மனதோடு பேசுகிறேன்
12.ஒரு புத்தகமும்
ஆயிரம் இதயங்களும்
" பொய்மையும் வாய்மையிடத்தேனு சொன்னது 'குறளின் குற்றம்'
கீழான தந்திரங்களை கையாண்டால் மட்டுமே தர்மத்தை காப்பாற்ற முடியும் என்றது 'பகவத்கீதையின் குற்றம்'
பாவமன்னிப்பு கேட்டால் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்றது 'பைபிளின் குற்றம்'
இறைவனுக்கு இணைவைப்பது மட்டுமே மன்னிக்க முடியாத பாவம் என்றது 'குரானின் குற்றம்' இன்றைய உலக வீழ்ச்சியின், மோ[ச]டிகளின்,பயங்கரவாதத்தின் வேர் இதிலிருந்து தோன்
றியது தான் 'கள்ளிச்செடியில் கற்பூரவல்லி துளிர்க்காது' "
ரோண்டா பைர்ன் எழுதிய த சீக்ரெட் என்ற நூல் உலகில் உள்ள முக்கிய மொழிகளில் எல்லாம் வெளியாகி இதுவரை இருநூறு கோடிகளுக்கு மேல் சம்பாதித்துள்ளது. இன்னும் சம்பாதித்து வருகிறது.
இந்த நூலை இணையத்தில் எளிதாக வாங்கலாம். பெரும்பாலும் கடைகளில் கிடைக்காது. அதனால் தான் இப்படி வசூல் புரட்சி செய்ததோ என்னவோ தெரியவில்லை.தமிழில் இரகசியம் என்ற பெயரில் இந்நூல் வெளிவந்துள்ளது.
விசயம் அப்படி ஒன்றும் புதிதல்ல … அமெரிக்க காப்மேயர் முதல் நமது அப்துல் ரஹீம் வரை அரைத்து அரைத்துப்புளித்துப்போன,அதற்கு முன்பே ஊற வைக்கப்பட்ட பழைய அரிசியான "எண்ணம் போல் வாழ்க்கை" என்ற மிக பழைய ஒரு தத்துவத்தை மிகமிக சுவரசியமாக கூறி உள்ளார் ரோண்டா பைர்ன். இவர் அறுபதை கடந்த ஒரு பெண். நாம் மேற்கூறிய குற்றமுள்ள நூல்கள் எல்லாம் ஆண்களால் எழுதப்பட்டவை அல்லது அருளப்பட்டவை. என்று கூறலாம். பெண்களின் பெருமையை பேசுபவர்கள் அந்த வரிசையில் இனி ரோண்டா பைர்னையும் சேர்த்துக்கொள்ளலாம். நான் அறிந்தவரை குற்றமில்லா நூலைப்படைத்தவர் இந்தக் கொற்றவைதான். என்று சொல்ல வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. ஆனால்,அப்படி கூறிவிட முடியாது. ஏனெனில்,உலகை அளித்த மிக முக்கிய காரணிகளில் ஒன்று நேர்மறை எண்ணம். "அதாவது ரோம் எரியும் போது பிடில் வாசித்ததை நேர்மறை எண்ணம் என்று கூறுவது ஒரு வித விதண்டாவாதம் தான் இல்லையா?"
அல்லது அது ஒரு சுயஇன்பம், கையாலாகாத்தனம்,விரக்தியின் உச்சம் என்றும் கூறலாம்.
நேர்மறை எண்ணம் என்பது நமது மதநூல்களிலும் வரலாறுகளிலும் நீண்டு நெடிய வேர்ப்பரப்பி கிடக்கும் மரங்கள். அதன் கனிகள்தான் உலகமயம் முதல் தொடங்கிய அத்தனை மோசடிகளும். இன்று உலகில் காணும் இத்தனை இன்னல்களும் நேர்மறை எண்ணத்தில் விளைந்த விசக்கனிகளே.
