில் நல்ல கொழுப்பு,நல்ல சக்கரை,தேவையான இரத்த அழுத்தம் என்பது உடலுக்கு மிக நல்லது என்பது இன்று பலருக்கும் தெரிந்து விட்டதோடு, அயோடின் குறைபாட்டிற்காக ஆய்வு செய்து பரிந்துரை செய்யப்பட்ட அயோடின் உப்பே இன்று பெருகிவிட்ட தைராய்டு நோய்களுக்கு காரணம் என்பதும் நிரூபணமாகி வருகிறது.
ஆராய்ச்சி என்று கூறி விளம்பரம் செய்து விட்டால் போதும். இந்தியர்கள் கழுதை மூத்திரத்தை கூட சுத்தமான இளநீர் என்று ஒருகை பார்த்துவிடுவார்கள். என்பது 80% சுத்தமான உண்மை.
அதனால் தான் நமது தொலைக்காட்சிவிளம்பரதாரர் களும் கூட சதா ஆராய்ச்சி செய்தோம் என்று; விளம்பரங்களை செய்து தங்கள் பொருளை விற்கிறார்கள்.
இன்றைய நோய்ப் பெருக்கத்திற்கு இந்த டூபாக்கூர் விளம்பர பொருட்களும் ஒரு முக்கியக் காரணம் என்பது பலருக்கும் தெரியாது.
பீர் குடித்தால் நல்லது,தினமும் குறைந்த அளவு பிராந்தி,ரம் போன்றவை மிகுந்த ஆரோக்கியம் தரும். கிரீன் டீ, காப்பி,ஆலிவ் ஆயில்,சுத்திகரித்த தண்ணீர் போன்றவை உடலுக்கு மிக இன்றியமையாதது போன்ற பல செய்திகளை ஆராய்ச்சி என்ற பெயரில் நம்மிடம் தொன்றுத் தொட்டே பரப்பி வருகிறார்கள்.
தினமும் செக்ஸ் வைத்துக்கொள்வதும் சுயஇன்பம் செய்வதும் கூட மிகமிக அற்புத ஆற்றல் கொண்டவை என்று ஆராய்ச்சியின் பெயரில் மக்களை நம்ப வைத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்றால்?மக்கள் குப்பை உணவையும், வீண் கேளிக்கைகளையும் தொடர்ந்து கடைப்பிடித்தால் தான் பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருளை வாங்குவார்கள் என்பதோடு விரைவில் உடல்,மன நோயாளிகளாக மாறி தொடர்ந்து மருத்துவக் கொள்ளை நடத்தவும் உரியவர்களாக மாறுவார்கள்.
இதற்காகவே ஆராய்ச்சிகள் என்ற பெயரில் பல தகவல்கள் உலகில் பரப்பப்படுகிறது.
சரியாக கூறுவதென்றால் இதுவரை ஆராய்ச்சி என்று இவர்கள் கூறியவற்றில் 10 முதல் 30% உண்மை மட்டுமே உள்ளது. மீதி 70% சுத்தமான பொய் என்பது ஆராய்ச்சியை உற்றுநோக்கும் அனைவருக்கும் தெரியும்.
இடையில் நமது தோப்புக்காரணத்தையும் பழையச் சோற்றையும் கூட ஆராய்ச்சி செய்து மிக நல்லது என்றார்கள். பிறகு சூப்பர் பிரைன் யோகா என்று தோப்புக்கரணத்திற்கு பெயர் வைத்து அதை கற்றுக்கொடுக்க பல நிறுவனங்களை வெளிநாடுகளில் ஏற்படுத்தி உள்ளதைப்போலவே இப்பொழுது பல நட்சத்திர ஓட்டல்களிலும் ஷாப்பிங் மால்களிலும் பழையச்சோற்றை பாக்கெட்டில் போட்டு விற்கவும் வழிகாட்டி உள்ளனர்.
சரி,நோன்பு விசயத்திற்கு வருவோம். அதாவது இஸ்லாமிய நோன்பை ஆராய்ந்து அவர்கள் கூறியது என்னவெனில் …
1.கிட்டத்தட்ட பதினான்கு மணிநேரம் உணவும் நீரும் எடுக்காமல் இருப்பதால் உடலில் பல நாட்களாக சேமிக்கப்பட்ட நச்சு இனிப்பு கழிவுகள் வெளியேறுகிறது.
2.உள்ளுறுப்புகளில் சேமிக்கப்பட்ட கெட்டக் கொழுப்பு கரைகிறது.
3.உடலில் அதிகப்படியாக சேமிக்கப்பட்ட சக்கரை கரைகிறது.
4.இரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்பு கரைகிறது
5.மூளையில் புதிய செல்கள் உற்பத்தியாகிறது.
6.மன அழுத்தம் குறைகிறது.
