மனதோடு பேசுகிறேன்
7.ஏட்டுக்கல்வி
கூட்டுக்கு உதவும்
பலநூறு நூல்களை கற்றாலும் தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது.
பல்லாயிரம் பேருக்கு போதித்தாலும் எழுத்தாய் வடிக்காத ஞானம் யாருக்கும் உதவாமல் போகும்.
நாம் கல்லூரியில் கற்றுவரும் மருத்துவம்,விஞ்ஞானம்,கட்டுமானம்,பொறியியல்,,கேட்டரிங்,டிசைனிங் முதல் பாதுகாப்பு, திரைப்படக்கல்வி வரை அனைத்தையும் எழுத்தாய் வடித்தவர்கள் வெளிநாட்டுக் காரர்கள்தான். அவர்களின் உழைப்பின் பயனாகவே நாம் இன்று அனைத்து துறையிலும் மேற்கத்திய நாடுகளை சார்ந்திருக்கிறோம்.நம்மிடம் யோகா,ஆயுர்வேதம்,ஜோதிடம்,சித்த மருத்துவம்,வர்மக்கலை,இலக்கிய நூல்கள்,புராண நூல்கள் போன்றவையே உள்ளது. இவற்றிலும் முன்னோர் வழியை ஆராய்ந்து அதை நவீனப்படுத்தி, அனைவருக்கும் பயனளிக்கும் கல்வி முறையாகவோ வாழ்க்கை முறையாகவோ நமது முன்னோர்கள் வடிக்கவில்லை.கல்லணையையும் பல கோவில்களையும் எப்படி கட்டினார்கள் என்று நமக்கு இன்னும் கூட தெரியாது. ஆனால்,வெளிநாட்டினர் தங்கள் திறமையால் கட்டுமானத்துறையில் ஆர்க்கிடெக்,இன்டீரியர் டெக்கரேசன் போன்ற பல புதிய துறைகளையும் உருவாக்கி உள்ளனர். விருந்தோம்பல் உணவு பதப்படுத்தல்,அறுசுவை உணவை தயாரித்தல். உணவை மருந்தாக மாற்றுதல் என்று உணவைப் பற்றிய உண்மைகளை உரைக்காத தமிழ் இலக்கிய நூல்களே இல்லை. ஆனால், வெளிநாட்டுக்காரனோ சமையலை ஒரு படிப்பாக வடிவமைத்து கேட்டரிங் டெக்னாலாஜி என்று பெயர் வைத்து இந்திய தட்ப வெப்பத்திற்கு ஒவ்வாத பல உணவுகளை சமைக்க நமது மாணவர்களுக்கு கற்பித்து வருகிறான் வெள்ளைக்காரன். மருத்துவத்துறையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய துறைகளை புகுத்தி உள்ளதோடு இன்னும் ஒவ்வெரு உறுப்பிற்கும் ஒவ்வெரு நோயிற்கும் தனித்தனி துறைகளை உருவாக்கி வருகிறார்கள்.அதுபோலவே அழகு,நாகரீகம் என்று எத்தனையோ தலைப்புகளில் வர்த்தகம் செய்ய புதிய புதிய வழிமுறைகளை அவர்கள் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த களோபரத்தில் கழிவுகளை நீக்கினால் அனைத்து நோய்களும் குணமாகிவிடும். என்று;சொன்ன அகத்தியனையும் அறம் முதல் அரசியல் வரை அத்தனையையும் தொகுத்தளித்த வள்ளுவனையும் நாம் மறந்துவிட்டோம். நாம் இன்று படித்து வரும் அரசியலும் சட்டமும் கூட வெளிநாட்டினரின் அடியேற்றி தயாரிக்கப்பட்டவை தான். ஆனால் தற்போது இந்த முறைகளை எல்லாம் காலாவதி ஆக்கிவிட்டு, அவர்கள் வேறு புதிய முறையில் அரசியல் சட்டங்களை தயாரித்துக்கொண்டனர். நாம் இன்னும் அவர்களின் அடியையே பின்பற்றி வருகிறோம். இன்றைய இந்திய சூழலுக்கு ஏற்ற புதிய அரசியல் சட்டத்தை இயற்ற நமக்கு போதுமான அனுபவ ரீதியான, ஆய்வு ரீதியிலான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை. அதன் காரணமாகவே மத்திய அரசு தனது மனம் போன போக்கில் பல புதிய சட்டங்களை போட்டு மக்களை மொத்தமாக வதைக்கிறது.நம்மில் பலரும் யார் எதை எழுதுவதாய் இருந்தாலும் நாலு வரியில் சுருக்கமாக எழுதி விடுங்கள். எங்களால் நீளமாக படிக்க முடியாது என்கிறோம். ஆனால்,நமது பிள்ளைகளோ கல்லூரியில் வெள்ளைக்காரன் தயாரித்த பல்லாயிரம் பக்கங்கங்கள் கொண்ட தியரிகளை தினம் தினம் படித்து படித்து பைத்தியமாகி வருகிறார்கள்.ஆனாலும் அவர்கள் நாளை பல்கலை கழகம் மூலம் பட்டம் பெற்று தங்கள் துறையில் ஒரு அங்கீகாரம் பெறுவார்கள். கல்லூரி படிப்பு என்பது - உயரமான மரம் … அதில் நிறைய கிளைகள் உள்ளது.அதில் அழகான பலப்பல பழங்கள் காய்த்து தொங்குகின்றன, பல்வேறு பறவைகள் வந்து அந்த மரத்தில் உள்ள கனிகளை புசித்து ஓய்வெடுக்கின்றது. ஆனால்,விதை வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது. பல இந்தியப் பறவைகளுக்கு அவை விசமாக மாறவும் கூடும்.
