மனதோடு பேசுகிறேன்
13.பயிரை விற்கும் வேலிகள்
" சில மனிதர்களை பணிந்து வணங்கினால் நாம் சொல்வதை கேட்பார்கள் …
சில மனிதர்கள், பணத்தை காட்டினால் பணிந்து வணங்குவார்கள் …
சில மனிதர்களை ஒங்கி மிதித்தால் மட்டுமே நாம் சொல்வதை கேட்பார்கள் …
அரசு இந்த மூன்றையும் செய்கிறது …
இந்திய மக்களை என்றைக்குமே வெளிநாட்டு அடிமைகளாகவும், நோயாளிகளாகவும் வைத்துக்கொல்வதற்காக.! "
இனி தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முடியாது. இப்படி; ஒரு உத்தரவைப்போடலாமா? என்று யோசித்து வருகிறேன். என்று நமது உலக மருத்துவ வியாபாரிகளின் இடைத்தரகர் மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் திருவாய் மலர்ந்திருக்கிறார்.!
இன்று அவர் மக்கள் மனநிலையை அறிந்து கொள்வதற்காக கூறியுள்ள, இந்தப் பணியை செய்வதற்கான ஆரம்ப வேலைகளை பல மாதங்களுக்கு முன்பே செய்ய ஆரம்பித்துவிட்டனஅரசு இயந்திரங்கள்.அதாவது தடுப்பூசிகளை போடுபவர்கள் அனைவரும் எந்த ஊசியை எப்பொழுது போட்டார்கள். எந்தெந்த ஊசிகளை போடவில்லை. என்பதை சில காலமாகவே எழுதி குறித்து ஒரு அறிக்கை தயார் செய்து வைத்துள்ளனர். அதன்படி இனி சில தடுப்பூசிகளை மட்டும் போடாத பெற்றோர்களுக்கு அபராதமும், பிள்ளைகளுக்கு தடுப்பூசியே போடாத பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு அரசு சலுகைகள் மறுப்பு,ஆதார் அட்டை மறுப்பு,பள்ளியில் சேர்க்க மறுப்பு என்று,புதிய புதிய சட்டங்களைப் போட உத்தேசித்து வருகிறது. அரசு பரிவாரங்கள்;இது போலவே சிலர் வீட்டிலேயே பாரம்பரிய முறையில் குழந்தையைப் பெற்று பிறப்பு இறப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வளர்த்து வருகிறார்கள்.இனி அதுபோன்று இல்லத்தில் பிறக்கும் குழந்தைகளையும் பதிவு செய்வதில்லை. என்ற; முடிவிற்கும் அரசு வந்துள்ளது. இது சம்மந்தமாக சில தனியார் அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர்.
வீட்டில் குழந்தைப் பெறுவதும் என் குழந்தையை தடுப்பூசியே போடாமல், இரசாயண உணவையும் மருந்தையும் கொடுக்காமல் வளர்ப்பதும் ,எனது பிறப்புரிமை.இதை; அரசு தடுக்க முனைவது எந்த நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் இல்லை.பல்வேறு வெளிநாடுகளோடும் பல இந்திய மருந்து கம்பெனிகளோடும் மத்திய,மாநில அரசுகள் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பெயரில் அரசு பல்லாயிரம் கோடிகளை தனது ஒவ்வெரு நிதிநிலை அறிக்கையிலும் ஒதுக்குகிறது. அதில் பாதியை மருந்து கம்பெனிகளுக்கு வழங்கிவிட்டு மீதியை மந்திரி கம்பெனிகள் தங்களுக்குள் பிரித்துக்கொள்கிறார்கள்.என்பதே; பல காலமாகவே அரசின் மீதுள்ள குற்றச்சாட்டு. இது ஒருவேளை தவறாக கூட இருக்கலாம். உண்மையிலேயே 'இன்றைய சுற்றுச்சூழல்,வாழ்க்கை முறை,உணவுமுறை அத்தனையும் மாறிவிட்ட காரணத்தால் நோய்களின் பெருக்கம் மிக அதிகமாக ஆகிவிட்டதால், அந்த நோய்கள் நமது பிள்ளைகளை பாதித்து விடக்கூடாது 'என்ற நல்லெண்ணத்தில் தான்,அரசு இதை செய்கிறது. என்று வைத்துக்கொண்டால் கூட நதிநீர் மாசு,விவசாய நிலம் அழிப்பு,மிதமிஞ்சிய இரசாயண உணவு உற்பத்தி போன்றவற்றை தடுக்க ஒரு துரும்பையும் கிள்ளிப்போடாத அரசு தடுப்பூசி விவகாரத்தில் மட்டும் இத்தனை வேகம் காட்டுவது - 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல'என்று கூறுவதாகவே உள்ளது.