மேற்கூறிய விசயங்கள் நோன்பை கடைப்பிடிக்கும் அனைவருக்கும் நடப்பதால் நோன்பு காலத்திற்கு பிறகு பல்வேறு கழிவுகள் நீங்கி மன அழுத்தம்,பக்கவாதம்,மாரடைப்பு,மூளைச்சோர்வு போன்றவை வராமல் இருக்கும். என்று; ஆய்வு கூறுகிறது.
இது ஒரு ஆகாசப் புளுகு என்பதற்கு ஒரே ஒரு காரணத்தை மட்டும் கூறுகிறேன் கேளுங்கள். எந்த வகையான விரதம் இருந்தாலும் அந்த விரதம் முடிந்த காலத்திற்குப் பிறகு அதை முறிக்கின்ற வேலைகளை செய்யாமல் இருக்க வேண்டும். மீறி செய்தால் கிடைத்தப் பலனைவிட பாதிப்பு அதிகமாகிவிடும்.
இஸ்லாமிய நோன்பைப் பொறுத்தவரை மாலை நோன்பு திறந்தப் பிறகு இரவில், எந்தக் கழிவெல்லாம் உடலில் காலியானதோ அந்தக் கழிவுகளை மீண்டும் பல மடங்கு எடுப்பார்கள். முக்கியமாக டீ,காப்பி,சமோசாபேக்கிங் பேரிச்சை,பிஸ்கெட்,சாக்லேட்,மாமிச உணவுகளை இரவு மற்றும் அடுத்தநாள் முன் அதிகாலை நேரத்தில் எடுப்பார்கள்.
சுருக்கமாக கூறினால் பகலில் எடுக்காமல் எரித்த அத்தனை கழிவுகளையும் அதே அளவிற்கு இரவில் எடுத்து விடுவார்கள்.
அதனால் ஆராய்ச்சி புளுகர்கள் கூறும் எதுவும் இரமலான் விரதம் இருப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
நோன்பாளிகளுக்கு கிடைக்கும் நன்மை என்ன வென்றால் நீண்ட நேரம் பசியும் தாகமும் எடுத்த பின் உணவு உண்பதால் ஒரு சந்தோசமும், இறைவனுக்காக இதை செய்கிறேன் என்ற மனநிலையும், அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த உதவுகிறது. என்பது; மட்டும் தான். மற்றபடி பல்வேறு நோய் இருப்பவர்கள் நோன்பு திறந்தபின் அதற்கான மாத்திரை,மருந்துகளை வளமைப்போல எடுத்துக்கொள்வார்கள்.
இதுவே யதார்த்த நிலை. அதனால் வெறுமனே நோன்பு வைத்ததால் இத்தனை நன்மை என்று அமெரிக்கன் புளுகு வதை எந்த அறிவாளியும் சட்டை செய்யவே மாட்டார்கள்.
சரி, அமெரிக்க ஆராய்ச்சி மையத்திற்கு இதனால் என்ன லாபம் என்றால்?
நாங்கள் உலகில் உள்ள பல நன்மைகளைப் பற்றியும் ஆராய்ந்து பாரபட்சம் இல்லாமல் சிறந்த முடிவுகளை தருகிறோம். என்று,ஆராய்ச்சி அடிமைகளை அதிகப்படுத்தவும், இதை மிகப்பெருமையாக பிறரிடம் கூறி எங்கள் நோன்பில் இத்தனை நன்மை உள்ளது என்று ,தம்பட்டம் அடிக்கும் இஸ்லாமியர்களை ஆராய்ச்சி இரசிகர்களாக மாற்றவுமே இது போன்ற ஆராய்ச்சிகள் செய்யப்படுகிறது. இதே காரணத்திற்காகவே நமது யோகா,பழையச்சோறு,இந்தியகுடும்ப வாழ்க்கை முறையை பற்றியும் ஆராய்ந்து, நம்மை அவர்களின் ஆராய்ச்சியைப் பற்றி பேச வைப்பதோடு,உங்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் ஆராய்ந்து கூறியதால் தெரிந்தீர்கள். என்ற மாயையும் கிளப்புகிறார்கள். மற்றபடி இறையச்சத்தையும் உறுதியையும் தவிர வேறெந்த முக்கிய நன்மையும் நேன்பில் கிடையாது.
அப்படி வேறு நன்மை வேண்டுமானால் வளமையாக எடுக்கும் மாமிச உணவுகளையும், இரசாயண உணவுகளையும்,இரசாயண மாத்திரைகளையும் அறவே தவிர்த்தாலோ, அல்லது கால் பகுதியாக குறைத்தாலோ மட்டுமே முடியும்.
அதை கடைப்பிடிக்க யாருக்கும் ஈமான் இல்லை. ஆராய்ச்சி மருத்துவத்தின் தயவால் தான் பல இஸ்லாமியர்களின் வாழ்வே ஓடிக்கொண்டுள்ளது.!
அதை மேலும் வலுப்படுத்தவே இப்படி, ஒரு ஹெலிகாப்டர் ஐஸ்கட்டி இஸ்லாமியர்கள் தலையில் கொட்டப்பட்டுள்ளது.!
தொடரும்
www.aumherbals.com
No comments:
Post a Comment