" தனியுடமை கொடுமைகள்
தீரத் தொண்டு செய்யடா நீ, தொண்டு செய்யடா …
தானே எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா …
எல்லாம் பழைய பொய்யடா "
என்ற பட்டுக்கோட்டையின் எதிர்மறை எண்ணமே இன்று நிஜத்தில் வென்றுள்ளது. நேர்மறை எண்ணமெல்லாம் வெற்றியாய் விளைந்திருந்தால் இன்று இந்திய மக்களை விட மகிழ்ச்சியாக இருக்கக் கூடியவர்கள் உலகில் வேறு யாருமே இருக்க முடியாது. அணுமின்,மீத்தேன்,ஸ்டெர்லைட் ஆலை,விவசாயிகள் போராட்டம்,தொழில் அழிப்பு,பெருமளவில் தடுப்பு மருந்து இறக்குமதி, மருத்துவ கல்வி மோசடி,அரசியல் லஞ்சம்,ஊழல் அதிகார அத்துமீறல் போன்றவற்றில் சிக்கி சீரழிவதில் இந்தியாவும் குறிப்பாக தமிழகமும் இன்று மற்ற நாடுகளுக்கு உதாரணமாக முன்னோடியாக இருக்கிறது.
நேர்மறை எண்ணத்தை ஏமாந்த எளியவர்களிடம் விதைத்து நம்பிக்கை,உண்மை,உழைப்பு,வெற்றினு கூறிவிட்டு நாம் அசந்த நேரத்தில் வலியவர்கள் தங்கள் முழு பலத்தையும் நம்மீது ஏவி நம்மிடம் எஞ்சியிருந்த வேட்டியையும் உருவிவிட்டனர். இனி உள்ளாடை மட்டுமே மிச்சம். சிவனுக்காகவும்,அல்லாவுக்காகவும் தனது பிள்ளையையே வெட்டி கறிசமைக்க துணிந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆதலால்,அதே நம்பிக்கையோடு, ஈமானோடு நிர்வாணமாக நில்லடா மகனே, உன் கடவுள் பக்திக்காக,தேசப்பக்திக்காக என்று சிலர் நம்மிடம் கூறுகிறார்கள்.
இது போன்ற நயவஞ்சக நேர்மறை சிந்தனையாளர்களுக்கு இன்று நமது செருப்பால் தான் பதில் சொல்லியாக வேண்டும். அல்லது எஞ்சியதையும் உருவி விட்டு நிர்வாணமே பேரின்பம் என்ற பழைய தத்துவத்தை மீண்டும் கூறுவார்கள்.இந்த மாதவி குலத்து மாந்தார்கள்.! ஜல்லிக்கட்டு போராட்டம் போல உரிமைகளுக்கு ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே விடிவு வரும். இதுவே இன்றைக்கு மிக முக்கியத்தேவை.
ரோண்டா பைர்ன் கூறுவதைப்போல ஆட்சியாளர்கள் எல்லாம் திருந்தி வந்து நாட்டின் சுயசார்பை வளர்ப்பார்கள் என்று கனவு கண்டுகொண்டிருந்தால் காவு கொடுக்கப்படுவோம்.!
நானும் ஒரு எழுத்தாளன் தான் தெரியும்ல்ல?
சமீபத்தில் ஆதிமருத்துவம்னு ஒரு நூல் எழுதினேன். நூல் வடிவமைப்பு பணி நடக்கும் போதே … நமது வடிவமைப்பாளர் "என்னங்க, மருத்துவர்,உணவுப்பொருள் விற்பனையாளர்கள்,அரசியல் வாதிகள் என்று எல்லோரையும் திட்டுறீங்களே, ஏதாவது பிரச்சனை வராதானு? கேட்டாரு;
" தம்பி,நாமெல்லாம் தவறு என்று தெரிந்ததால், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமேனு … சிவனின் சிகையையே பிடித்து ஆட்டிய, நக்கீரன் பரம்பரையை சேர்ந்தவர்கள். இந்த சின்னப்புத்தி அரசியல் வாதிகளுக்கா பயப்படுவோம்?
