I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: ஒரு மூலிகை இருந்தால் 500 நோய்களை குணப்படுத்தலாம்

Wednesday, 5 April 2017

ஒரு மூலிகை இருந்தால் 500 நோய்களை குணப்படுத்தலாம்

*உயிர் மீட்கும் மருத்துவம்*

12. மூலிகை அறியா மூடர்கள்

ஒன்றை தெரிந்தவன்
நூறை தெளிவான்
நூறை தெளிந்தவன்
ஒன்றையே தெரிந்தவனாவான்
ஆயிரம் வேரைக் கொன்றவன்
அரை வைத்தியன் தான்
ஓருயிரை வளர்ப்பவனோ
முழு வைத்தியனாவான்.!

வாதம்,கபம், பித்தம் இந்த மூன்றில் அடங்கியதுதான் சித்தர்கள் வகுத்த 4448 வியாதிகளும்.!
மூன்றின் குற்றத்தால் தோன்றும் மொத்த வியாதியையும் ஒத்த மூலிகையின் மூலம் குணப்படுத்தலாம்.!
இலைபாரு காய்பாரு வேர்ப்பாரு பற்பச் செந்தூரம் பாரேன்
என்பது சித்தமொழி.
இலையில் நோய் குணம் காணவில்லை எனில் அடுத்தடுத்து காய்,வேர்,பற்பம், செந்தூரம் அதிலும் குணம் காணவில்லை எனில் உயிர்ப் பிராணிகள்  கோழி, முயல்,அணில்,குருவி போன்ற ஜீவன்களை மருந்தாக மாற்றி அதனோடு பற்பம் லேகியம் போன்றவற்றையும்  சேர்த்து நோயை குணமாக்குவது சித்த முறை.  இன்று நாம் உணவைப் பதப்படுத்தவே பல இரசாயணங்களை சேர்க்கிறோம்.!
ஆனால், அப்படி எதையும் செய்யாமல் பல்வேறு விதமான புடமிடுதல்,சுத்திகரித்தல்,புதைத்து வைத்தல், மண்ணால் மூடி எரித்தல் போன்ற பல நுட்பங்களை பயன்படுத்தி மருந்துகளை
பல மடங்கு வீரியம் கொண்டதாகவும் பல ஆண்டுகள்  கெட்டுப் போகாததாகவும் மாற்றினார்கள் முன்னோர்கள்.!
இன்றைக்கு இது போன்ற முறைகளை மிகச் சிலரே சரியாக செய்கிறார்கள்.!
முன்பெல்லாம் பற்பங்களை ஏதேனும் மருந்தில் பொதிந்து அப்படியே முழுங்கக் கூறுவார்கள். எனெனில் இது பல்லில் பட்டால் பல் கரைந்துவிடும்.! கல்லடைப்பு,சதையடைப்பு,கட்டி போன்றவையும் தீராத நோய்களும் பற்பங்களால்
தீரும்.!
இன்னும் சில ஆஸ்ரமங்களில் உள்ள சாமியர்கள்  திருநீரில்  ஒரு சில பற்பங்களை கலந்து வைத்துக் கொண்டு அதை மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு கொடுத்து நோய்களை குணப்படுத்து கிறார்கள்.! நம்மிடம் சமீபத்தில் யோகா பயில வந்த கலைவாணி என்ற பெண் "நான் முன்பு கால்கள் வீங்கி நடக்க முடியாது சிரமப்பட்டதோடு அனைத்து இணைப்பு எலும்புகளிலும் கடுமையான வலியால் அவதிப்பட்டேன்.
அலோபதி மருத்துவம் பல மாதங்கள் பார்த்தும் எந்த பயனும் இல்லாது போக இறுதியில் ஒரு சாமியார் கொடுத்த திருநீரை எலுமிச்சம் பழச் சாறு கலந்து குடித்ததோடு இரண்டு மாதங்கள் கேழ்வரகு,கம்பு போன்றவற்றில் செய்த கஞ்சிகளை மட்டும் குடித்து குணம் பெற்றதாக கூறினார்." அவர் உடலில்  மிஞ்சியிருந்த  பிடிப்பையும் யோகா சீராக்கிவிட்டது.!
எனக்கு அப்பொழுதுதான் தேவி என்ற எனது பழைய மாணவி ஒருவரின் நிணைவு வந்தது. அவருக்கும் இப்படித்தான் வாதநீர் இணைப்பு எலும்புகளில் புகுந்ததால்  23 வயதிலேயே சுயமாக எழுந்து நிற்கவோ,நடக்கவோ முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டார். ஆங்கில மருத்துவம் மட்டுமல்லாது பிசியோதெரபி, வர்மா,அக்குப்பஞ்சர் போன்ற அனைத்து  முறைகளையும் பார்த்து இறுதியில் யோகா & இயற்கை வாழ்வியல் பயிற்சிக்கு  நம்மிடம் அழைத்து வந்தனர்.!
நமது முறைகளை பின்பற்றி சுயமாக அவர் குழந்தையை தூக்கிக் கொண்டு   மாடிப்படியில் ஏறும் அளவிற்கு தேறிவிட்டார்.! இயற்கை உணவு முறையோடு தினமும்
வல்லாரைச் சாறும்  குடித்துவந்தார்.! ஆனாலும், காலையில் விழித்தவுடன் உடனே எழுந்து அமர முடியாது கைகால்கள் இறுக்கமாகி கடுமையான வலி இருக்கும்.  பிறகு அரைமணி நேரம் வரை வலியைப் பொருட்படுத்தாது உடல் தளர்வு  பயிற்சி செய்தால் மட்டுமே எழ முடியும்.!  முழுவதும் குணமாக்க நண்டுக் கொழுப்பில் ஒரு எண்ணைய் செய்து பயன்படுத்தக் கூறினேன்.! அதை அவர் செய்யாமல் நம்மிடம் அந்த மருந்தை செய்து கேட்டார்.! <நானோ உயிர்களை கொல்வதில்லை என்ற விரதத்தில் இருந்தேன்>