என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
ஆனால்,நூலறிவு இல்லாத எந்த கல்வியும் கலையும் முழுமைப்பெறாது. "ஒரு குரு ஆயிரம் முறை ஒரு விசயத்தை நுட்பமாய் கற்பித்தாலும் ஒரு சிலருக்கு அது புரியாது. அதையே ஒரு நூலாசிரியர் ஐந்து நிமிடத்தில் எளிதாக புரிய வைத்து விடுவார்.அது போலவே ஆயிரம் நூல்களை பல ஆண்டுகள் முறையாக ஓதினாலும் சிலருக்கு அதன் உள்ளர்த்தம் விளங்காது. ஒரு குரு அதை ஒரு நிமிடத்தில் எளிதாக விளக்கி விடுவார் " இதன் காரணமாகவே நமக்கு பலதுறை வல்லுனர்களின் நேரடி உதவியும் பல முன்னோடிகள் எழுதிய நூலின் உதவியும் தேவையாய் இருக்கிறது. இரண்டும் சேர்ந்தால் மட்டுமே நம்மால் முழுமையான உண்மையை உணர முடியும். அதோடு நேரில் கற்பதை விட ஏட்டுப்பிரதி ஒரு படி மேல் எப்படியெனில், மறக்கும் இயல்புடைய மனிதன் கற்றதை மீண்டும் மீண்டும் தெளிவுப்படுத்த ஏடுகளே தேவையாய் இருக்கிறது.
அது போலவே ஒரு துறையில் ஒருவர் பெற்ற நிபுணத்துவத்தை உணர்த்தவும், ஏட்டில் எழுதி அதை நூலாய் வெளியிடுவதே சான்றாய் விளங்குகிறது.
ஹீலர் பாஸ்கர் அவர்கள் …தனது அனடாமிக் தெரபி நூலில், நமது மருத்துவ முறையில் சந்தேகம் இருப்பவர்கள் அனைவரும் முதலில் இந்த நூலை முழுவதும் படித்து விட்டு, பிறகு விளக்கம் கேட்டால் மட்டுமே கூறப்படும். அல்லது நமது ஆடியோவையாவது திரும்பத் திரும்ப கேளுங்கள் அப்பொழுது, நாம் கூறும் செவிவழி தொடுசிகிட்சை உண்மை என்று உங்களுக்கே விளங்கிவிடும். அப்படி படிக்காமல்,கேட்காமல் நம்மிடம் கேள்வி கேட்டால் அவர் எவ்வளவு பெரிய மருத்துவராய் இருந்தாலும் அவருக்கு நாம் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. என்று கூறி உள்ளார். மருந்தில்லா மருத்துவ முறைகளை கிளிப்பிள்ளைகளைப் போல பலரும் ஒப்பித்து வந்தாலும் கூட அவர்களில் யாரும் இவ்வளவு பெரிய நூலை வெளியிடவில்லை. அதனால் இந்த கிளிப்பிள்ளைகளுக்கு அலோபதி மருத்துவ முறையினரிடமிருந்து எதிர்ப்பு வரும்போது, அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாமல், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடிப்போய் சிற்றின்ப சாகரம் தெரியுது பாருங்கள்,குபேரனாகலாம் வாருங்கள். என்றெல்லாம் வேறு பல தலைப்புகளில் வகுப்பெடுத்து காலத்தை ஓட்டுகிறார்கள்.
இப்படி புத்தகங்கள் அறிவுக் களஞ்சியங்களாக மட்டுமே இல்லாமல், வேல் கொண்டு துரத்தும் எதிரிகளின் கொட்டத்தை அடக்கும் ஆயுதமாகவும் இருக்கிறது.எனவே நீண்ட நூல்களை படியுங்கள்,உங்கள்துறை சார்ந்த நீண்ட நூல்களை படையுங்கள்.அதுவே இன்றைய வெற்றிக்கும் எதிர்கால இந்தியாவின் வாழ்விற்கும் வழிகாட்டி ஒளியேற்றுவதாய் இருக்கும்.!
நலம் பெருகட்டும் …
இன்னும் பேசுவேன் …
-ஏகப்பிரியன் DYT
amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com
No comments:
Post a Comment