கட்டாயப்படுத்தி,மிரட்டி,அபதாரம் போட்டு மக்களிடம் தடுப்பூசிப் போன்ற பலவற்றை திணிக்க முயற்சி செய்யும் தமிழக அரசும் இந்திய அரசும் ஒரு உண்மையை மறந்து விட்டது. அதாவது தடுப்பூசிகளையும்,பல்வேறு சொட்டு மருந்துகளையும் தயாரித்து உலகமெங்கும் அனுப்பி வைக்கும் அமெரிக்காவில் எல்லாத் தடுப்பு ஊசிகளையும் மருந்துகளையும் எல்லா குழந்தைகளுக்கும் போடவேண்டும். என்ற;சட்டம் இல்லை. அப்படி அவர்கள் கட்டாயப்படுத்தவும் இல்லை.தடுப்பூசிகளின் சாதகப் பாதகங்களை தெளிவாக எடுத்துக்கூறி தேவையானவர்கள் போட்டுக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறார்கள்.அதுதானே குடியாட்சி தத்துவம்.! அதைவிடுத்து அனைவருக்கும் கட்டாயம் என்று கூறுவது கொடுங்கோல் தன்மை இல்லையா? நான் சிறுவனாக இருந்த போது எனக்கு ஒரு தடுப்பூசி போட்டார்கள்,என் மகனுக்கு மூன்று ஊசிகளைப் போட்டார்கள்,இன்று எனது பேரனுக்கு இருபது தடுப்பூசிகளை போட வேண்டும் என்கிறார்கள். ஒரு ஊசியைப்போட்ட நான் இயற்கை விழிப்புணர்வின் காரணமாக ஆரோக்கியமாக இருக்கிறேன், மூன்று ஊசிகளைப் போட்ட எனது மகன் யோகா,இயற்கை உணவு போன்ற நல்லவற்றை கடைப்பிடித்தாலும் கூட அடிக்கடி நோய்வாய்ப்படுகிறான், 20 தடுப்பூசிகளைப் போட்டுள்ள எனது பேரக்குழந்தையின்நிலை என்ன?
தடுப்பூசிகளை ஏன் வேண்டாம் என்கிறோம் என்றால்,அது உடலின் இயற்கை நோயெதிர்ப்பு ஆற்றலை சீரழித்து புதிய புதிய நோய்களை உற்பத்தி செய்கிறது.என்பதே எங்கள் குற்றச்சாட்டு; இது பற்றிய பலப்பல ஆதாரப்பூர்வமான ஆய்வறிக்கைகள் எங்களிடம் இருக்கிறது.இதுபற்றி எனது ஆதிமருத்துவம் நூலில் கூட தெளிவாக எழுதி உள்ளேன். அரசிற்கு நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனும் இருந்தால் வீதிக்கு வீதி, தடுப்பூசிகளின் சாதகப் பாதகங்களைப் பற்றிய விவாதங்களை ஏற்பாடு செய்யத் தயாரா? இப்படி நாட்டு மக்களில் ஒரு சிலர் கேட்டால் திருடன் தலையில் தீப்பிடித்ததைப்போல வாயை மூடிக்கொண்டே குதிக்கிறார்கள்.
ஆனால், இனி பள்ளியில் சேர்க்கமாட்டோம்,ஆதார் தரமாட்டோம்,பாஸ்போர்ட் தரமாட்டோம் என்றெல்லாம்; மிரட்டலாமா? என்று அரசு உத்தேசிக்கிறது.!
இதை கேட்க தமிழகத்தில் நீதிமன்றங்கள் இல்லையா?
தமிழ் மருத்துவம் கற்ற ஞானிகள் இல்லையா?
விழிப்புணர்வு மிக்க மக்கள் இல்லையா? என்றெல்லாம் நாம் தேடினால் … மத்தளத்திற்காவது இரண்டு பக்கம்தான் அடி. ஆனால், இந்த இந்திய மக்களுக்கோ NEET முதல் GST வரை எட்டுப்பக்கமும் இடியோடு நாளொரு புதிய இடியும் பொழுதொரு பிடரி அடியும் தந்து,அரசு என்ற தாங்க வேண்டிய நிலமே நம்மை மண்ணோடு மண்ணாக புதைத்து வருகிறது. இப்போதைக்கு வெறென்ன செய்ய "துன்பம் வரும்போது சிரிங்க" அப்படின்னு இந்த மக்களாட்சி மன்னர்களை பார்த்து மக்கள் வெடிச்சிரிப்பை உதிர்க்கிறார்கள்.
மாண்புமிகு மந்திரிகளே, எங்கள் பிள்ளைகளுக்கு உரிமையும், ஆரோக்கியமும், கல்வியும்,அறிவும் கொடுப்பது நீங்கள் என்று நினைத்துதானே, எங்களை இப்படியெல்லாம் வதைக்கிறீர்கள்?
அடேய்,எங்கள் வாழ்வைக்காக்கவே உங்களை தேர்ந்தெடுத்தோம், ஆனால்,எங்கள் மூச்சையும் விற்க முனைகின்றீர்களே?
இதற்கு அடிபணியவே மாட்டோம் …
"அன்னையின் மொழியில் அன்பைக் கற்று,ஆசானின் மொழியில் அறிவைக்கற்று, மண்ணின் மடியில் உணவைப்பெற்று, உரிமைக்காக்கும் வீரம் பெற்று மீண்டும் தமிழர் பாரம்பரிய வாழ்வை,தற்சார்பு பொருளாதாரத்தை மீட்டெடுப்போம் "
உங்கள் ஏதோச்சதிகாரத்தை
முறியடிப்போம் …
-ஏகப்பிரியன் DYT
இன்னும் பேசுவேன் …
aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com
No comments:
Post a Comment