சமூக ஊடகங்களில் உள்ள மிகப்பெரிய குறை
எதையும் இயல்பாக சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள் என்பதால் பல மருத்துவ,மத,அரசியல் பதிவுகளில் 30% உண்மையில் 70% பொய் கலந்து மிக மிகையாக கூறுவார்கள். அதையும் இங்குள்ள அறிவாளிகள் பலரும் போட்டிப்போட்டு மீண்டும் மீண்டும் பகிர்வார்கள். இது மிகப்பெரிய சமூகக் கேடுகளை ஏற்படுத்துகிறது.
இதை தவிர்க்க எந்த விதமான பதிவாய் இருந்தாலும், உடனே இதை பகிருங்கள் என்று போட்டிருக்கும் எதையும் பகிராமல், 100% உண்மை என்று தெரிந்த விசயமாய் இருந்தால் மட்டுமே பகிருங்கள். இப்படி செய்தால் மட்டுமே பல ஆண்டுகளாக சுழற்சியில் இருக்கும் மருத்துவ,அரசியல்,மத பொய் கலந்த குப்பைகள் காலாவதியாகும்.!
*எப்பதிவு எந்தெந்த குழுவில் வந்தாலும் அப்பதிவின் மெய்ப்பொருள் என்னவென்று ஆராய்ந்து பகிர்வதே அறிவு*
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
உண்மை ஐயா நன்றி
ReplyDelete