உண்மையை சொல்றோம்,எதிர்ப்பு வந்தால் உண்மையே நின்று வெல்லும் " பயப்படாதீங்கனு சொன்னேன்.
சென்ற இடமெல்லாம் சிறப்பைத்தவிர வெறெதையும் வென்றதில்லை என் எழுத்து. [இப்படி நானும் ரௌடிதான் பாணியில் நமக்கு நாமே அடிக்கடி சொல்லிக்கொள்ள வேண்டும்]
இப்படிச்சொல்லி சொல்லியே இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட இணைய நட்பாளர்களிடம் நம் நூலை விற்றுவிட்டேன். நான்கைந்து நண்பர்கள் மட்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கி தனது நண்பர்களுக்கும் அருகில் உள்ள நூலகங்களுக்கும் அன்ப்பளிப்பாக கொடுத்துள்ளனர்.
இவர்கள் அனைவருமே எனது இதயத்திற்கு மிக நெருக்கமானவர்கள்.எனது அனுபவத்தையும் சிந்தனையையும் உலகில் பரப்புபவர்கள் என்னை நெகிழச்செய்கிறார்கள். ஆம்,எழுதுபவன் விதைக்கிறான்; அதை கற்பவர்களே அறுவடை செய்கிறார்கள்.
இந்தக் குழுவில் [இயற்கை இரகசியம்] ஏறக்குறைய 200 நண்பர்கள் இருக்கிறார்கள். அதில் சில நட்பாளர்கள் நூல் வெளியீட்டில் எனது தாயும்,மகனும் கூட செய்யாத மிகப்பெரிய உதவிகளை செய்துள்ளனர்.ஒரு இருபதுபேர் இந்தக்குழுவில் உள்ள நண்பர்கள் நூலை வாங்கி உள்ளனர். நூலை வாங்கிய மீதி அனைவரும் முகநூல் மற்றும் மற்ற குழுக்களில் உள்ள நட்பாளர்கள் தான். இது எனக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. வசதி இல்லாதவர்கள்,படிக்கும் மனம் இல்லாதவர்களைப் பற்றி ஒன்றும் கவலை இல்லை. ஆனால்,மனமும் பணமும் இருந்தும் வெறுமனே இருக்கும் நண்பர்கள் என்னை வருத்தமடைய செய்கிறார்கள்.
ஆம் நட்பாளர்களே,
உங்கள் அன்பு எனக்கு வேண்டும்,
உங்கள் கருத்து எனக்கு வேண்டும், உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும்,
உங்கள் முயற்சி எனக்கு வேண்டும்,
இயற்கை வாழ்வியல் பயிற்சியில் ,இரசாயண மருந்தில்லாமல் வாழும் முயற்சியில் உங்கள் ஒத்துழைப்பு எனக்கு வேண்டும்.
ஒத்துழைப்பு வழங்காத நட்பாளர்களோடு இயைந்து வெறுமனே இயங்குவது இருந்தும் இல்லாமல் இருப்பதைப் போன்றது. அதனால் பயனொன்றும் இல்லை.
நூல் வெளியீடு முடிந்த அடுத்தநாள்
நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திற்கு சென்று மாதிரிக்கு ஒரு ஆதிமருத்துவம் நூலைக்காட்டி இந்த நூலை சென்னைக்கு அனுப்ப எவ்வளவு ஆகும் என்று கேட்டேன். உடனே அங்கிருந்த ஊழியர் இந்தியா முழுக்க எங்கு அனுப்புவதாய் இருந்தாலும் 35 ரூபாய் ஆகும். என்று கூறியதோடு "இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கிறது? என்று கேட்டார்;
"வேறு எங்கும் கிடைக்காது, நாம்தான் நேரடியாக அனுப்புகிறோம்" என்றதும்; உடனே பணத்தை கொடுத்து நூலை வாங்கிவிட்டார்.
