இதயங்களை வெல்லுங்கள்
வெற்றிகளை அள்ளுங்கள்
1.அனைவரிடமும் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் அன்பு காட்டுங்கள்.
2.தங்கள் வேலைகளையும் தனக்கான கடமைகளையும்
சரியாக செய்பவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள்.
3.உங்களோடு இருப்பவர்களின் நல்ல முயற்சி, ஆசை, கனவுகள் நிறைவேற உதவி புரியுங்கள்.
4.எல்லாம் எனக்குத் தெரியும் என்று எண்ணாமல் பிறர்
சொல்வதை முழுதாக கேட்டுவிட்டு பிறகு பேசுங்கள்.
5.பிறர் செய்யும் காரியங்களில்
நீங்கள் தவறு என்று தெரிந்து கொண்டதை; அல்லது நீங்கள் அப்படி எண்ணுபவற்றை குற்றம் சாட்டும் வகையிலோ அல்லது நான் சொல்வது தான் உண்மை. என்ற; ரீதியிலோ பேசாமல், கனிவாக எடுத்துக்கூறி உண்மையை
உணர்த்த முயலுங்கள்.
6.சாதி,மத,கட்சி,வியாபார ரீதியிலான லாபங்களை மட்டும் கருதி யாரோடும் பழகவோ,பேசவோ செய்யாதீர்கள்.
7.எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள். ஆனால் உங்கள் சிரிப்போ,கேலியோ பிறரை காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
8.எதிர் பாலினத்தாருடன் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பழகாதீர்கள்.
9.தினமும் மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
10.கேட்காமல் யாருக்கும் ஆலோசனை கூறாதீர்கள்.
11.உங்கள் செயல்களில் வெற்றி பெற திட்டமிட்டு உழைப்பதோடு அடிக்கடி புதிய
வழிமுறைகளையும் கையாளுங்கள்.
12.எப்பொழுதும் உங்கள் கல்வி, வேலை, உடல் நிலைக்கு தகுந்த பொருத்தமான,பிறர் கண்ணை உறுத்தாத எளிய உடைகளையும் அணிகலன்களையும் மட்டும் அணியுங்கள்.
13.உங்கள் சிந்தனைகள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று சாதனையாக மாற உங்களோடு இணைந்து பணியாற்ற மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள்.!
14.நீங்களோ உங்களை சார்ந்தவர்களோ தப்பு செய்து விட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதோடு அதற்கான தண்டனை யையும் மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.!
15.பிறர் செய்த உதவிகளை எப்பொழுதும் நினைவு கூறுபவர்களாக நன்றி உடையவர்களாக வாழுங்கள்.!
*உலகில் உள்ள மாபெரும் சாதனை மனிதர்களையோ அல்லது நமது சுற்றுப்புறத்தில் உள்ள நல்லவர்களையோ கூர்ந்துப் பார்த்தால் அவர்களிடம் இந்த குணங்கள் மிகமிக அடிப்படையாக இருப்பதை தெளிவாக காணலாம்;✌*
நீங்களும் அவ்வாறு மாமனிதனாக வாழ வாழ்த்துகள்.!
இந்தப்பதிவை படித்ததற்கு மிகமிக நன்றி🙏🏻
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
🌳AUM HERBALS
MOBILE 9629368389
9629131089
www.aumherbals.com
No comments:
Post a Comment