சரியென்று நம்மால் 90% தான் அவரின் பிணியை நீக்க முடிந்தது. என்று ஒதுங்கிகொண்டேன்.!
கலைவாணி தனது திருநீர் அணுபவத்தை கூறிய போதுதான்.!
பற்பங்களை நாமும் பயன்படுத்தி முன்பு தேவிக்கு முழுமையான குணத்தை கொடுத்திருக்கலாமோ.! என்று தோன்றியது.! சித்த மருத்துவ முறையில் திருநீர் கலந்த பற்பம் போல பல அறிய இரகசியங்கள்  அடங்கியுள்ளது.!
பற்ப செந்துர பயன்களை பற்றிய முழுமையான நூல் குறிப்புகள் இல்லை.!
அதை தயாரிக்கும் முறைகள் மட்டுமே கிடைக்கிறது.!
சில கடைகளில் வாங்கும் பற்பச் செந்துரங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவே உள்ளன.!
செந்தூரம் என்றால் பலச் செந்தூரங்கள் காவிமண் போலவும் பற்பம் என்றால் நன்றாக அரைத்த மாவைப்போலவும் உள்ளது.! சில பற்பச் செந்தூரங்கள் கிடைப்பதில்லை. அது போலவே ஒருநாள் ஒரு கடையில் பிரண்டை உப்பு கேட்டால் பிரண்டை சாம்பல் தான் கிடைத்தது.! <அதுதான் உப்பென்றார்கள்> அதுவும் அந்த உப்பு அடுப்புச்சாம்பல் போன்றே இருந்தது.!
எதற்காக கூறுகிறேன் என்றால்   இப்பொழுது சித்த மருந்து தயாரிப்பிலும் அவ்வளவு சிரத்தையாக யாரும் ஈடுபடவில்லையோனு தோன்றுகிறது.!
பல்வேறு மருத்துவ முறைகளால் கைவிடப்பட்ட  நாள்ப்பட்ட பல நோய்களுக்குத் தீர்வு சித்தாவில்
உள்ளது.! சித்த மருத்துவத்தின் நிலையோ இப்படி இருக்கிறது.!
அது போலவே  B.S.M.S படிப்பவர்களுக்கு சித்த ஞானத்தை விட அலோபதி மருத்துவம் சார்ந்த உடலியல்  கோட்பாட்டையே அதிகம் போதிக்கிறார்கள்.!
இதுவும் ஒரு பெரிய பின்னடைவு.!
இந்திய மருத்துவ முறையில் அங்கீகாரம் பெற்ற மருத்துவம் ஐந்து மட்டுமே A ஆயுர்வேதா Y யோகா
U யுனானி S சித்தா
H ஹோமியோபதி
இவையெல்லாம் சேர்த்துதான் AYUSH என்று இந்திய தேச மருத்துவ துறைக்கு பெயர் வைத்துள்ளனர்.!
ஆனால், பல்வேறு அங்கீகாரம் இல்லாத மருத்துவ முறைகள் 
தோன்றிகொண்டே உள்ளன.! இதில்  அக்குப்பஞ்சர்  மருத்துவ முறை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.! பல அக்குப்பஞ்சர் மருத்துவர்கள் உண்மையிலேயே
இயற்கை முறைகளை பயன்படுத்தி சில நோயாளிகளை குணப்படுத்துகிறார்கள். ஆனால், இவர்களுக்கும் நமது மூலிகைகளைப் பற்றியும் யோகாவைப் பற்றியும் பெரிதாக ஒன்றும் தெரியாது.!
நோயாளிகளிடம் அலோபதி மருந்து மாத்திரைகளை தடாலடியாக நிறுத்துவதற்கு  பல ஹீலர்கள் பரிந்துரைக்கிறார்கள்.! ஆனால், அதற்கு மாற்றாக இயற்கை வாழ்வியலோடு  யோகா மற்றும் மூலிகைகளையும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று கூற
மறந்து விடுவதால்
இரத்த அழுத்தம், சக்கரை போன்ற வியாதியால் பாதிக்கப்பட்ட பலர்
பாதிக்கப் படுகிறார்கள்.!
இன்னும் காலில் அடித்தால்  இதய அடைப்புப் போகும், சிரித்துக் கொண்டே இருந்தால் இரத்தஅழுத்தம் குணமாகும்.! என்று பலமுறைகள் இன்று புதிதுபுதிதாய் வந்த வண்ணம் உள்ளன.!
இவையெல்லாம் உண்மையில் நோயைத் தீர்க்காது அதிகப்படுத்தவே செய்யும்.!
ஏனெனில் பிணியை நீக்குவதற்கும்  ஆரோக்கியமாய் வாழ்வதற்கும்
நமது பாட்டன் கூறிய ஒரு முறையே போதும்.!
நூறு முறைகள் தேவையில்லை.!
ஒரே ஒரு துளசி 500 நோய்களை குணமாக்கும்.! ஆனால், இதை நோயாளிகள் மறந்துவிடுவதால்
எங்கெங்கோ தீர்வு தேடி அலைந்து பாதம் தேய்வதோடு இறுதியில் எதிலும் குணம் கிடைக்காமல் பலர் ஏமாந்து போகிறார்கள் ….!

தொடருவேன் …

-ஏகப்பிரியன்

amyogatrust.blogspot.in

AUM HERBALS
Mobile & Whats App
9629368389

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான&#127919;தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...