அந்த ஊழியர் … உண்மையில் என் நம்பிக்கையை வானளவு உயர்த்திவிட்டார். என்பதோடு எனக்கு மிகப்பெரிய உதவியையும் செய்துள்ளார். அதன் பிறகும் அதுபோன்றே பல இடங்களில் நூலைப்பார்த்த பலரும் உடனே நூலை வாங்கி என்னைப் பெருமிதப்பட வைத்துள்ளனர்.
உண்மையில் இதுபோன்ற சம்பவங்கள் எனக்கு அளப்பரியா ஆற்றலை வழங்குகிறது.
ஒருநாள் … களியக்காவிளை காவல் நிலையத்தில் இருந்து இரண்டு காவலர்கள் திடீரென்று என் வீட்டுவாசலில் வாகனத்தில் வந்து நிற்கிறார்கள் … பதறிப்போய் என்னவென்று விசாரித்தால் தினமணியில் உங்கள் புத்தக மதிப்புரையைப் பார்த்து எங்கள் மேலதிகாரி ஒருவர் இந்தநூலை வாங்கி அனுப்பி வைக்கக் கூறினார் என்று பணத்தை எடுத்து நீட்டினார்கள். இது மட்டுமில்லை தினமணியில் பிப்ரவரி ஐந்தாம் தேதி வந்த நூல் மதிப்புரையைப் பார்த்து இதுவரை 40 க்கும் மேற்பட்டவர்கள் நூலை வாங்கி உள்ளனர்.தினமணி நூல் அறிமுகப் பகுதியில் எனது முகவரியை மட்டுமே போட்டுவிட்டு கைப்பேசி எண்ணை போடாமல் விட்டுவிட்டனர்.இல்லையென்றால் இன்னும் நிறைய இதயங்கள் ஆதிமருத்துவத்தை உணர்ந்திருக்கும்.
5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த எனது மஹாயோகா நூலைப்படித்த தினமணி குழு, இது ஒன்றும் அவ்வளவு பெரிய நூல் இல்லைனு கூறி, அறிமுகம் செய்ய மறுத்துவிட்டனர்.
ஆனால்,இந்த முறை மிக வேகமாக வெளியிட்டு வாழ்த்தி உள்ளனர்.
இதுபோன்ற நல்ல ஆற்றல்கள் என்னை சூழ்ந்துள்ள இந்த நேரத்தில் ஆதிமருத்துவம் முதல் பதிப்பு நூல்கள் அனைத்தையும் ஜூலை மாதத்திற்குள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.இதை சாதிப்பதின் மூலம் இந்த எளிய மனிதனின் எண்ணம் ஈடேறுவதுடன் ஒகிப்புயலில் பாதிக்கப்பட்ட இன்னும் 4 விவசாயிகள் பயனடையப்போகிறார்கள். நீங்கள் எவ்வளவுப் பெரிய அறிவாளியாய்,நூல் ஆராய்ச்சியாளராய்,நோயாளியாய் இருந்தாலும் கூட நீங்கள் இதுவரை அறிந்துகொள்ளாத, உங்களுக்கு பயன்படும் ஏதேனும் ஒரு வழிமுறை இந்த நூலில் கண்டிப்பாக இருக்கும். இது என்னுடைய வாக்குறுதி.!நமது குழுவில் தொடராக வந்த போது இதில் இல்லாத பல விசயங்களையும் புதிதாக சேர்த்துள்ளோம்.
ஆகையால் நட்பாளர்கள் தங்கள் ஆதரவை வழங்கி நமது பணியை நிறைவுப்படுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.!
ஏற்கனவே ஒரு நூலை வாங்கிய நட்பாளர்கள், வாய்ப்பிருப்பின் மீண்டும் சில நூல்களை வாங்கி நண்பர்கள்,இல்ல நிகழ்வுகள்,நூலகங்களுக்கு பரிசாகவும் வழங்கி நமக்கு உதவலாம். அப்படி செய்தால் மட்டுமே இந்தக் குழுவின் நோக்கமும் நாம் நூலைப் படைத்ததின் நோக்கமும் ஆயிரம் இதயங்களை சென்றுசேரும்.
-ஏகப்பிரியன் DYT
தொடரும் …
aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com
No comments:
Post a Comment