சூரியக் குளியல்
---------------------
கதிரவனின் வெப்பம் ஒருலட்சத்து அம்பதாயிரம் மைல் வேகத்தில் பூமியை நோக்கி வருகிறது.!
உலகின் மலர்ச்சிக்கும் விடியலுக்கும் கதிரவனே காரணமாய் இருக்கிறது.!
மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் இயக்கத்தில் மிக முக்கியமானது பித்தம் என்றழைக்கப்படும்
சூரியசக்தி.!
மனித உடலில் பித்தத்தின் இயக்கம் சீராக இல்லையெனில்
மனிதன் கோழையாவன். பல்வேறு உடல் பிணிகள் ஏற்படும். இவ்வளவும் ஏன் சூடாக இயங்கும் உடலைத்தான் மனிதன் என்கிறோம்.! குளிர்ந்த உடல் பிணத்திற்கு சமம்.! சூரியன் மூலம் வரும் வெப்ப சக்திக்கு இத்தனை வல்லமை இருந்தாலும் ஆதிகாலந்தொட்டே அதிக உஷ்ணசக்தியை கண்டு உலக மனிதன் அஞ்சியே வாழ்ந்துவருகிறான்.!
ஆனால் நமது முன்னோர்கள் சூரியநமஸ்காரம் என்ற ஒன்றை கண்டறிந்து சூரியனின் ஆற்றலை உடலுக்குள் கிரகிக்கவும் அதன்மூலம் உடலில் உள்ளத் தேவையற்ற கழிவுகளை எரிக்கவும், கட்டிகளை கரைக்கவும், தோலை மெலனின் பகுதியால் உறுதியான கவசமாக்கவும் எலும்பை வலிமையான கேடயமாக்கவும் கதிரவனோடு இயைந்து வாழ்ந்துவந்தனர்.! இதே பலன்களை பிறகு தன் ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்த வெளிநாட்டினர் சூரிய ஆற்றலை தன் உடலில் கிரகித்துக் கொள்வதற்காகவே சூரியக்குளியல் என்ற ஒன்றை கண்டறிந்து பயன்படுத்தி வருகிறார்கள்.! இன்றைக்கும் உலகில் தட்பவெப்ப மாறுதல்களால் அதிகம் பாதிப்படையாமல் இயங்கும் நாடுகளில் நமது பாரதமே முதன்மையானது அமெரிக்கா, இங்கிலாந்து, அரேபியா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் வெயில் என்றால் கொடுர வெயில் பனி என்றால் நடுங்கவைக்கும் பனி வீட்டின் உள்ளேயே கம்பளிகளைப் போட்டுக் கொண்டால்தான் வாழ முடியும் என்ற நிலை. ஆனால், நாமோ அதிகமான மார்கழிப் பனியில் அதிகாலையிலேயே பஜனை பாடிவிட்டு சித்திரையின் சுட்டெரிக்கும் வெயிலில் தேர்த்திருவிழாவும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.!
கதிரவன், வாயு, வருணன் அனைவரையும் தேவனாக்கி பலரும் பூஜையும் செய்துவருகிறார்கள்.! இது சிலருக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் இவர்களா கடவுள் என்று எகத்தாளமாகவும் இருக்கிறது.! ஆனால், நமது நாட்டுக் கலாச்சாரத்தில் உள்ள ஒவ்வெரு அசைவிலும் பல ஆயிரம் உடல், மன, இயற்கையின் இரகசியங்கள் மறைந்திருக்கிறது.!
ஆகையால் கொடை வெப்பத்தை பார்த்து யாரும் பயப்படவே தேவையில்லை. அதிகாலையில் எழும் பழக்கமும் வெயிலில் உலாவும் பழக்கமும் இருப்பவர்களுக்கு கோடை நோய்கள் வரவே வராது.!
அதிகாலை இளம்வெயிலில் குறைந்த ஆடையுடன் தினமும் ஆறு முதல் பனிரெண்டு சுற்றுகள் வரை சூரியநமஸ்காரம் <யோகாசனம்> செய்பவர்களுக்கு எந்த கொடை வியாதியும் வரவே வராது.! இதுமட்டுமல்லாமல் சிறுநீரகச் செயலிழப்பு, கிட்னிகல், பித்தப்பைகல், கண்கட்டி, தோல்நோய், புற்றுநோய்,இளநரை, எலும்பு அடர்த்திக்குறைவு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்தக் கொடை ஒரு வரப்பிரசாதம்.! நல்ல மண்பானை நீரை மூன்றுடம்ளர் வரை குடித்துவிட்டு வெறுமனே கடற்கரையில் தினமும் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை உள்ள நேரத்தில் ஏதேனும் ஒரு 30 முதல் 60 நிமிடம் சூரியக் குளியல் செய்தாலே போதும் உடலின் புதிய பரிமாணம் விளங்கும்.! அதைவிடுத்து கோடைகாலம் ஏசியிலேயே இருக்கவேண்டும், முகத்தில் கிரீம் போட்டுக்கொள்ள
வேண்டும், வெயிலில் வெளியே போகக்கூடாது என்று இருப்பவர்க்கு மட்டுமே அத்தனை வியாதிகளும் வரும்.! இப்பவே கோவா, கோவளம் , கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு பல வெளிநாட்டினர் வந்து குவிகிறார்களாம்.!
நாம் ஏற்கனவே தொடர்ந்து மூன்றுநாள் மொட்டை மாடியில் யோகாசனம் உட்பட சூரியநமஸ்காரம் தினமும் இரண்டுமணி நேரம் செய்தாயிற்று.!
இனி இந்தக் கொடை முழுவதும் எத்தனை டிகிரி வெப்பம் ஏறினாலும் எனது உடலின் வெப்பம் சீராகவே இருக்கும்.!
யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.!
நலம் பெருகட்டும் …
http://amyogatrust.blogspot.inhttp://aumherbals.blogspot.in
மே 5,6,7 மூன்று நாள் இயற்கை வாழ்வியல் முகாமில் கலந்துகொள்ள தொடர்பு கொள்ளவும்.!
mobile & whats App9629368389
No comments:
Post a Comment