மனதோடுபேசுகிறேன்
8. சமூக ஊடகங்களின்
சரித்திர வெற்றி
நேற்று <21/01/2018> ஆதிமருத்துவம் நூல் வெளியீடு நாகர்கோவில் ரோட்டரி கிளப்பில் வைத்து மிக சிறப்பாக நடைப்பெற்றது.
இதுவரை இதுபோன்ற முயற்சிகளை யாரேனும் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. உண்மையிலேயே இது மிக அற்புதமான நிகழ்வு. சமூக ஊடகங்களின் பொற்காலம் இதுவென்றால் அது மிகையல்ல.
கிட்டத்தட்ட 60 நீளமான பதிவுகளை வாட்ஸ் அப்பிலேயே பதிவு செய்து அதை மீண்டும் தட்டச்சியே செய்யாது, அப்படியே காப்பி செய்து ஒரு புத்தக வடிவாக்கி 384 பக்கங்கள் கொண்ட ஒரு முழுமையான இயற்கை மருத்துவ நூலாக வெளியிடும் வாய்ப்பை எனக்கு வழங்கிய இறைநிலையின் ஆற்றலை நினைத்தால் மிக அதிசயமாக தான் இருக்கிறது. கையில் தேவையான பணமே இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலை இணைய நட்பாளர்களின் உதவியால் மிக சிறப்பாக இன்று நிறைவேறி விட்டது.
நூல் முன்வெளியீடு விற்பனையின் மூலம் மட்டும் இதுவரை இணைய நண்பர்கள் 54 நூல்களுக்கு பணம் செலுத்தி உள்ளனர். இதற்கு நமது முயற்சியும் நெட் கனெக்சனும் மட்டுமே மூலதனம். இதுதவிர நூல் வெளியீட்டிற்காக 1000 நோட்டிஸ் முண்ணனி பத்திரிகையில் மூன்றுநாள் விளம்பரம்,அரங்க வாடகை போன்ற பல்வேறு செலவுகளை செய்தும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டவர்கள் வெறும் 48 பேர்தான். இதில் நமது மாணவர்கள் மற்றும் நலம் விரும்பிகளை தள்ளிவிட்டால் வெறும் 18 பேர் மட்டுமே எட்டாயிரம் ரூபாய்க்கு செய்த விளம்பரத்தால் வந்தவர்கள். விழாவில் மொத்தம் 28 நூல்கள் விற்றுள்ளன. இந்த நிகழ்வின் மூலம் பத்திரிகையில் விளம்பரம் செய்வது ஒரு வீண்வேலை என்பது நிரூபணமாகிவிட்டது.சென்னையில் இருந்து கிளம்பிவிட்டேன் மதுரையில் இருந்து வந்து கொண்டுள்ளேன் என்று கூறிய; பல இணைய நண்பர்களும் இன்னும் நம்மை வந்து சேரவில்லை.ஒருவேளை நாகர்கோவில் என்று கூறியதால் நாகராஜா கோயிலுக்கு போய்விட்டார்களோ, அல்லது அரசு பேருந்து கட்டணத்தை மிக அதிகமாக ஏற்றிவிட்டதால் பாதியில் இறங்கி பரிதவித்து நின்றுவிட்டார்களோ? என்னவோ.!
அது போலவே இந்த நிகழ்வின் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வைத் துவங்கி வைக்க அழைத்திருந்த அம் யோகா டிரஸ்டின் நிர்வாகி இராஜவர்மன் அவர்கள் நிறைவு பகுதிவரை வரவேயில்லை. ஏதோ அவசர வேலையாய் போய்விட்டார் போல. புத்தகத்திலும் கூட சில இடங்களில் பிரிண்டிங் கோளாறு காரணமாக, லேசான கருமை படிந்திருக்கிறது.
வழக்கம் போலவே என்னால் மட்டுமே செய்யப்பட வேண்டிய அனைத்து செயல்களையும் என்னால் சிறப்பாக செய்ய முடிந்தது. K.பிரகாஷ் அவர்களும் அவசரகால உயிர் மீட்கும் பாதுகாப்பு பயிற்சிகளை மிகமிக சிறப்பாக நடத்தி தந்தார்கள்.மற்றவர்கள் அவரவர் கடமையில் சற்று சுணக்கம் காட்டிவிட்டனர்.
எனினும் திருமதி குமுதா சண்முகம்,திருமதி மைதீன் பீவி இஸ்மாயில்,செல்வி நவ்யா ஆகியோர் விளக்கேற்றி வைக்க பதஞ்சலி,அகத்தியர்,திருமூலர் துணையுடன், K.பிரகாஷ்,யோகா ஆசிரியர் கண்ணன்,டாக்டர்,ஹரீஷ்,திரு அருண் சேவியர்,அன்னைஆஸ்ரமம் சுகுமாரன் அய்யா,திரு மணிகண்டன் மற்றும் திரு ரபீக் குடும்பத்தினரின் ஆதரவுடன் விழா மிகமிக சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்வின் இதயமாக இணைய நூல் விற்பனை மற்றும் நண்பர்களின் உதவியால்,லீசுக்கு வாழை விவசாயம் செய்து ஒகிப்புயலில் பாதிக்கப்பட்டு தனது வாழ்வாதாரத்தை இழந்த அழகிய பாண்டியபுரம் விவசாயி முருகன் என்ற பத்மநாபனுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரண உதவியை வழங்கியதோடு, அவரிடம் இயற்கை முறையில் விவசாயம் செய்யவும் நமது அறக்கட்டளை சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது.
தமிழக யோகாசன சாம்பியன் நவ்யாவின் கலக்கல் ஆசனங்களுடன் இயற்கை மருத்துவ வழிமுறையால் பயனடைந்தவர்களின் அனுபவப் பகிர்வோடு விழா மிகமிக சிறப்பாக நிறைவு பெற்றது.
சமூக ஊடகத்தின் மூலம் ஏற்றப்பட்ட ஆதிமருத்துவம் என்னும் இந்த இயற்கைப் பேரொளி உலகையெல்லாம் ஒளிரச்செய்ய இதே வேகமாக கிளம்பிவிட்டது ….!
எல்லோரும் இன்பம் பெறுக.!
எல்லோரும் அமைதி பெறுக.!
எல்லோரும் ஆனந்தம் பெறுக.!
எல்லா உயிர்களும் மேன்மையடையட்டும் …!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …
தொடருவேன் …
-ஏகப்பிரியன் DYT
ஆதிமருத்துவம் நூல் தேவைக்கு அழைக்கவும்
M&W 9629368389
aumherbals.blogspot.com
amyogatrustblogspot.com
No comments:
Post a Comment